6 பில்லியன் ரூபா மதிப்புள்ள பங்குகளைமீண்டும் வாங்கிய Softlogic Life நிறுவனம்

Share with your friend

இலங்கையில் இரண்டாவது மிகப்பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, பங்குதாரர் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில் 6 பில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது. தற்போது வெளியீட்டில் உள்ள 375,000,000 பங்குகளில் 58,593,750 பங்குகளுக்கு மீள்கொள்முதல் விலை ஒரு பங்கிற்கு ரூ. 102.40 ஆகும். தனது வலுவான நிதி செயல்திறன் மற்றும் சாதகமான குறைந்த வட்டி விகித சூழலைப் பயன்படுத்தி மூலதனத்தை சிறப்பாகச் சீரமைத்து பங்குதாரர் மதிப்பை உயர்த்துவதே Softlogic Life நிறுவனத்தின் நோக்கமாகும்.

கடந்த தசாப்தத்தில், Softlogic Life நிறுவனம் மொத்த காப்புறுதித் தவணைகளில் 26% சதவீத வருடாந்த வளர்ச்சியைக் (CAGR) அடைந்துள்ளது, இது தொழில்துறை சராசரி 14% ஐ விட அதிகமாகும். அத்துடன், கடந்த ஐந்து ஆண்டுகளில், இது தொடர்ந்து 20% க்கும் அதிகமான பங்கு வருமானத்தை தொடர்ச்சியாகப் பேணியுள்ளதுடன், ஒழுங்குமுறை தேவை 120% சதவீத்தை விட அதிகமாக 367% என்ற மூலதனப் போதுமான விகிதத்தைப் (Capital Adequacy Ratio) பெற்றுள்ளது.

நிறுவனத்தின் பன்முகப்படுத்தப்பட்ட விநியோக முறைமையானது, அதன் மொத்த விற்பனை முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, அதன் முகவர் விநியோகத்தில் 50% க்கும் அதிகமான இணைப்பு விகிதத்தையும் (Rider Attachment Ratio) கொண்டுள்ளது, இது ஆசிய பிராந்தியத்தின் சராசரியை விட 5 மடங்கு அதிகமாகும். 83% முதல் ஆண்டு தக்கவைப்பு விகிதம் மற்றும் சராசரி கொள்கை மதிப்பு ரூ. 176,872, ஆக உள்ளதால் Softlogic Life இன் தொழில்துறை அளவுகோல்களை விட மிகச் சிறப்பாக செயல்படுகிறது.

உலகளாவிய தொழில் நடைமுறைக்கு ஏற்ப, நிறுவனத்தின் உண்மையான நிதி ஆரோக்கியத்தையும், திறனையும் பிரதிபலிக்கவும் பங்குதாரர்களுக்கு வெளிப்படையான மற்றும் சமமான மதிப்பீட்டை உறுதிசெய்யவும் ‘மதிப்பீட்டு பெறுமதி’ (Appraisal Value) முறையின் அடிப்படையில் பங்குகளை மீண்டும் கொள்வனவு செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவானது வலுவான நிறுவன செயல்திறன் மற்றும் குறைந்த வட்டி விகித சூழலைப் பயன்படுத்துவதற்கான மூலோபாய வாய்ப்பையும், அரசாங்கப் பத்திரங்களை மாற்றுவதில் முக்கியமான இலாபத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பளிக்கிறது. இதனால் நிறுவனத்தின் மூலதன நிலை நடுநிலையாக இருக்கும் எனவும், எதிர்கால வளர்ச்சியை ஆதரிக்க வலுவாகவே இருக்கும் எனவும் நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

