- வணிக விசேடத்துவம், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான பங்களிப்பிற்கு விருது
- CDB நிறுவன முகாமைத்துவத் திறன் விசேடத்துவத்திற்கு விசேட பாராட்டு
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய வணிக விசேடத்துவ விருதுகளில் (National Business Excellence Awards 2025), வங்கி அல்லாத நிதிச் சேவைத் துறையின் வெற்றியாளராக Citizens Development Business Finance PLC (CDB) நிறுவனம் எட்டாவது வருடமாக வெற்றி வாகை சூடியுள்ளது. அத்துடன், நிறுவன முகாமைத்துவத் திறன் விசேடத்துவத்திற்காக விசேட பாராட்டு விருதையும் (Merit Award) CDB நிறுவனம் வென்றுள்ளது. இந்த இரண்டு கௌரவங்களும், ஒரு நிலையான நிதி நிறுவனம் என்ற வகையில் வணிக விசேடத்துவத் தன்மையில் தொடர்ச்சியாக முன்னணி வகிக்கும் CDB நிறுவனத்தின் தலைமைத்துவத்தையும், அதன் ஒப்பற்ற சேவை தொடர்பான கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.

நிறுவனத்தின் குழுவினரால் வணிக விசேடத்துவத்தை நிலையாக பேணுவதற்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள், நிதி உள்ளடக்கத்தை விரிவுபடுத்தும் செயற்பாடுகள் மற்றும் பசுமை பொருளாதார முன்னேற்றங்களை முன்னெடுக்கும் பணிகள் ஆகியன அதன் பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளை பலப்படுத்துவதாக, CDB நிறுவனத்தின் பிரதி பிரதம செயற்பாட்டு அதிகாரி தமித் தென்னகோன் பாராட்டினார். “எமது பயணத்தின் ஒவ்வொரு படியையும் உறுதியுடன் எடுத்து வைக்க எமக்கு வலிமையையும், ஆதரவையும் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் வழங்குகின்ற, எமது குழுவிலுள்ள ஒவ்வொரு உறுப்பினர்கள், வணிகக் கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “தொழில்நுட்பத்தையும், நிலைபேறான தன்மையை மையமாகக் கொண்ட புத்தாக்கம் கொண்ட நிதிச் சேவை வழங்குநர் எனும் வகையில், பல்வேறு பிரிவுகளிலான வணிக விசேடத்துவத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் CDB நிறுவனம் வணிக விசேடத்துவத்தை வெற்றி கொண்டிருப்பதோடு, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்களிப்வை வழங்கி வருகிறது.” என்றார்.
இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான தேசிய வணிக விசேடத்துவ விருதுகள் (NBEA) மூலம், நிறுவனங்களின் வணிக திறமைக்கான அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. நாடு வரலாற்றில் மிகவும் சவாலான காலகட்டங்களை சந்தித்த நிலையிலும் CDB இன் வணிக விசேடத்துவம், நிலைபேறான வணிக மாதிரிகள், வணிக நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் நிறுவனம் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இவ்விருதுகளை வென்றுள்ளது.
பல்துறை நிறுவனங்களிலிருந்து வந்த விண்ணப்பங்கள், ஏழு விடயங்களின் அடிப்படையில், புகழ்பெற்ற நடுவர் குழாமினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. தலைமைத்துவம், பெருநிறுவன ஆளுகை மற்றும் யுத்தி, திறன் விருத்தி, செயல்திறன் முகாமைத்துவம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைக்கான அணுகல், சுற்றுச்சூழல் சமூக ஆளுகை, வணிக மற்றும் நிதி முடிவுகள் ஆகிய 7 விடயங்களிலான வணிக விசேடத்துவமே அவையாகும்.“இந்த ஏழு பிரிவுகளிலும் நாம் வலிமையுடனும் சுறுசுறுப்பாகவும் உள்ளோம்.” என தமித் தென்னக்கோன் சுட்டிக் காட்டினார். “ஒரு நிறுவனத்தின் தங்குதடையற்ற, திறமையான மற்றும் வெளிப்படையான செயற்பாடுகளுக்குத் தேவையான ஒழுங்குமுறை நடைமுறைகள், முதலீடுகளை ஈர்ப்பதிலும் பங்குதாரர்கள் மற்றும் பங்குதாரர்கள் அல்லாதோரின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், பங்குதாரரின் மதிப்பை உயர்த்துவதிலும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை என நாம் நம்புகிறோம்.” என்றார்.