உலகப் புகழ்பெற்ற ‘5D Concept’ தனது புதிய இணையத்தளத்தை வெளியிட்டுள்ளது, தொலைநோக்குப் பார்வை கொண்ட தேஷான் அமரசிங்கவின் வழிகாட்டுதலின் பேரில், உலக அரங்கிற்கு இந்தப் புத்தாக்கம்மிக்க தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2015 இல் ‘5D Concept’ அறிமுகமானதில் இருந்து, புதிய அலைகளை உருவாக்கி வருகிறது. இப்போது அதன் தளத்தை விரிவுபடுத்தி, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் இணைந்ததாக அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது.
‘5D Concept’ புதிய இணையதளம், இவ்விடயம் பற்றி மேலும் அறிய ஆர்வமுள்ள எவருக்கும் மதிப்புமிக்க நுண்ணறிவு, அறிவு மற்றும் அனுபவங்களை வழங்குவதற்காக சிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் மூலம், பயனர்கள் ‘5D Concept’ பற்றிய விரிவான தகவல்களை எளிதாக ஆராயலாம்.
‘5D Concept’ இன் ஸ்தாபகரான திரு.தேஷான் அமரசிங்க இந்த அறிமுகம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ‘5D Concept’ அனைத்தும் ஒரு நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது, மேலும் இந்த உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் அறிமுகமானது அந்த நோக்கத்திற்காக அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டின் முடிவுகளில் ஒன்றாகக் காணப்படுகிறது’ என்று கூறினார்.
‘5D Concept’ ஐந்து முக்கிய தூண்களை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது – கனவு, கடமை, ஒழுக்கம், உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு. பயனர்கள் தங்கள் உயர்ந்த திறனை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட, ஒரு முழுமையான கட்டமைப்பை வழங்குகிறது.
பல்வேறு துறைகள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ள ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட நான்கு சிறப்பு மேலாண்மை அமைப்புகளை இந்த இணையதளம் கொண்டுள்ளது. முதலாவது, வணிக மாதிரி மேலாண்மை அமைப்பு – வணிக உத்திகள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மனித மாதிரி மேலாண்மை அமைப்பு – தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மனித வள மேம்படுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மூன்றாவது விளையாட்டு மாதிரி மேலாண்மை அமைப்பு – தடகள முயற்சிகளில் செயல்திறன் மற்றும் ஒழுக்கத்தை உயர்த்த வடிவமைக்கப்பட்டுள்ளது, மற்றும் நான்காவது மாணவர் மாதிரி மேலாண்மை அமைப்பு – மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இலங்கையிலும் அதற்கு அப்பாலும், ‘5D Concept’ தனிநபர்கள், நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்றவாறு ஆலோசனை அமர்வுகளை அமைத்து வருகிறது. இந்த அமர்வுகள் இலங்கையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்தினால் மிக நுணுக்கமாக ஒழுங்கமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.
‘5D Concept’ தூண்கள் மற்றும் மேலாண்மை அமைப்புகளைப் பற்றி மேலும் அறிய www.5dconceptglobal.com என்ற புதிய இணையதளத்தை பார்வையிடுங்கள்.