Site icon Eyeview Sri Lanka

37ஆவது வர்த்தக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் 2022 போட்டிகளில் தொடர்ச்சியான 4ஆவது தடவையாகவும் SLT-MOBITEL அணி இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது

Share with your friend

37ஆவது வர்த்தக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் 2022 போட்டிகளில் SLT-MOBITEL அணி, தொடர்ச்சியான நான்காவது வருடமாகவும் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. 

நாடு முழுவதையும் சேர்ந்த கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்ட SLT-MOBITEL அணி இந்தப் போட்டிகளில் பங்கேற்றிருந்தது.

நவம்பர் 5 – 6 திகதிகளில் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்த வர்த்தக மெய்வல்லுநர் போட்டிகளில் 2000 க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இரண்டு வருடங்கள் இடம்பெறாமல், இந்த ஆண்டு 37ஆவது வர்த்தக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, இந்த நிகழ்வில் பிரதான அனுசரணையாளராக இணைந்து, இலங்கையின் கூட்டாண்மை மெய்வல்லுநர் வீரர்களின் திறமைகளை கட்டியெழுப்ப தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்திருந்தது. உள்நாட்டு விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகளுக்கு, அமைப்புகள், விளையாட்டு வீரர்களுக்கு அனுசரணை வழங்குவது போன்றவற்றை SLT-MOBITEL தொடர்ந்து முன்னெடுக்கின்றது.

சகல விதமான விளையாட்டுக்களிலும் ஊழியர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, விளையாட்டுப் பண்புகள் மற்றும் குழுநிலை செயற்பாடுகள் போன்றவற்றை நிறுவனம் ஊக்குவிக்கின்றது.


Share with your friend
Exit mobile version