இது குறித்து Softlogic Life நிறுவனத்தின் தலைவரான அசோக் பத்திரகே கூறுகையில், “51.7 பில்லியன் ரூபா சொத்துக்களும், கடந்த ஆண்டில் தொடர்ந்த வரையறுக்கப்பட்ட வருவாய் வளர்ச்சியுடன், Softlogic Life ஏற்கனவே குறிப்பிடத்தக்க வலிமையையும், நிலைத்தன்மையையும் நிரூபித்துள்ளது. 6 பில்லியன் ரூபா மூலோபாய பங்குகளை மீள்கொள்வனவு செய்வதற்கான அறிவிப்பு எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது மற்றும் செயல்திறன் மிக்க மூலதன முகாமைத்துவத்தில் எங்கள் ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. கடந்த தசாப்தத்தின் பின்னணியில் Softlogic Life நிறுவனத்தின் மிகச்சிறந்த நிதி செயல்திறன் மற்றும் வலுவான சந்தை நிலைப்பாடு, இந்த பங்குகளை மீள்கொள்வனவு செய்வதற்கான உறுதியான அடித்தளத்தை வழங்கியுள்ளதையும் மற்றும் பங்குதாரர்களுக்கு நிலையான மதிப்பை வழங்க எங்கள் குழுவின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இது மீண்டும் ஒரு முறை 1.3 மில்லியன் உயிர்களைப் பாதுகாக்கும் தொழில்துறையில் மிகவும் வலுவான வீரர்களில் ஒருவராக இந்த நிறுவனத்தின் நிலையை பலப்படுத்துகிறது.

ஓட்டுமொத்தத்தில், இந்த நடவடிக்கையானது Softlogic Life நிறுவனத்தின் திறமையான மூலதன நிர்வாகத்திற்கான அர்ப்பணிப்பையும், நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி, நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. இந்த அணுகுமுறை, நிறுவனத்தின் நீண்டகால வணிக இலக்கு மற்றும் மதிப்பீட்டு உத்தி ஆகியவற்றோடு பொருந்தும் வகையில் பங்குதாரர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.” என தெரிவித்தார். 

இந்த நிலையில், LeapFrog Investments நிறுவனத்தின் ஆசிய நிதிச் சேவைகள் பிரிவின் பங்குதாரரும், இணைத் தலைவருமான பெர்னாண்டா லிமா இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், Softlogic Life நிறுவனத்தின் இந்தப் பங்குகளை மீள வாங்கும் மூலோபாயத் தீர்மானம், நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பில் உள்ள நம்பிக்கையை உணர்த்தி, நீண்டகால பங்குதாரர் மதிப்பை அதிகரிக்கும் நமது கூட்டு இலக்குடன் பொருந்துகிறது. எங்கள் முதலீட்டு குழும நிறுவனங்களில் வளர்ச்சியையும் மதிப்பையும் ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட முதலீட்டு நிறுவனம் என்ற வகையில், இந்த நடவடிக்கையை நிறுவனம் வலுவான தலைமைத்துவ நிலையைத் தொடரும் திறனின் தெளிவான சுட்டிக்காட்டாகவும், இலங்கை ஆயுள் காப்புறுதி துறையின் மீது நம்பிக்கையின் பரந்த அடையாளமாகவும் நாங்கள் பார்க்கிறோம். மொத்த காப்புறுதி தவணைகளில் 26% சதவீத CAGR மற்றும் பங்குகளின் மீது நிலையான உயர் வருவாய்கள் உட்பட Softlogic Life நிறுவனத்தின் சிறந்த சாதனை, அதன் வலுவான செயல்திறனையும், சந்தை தலைமைத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.” என தெரிவித்தார். 

Softlogic Life பற்றி

Softlogic Life Insurance plc என்பது Softlogic குழுமத்தின் ஒரு அங்கமான Softlogic Capital plc இன் துணை நிறுவனமாகும், இது சுகாதாரம், சில்லறை விற்பனை, தகவல் தொழில்நுட்பம், ஓய்வு, Automobiles மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றில் ஆர்வமுள்ள இலங்கையின் பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குதாரர்களில் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற முதலீட்டாளர்களில் ஒன்றான LeapFrog முதலீடுகள் அடங்கும், இது 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதிகளை நிர்வகிக்கிறது மற்றும் உலகின் மிகவும் மதிப்புமிக்க முதலீட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய ஈர்க்கக்கூடிய முதலீட்டாளர் தளத்தைக் கொண்டுள்ளது.


Share with your friend