அண்மையில் நடைபெற்ற 26வது தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் – NBQSA 2024 இல் SLIIT நிறுவனம் சரித்திர வெற்றிபெற்று சிறந்த செயல்திறனாளராகப் பிரகாசித்தது. கடந்த பல ஆண்டுகளாக புதுமையான திட்டங்கள் மற்றும் பல மதிப்புமிக்க விருதுகளால் SLIIT முன்னோடியாகத் திகழ்கின்றது. இந்த வருடம் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல விருதுகள் உள்ளடங்கலான விருதுகளை SLIIT தனதாக்கிக் கொண்டுள்ளது.
வருடாந்தம் நடைபெறும் பெருமைக்குரிய இந்த நிகழ்வை தகவல் தொழில்நுட்பத்திற்கான பட்டய நிறுவனத்தின் இலங்கைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இது மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் கடந்த 2024 ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெற்றது. இந்த விருதுகள் நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறையில் உயர்தர தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களில் சிறந்த சாதனைகளைக் கொண்டாடி அங்கீகரித்தது.
SLIIT இன் கணினி பீடத்தின் பிரதி துணைவேந்தர் பேராசிரியர் நுவன் கோட்டாகொட குறிப்பிடுகையில், “26வது தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் – NBQSA 2024 இல் SLIIT இன் சரித்திர வெற்றியானது தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குதல் மற்றும் புத்தாக்கம் தொடர்பான எமது முயற்சிகளுக்கான உறுதிப்பாட்டை நிரூபிக்கின்றது. SLIIT மாணவர்களும், கற்பிற்பவர்களும் தமது சிறப்பான திறனை வெளிப்படுத்தி நிறுவனத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர்” என்றார்.
தகவல் தொழில்நுட்பத்தின் புத்தாக்கம் மற்றும் சிறப்பில் நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு SLIIT இற்குக் கிடைத்திருக்கும் இந்த விருதுகள் மூலம் பறைசாற்றப்படுகின்றன. கற்றலில் சிரங்களை எதிர்கொள்ளும் சிறுவர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் இருமொழிச் செயலியான ‘FlexiMind’ இற்கு SLIIT தங்க விருதைப் பெற்றுக்கொண்டது. இந்தச் செயலியானது, கலந்துரையாடல் முறையான பாடங்கள், அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் ஆரம்பச் செயற்முறையைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தர வணிகப் பிரிவின் கீழ் இத்திட்டத்தை கலாநிதி.டில்ஸான்.டி சில்வா மேற்பார்வை செய்திருந்ததுடன், மாணவர்களான வித்யா சங்கவி, குஷானி விஜேசுந்தர, லோசனி ஜயவர்தன மற்றும் அரணி விஜேரத்ன ஆகியோர் இணைந்து உருவாக்கியிருந்தனர். சிறந்த அடையாளமாக விளங்கும் இந்தத் திட்டம் டிசம்பர் மாதம் புரூனேவில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் தகவல் தொழில்நுட்ப கூட்டணி (APICTA) விருது விழாவில் இலங்கையைப் பெருமையுடன் பிரதிநிதித்துவம் செய்யவுள்ளது.
அதேபிரிவின் கீழ், டிஜிட்டல் மீள்கட்டுமானம் மற்றும் கலைப்பாரம்பரிய நுணுக்கங்களுடன் பெருமைக்குரிய ஆரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில் பொலன்னறுவை வட்டடகேவுக்கு அர்ப்பணிப்பக்கப்பட்ட செயலியான ‘Lankan Legacy’ திட்டம் வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இத்திட்டத்தை கலாநிதி. டில்ஷான் டி.சில்வா மேற்பார்வைசெய்ததுடன், இணை மேற்பார்வையாளராக சமித விதானாராச்சி பணியாற்றியிருந்தார். இத்திட்டத்தின் குழு ரவிந்து யசித், பியூமிகா சாரங்க, விஷ்வா ஜயவர்தன மற்றும் ஹுஸ்னி ஹுசைன் ஆகியோரை உள்ளடக்கியது.
பட்டப்பின்படிப்புப் பிரிவின் கீழ் செமினி பெரேரா அவர்களினால் தயாரிக்கப்பட்ட ‘DataEye’ என்ற திட்டத்திற்கும் மற்றுமொரு சில்வர் விருது வழங்கப்பட்டது. தரவுகளிலிருந்து நுண்ணறிவைப் பிரித்தெத்து முடிவுகளை விரைவாக எடுப்பதற்கும் செயற்படக்கூடிய பகுப்பாய்வுகளை வழங்குவதற்குமான திட்டமாக DataEye அமைந்துள்ளது. லசித பெத்தவடுவின் வெளியக ஆலோசனையுடன் இத்திட்டத்தையும் கலாநிதி.டில்ஷான்.டி சில்வா மேற்பார்வை செய்தார்.
விழித்திரை சுகாதாரம் தொடர்பான செயலியான முன்கூட்டிய கண் பராமரிப்புக்கு ஆதரவாக புகைப்படப் பதிவேற்றங்கள் மூலம் சிக்கலை முன்கூட்டியே கண்டறிய உதவும் ‘RetinaX’ திட்டம் மூன்றாம் தர தொழில்நுட்பப் பிரிவின் கீழ் வெண்கல விருதைப் பெற்றுக்கொண்டது. இத்திட்டத்தை கலாநிதி.தினுக விஜேவர்தன மேற்பார்வை செய்ததுடன், இணை மேற்பார்வையாளராக ஜெனி க்ரிஷர பங்கேற்றதுடன், திட்டக் குழுவில் தமிந்து கமகே, சதுரிகா தொம்பேபொல, கௌசல்யா பிரேமரத்ன மற்றும் சரித் ஜயசிங்க ஆகியோர் அங்கம் வகித்தனர்.
கணினி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பிரதீப் அபேகுணவர்தன குறிப்பிடுகையில், “தகவல் தொழில்நுட்பத்தில் எதிர்காலத் தலைவர்களை வளர்ப்பதில் எங்களின் அர்ப்பணிப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்கான அவர்களின் விருப்பம் மற்றும் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு உந்துதலாக SLIIT இன் பங்களிப்பை இந்தச் சாதனை பிரதிபலிக்கின்றது. விருதுகளை வெற்றிகொண்ட அனைவருக்கும், அவர்களுக்கு வழிகாட்யவர்களுக்கும், அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் மற்றும் நிபுணத்துவத்தை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். அவர்களின் அர்ப்பணிப்பே இந்த சாதனைக்கு உறுதுணையாக அமைந்தது” என்றார்.
NBQSA 2024 இல் SLIIT நிறுவனத்தின் சிறந்த சாதனை தகவல் தொழில்நுட்பக் கல்வி மற்றும் புதுமைகளில் சிறந்து விளங்கும் பாரம்பரியத்தைத் தொடர்வதில் காணப்படும் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது. விருதுகளைப் பெற்ற மூன்று திட்டங்களை மேற்பார்வைசெய்த கலாநிதி.டில்ஷான்.டி சில்வா மற்றும் கலாநிதி.டினுக விஜேவர்தன ஆகியோரின் இணையற்ற வழிகாட்டல் மற்றும் மாணவர்களின் வெற்றிக்காக அவர்கள் காண்பித்த அர்ப்பணிப்பை SLIIT அங்கீகரிக்கின்றது.