Eyeview Sri Lanka

6nm அதி நவீன Imaging NPU – MariSilicon X ஐ வெளியிடும் OPPO

Share with your friend

– முதல் முறையாக அன்ட்ரொய்ட் ஸ்மார்ட்போன்களில் உயர்தர 4K AI Night Video மற்றும் live preview

OPPO தன்னால் வடிவமைக்கப்பட்ட முதலாவது cutting-edge imaging NPU – MariSilicon X வெளியீடு தொடர்பில் டிசம்பர் 14 மற்றும் 15 நடைபெற்ற OPPO INNO Day 2021 நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 6nm process தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட MariSilicon X, மேம்பட்ட ISP மற்றும் NPU இனை ஒருங்கிணைத்து ஒப்பிடமுடியாத மின்சக்தி சிக்கனத் திறன் கொண்ட நம்பமுடியாத செயல்திறனை வழங்க பல அடுக்கு நினைவக கட்டமைப்பை கொண்டுள்ளது. இது live preview உடன் ஆச்சரியமூட்டும் 4K AI Night Video இனை எடுக்க, நிகழ்நேர RAW செயலாக்கத்தை வழங்குகிறது. MariSilicon X ஆனது, 2022 இன் முதல் காலாண்டில் Find X தொடரில் அறிமுகமாகவுள்ளது.

OPPO சிரேஷ்ட பணிப்பாளர் Jiang Bo இது தொடர்பில் தெரிவிக்கையில், “புகைப்படவியல் தொழில்நுட்பத்தின் எல்லைகளை கடந்து செல்வதில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவத்துடன், கெமரா தொகுதிகள், லென்ஸ்கள் மற்றும் algorithms அடிப்படையில், ​​தொழில்துறையில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளுக்கு OPPO காரணமாக அமைந்துள்ளது. எமது புதிய cutting-edge imaging NPU ஆனது, இதுவரை நாம் மேற்கொண்ட செயற்பாடுகளில் மிகப்பாரிய மைல்கல்லாகும். இது mobile imaging systems இற்கு மேலும் சக்தியை வழங்குவதுடன், எமது பயனர்களுக்கு மேலும் புகைப்படவியலின் முன்னேற்றகரமான அனுபவத்தை வழங்கும்.” என்றார்.

இரண்டு வகைகளிலும் சிறந்தவை: உயர் வேகமானது உயர் செயல்திறனுக்கு வழி வகுக்கிறது

MariSilicon X இன் NPU ஆனது ஒரு செக்கனுக்கு 18 ட்ரில்லியன் செயல்பாடுகளை (TOPS) மேற்கொள்கிறது. இது எமது AI algorithm களை ஈடுகொடுக்க போதுமான கணனி சக்தியை விட அதிகமானதாகும். ஒரு அற்புதமான மின்சக்தித் திறனுடன் NPU ஆனது மின்கலத்தின் சக்தியை இழப்படையச் செய்யாமல், உயர் மட்ட செயல்திறனை வழங்குகிறது. அத்துடன் NPU ஆனது, ஒப்பிடமுடியாத tera-bps நினைவக துணைத் தொகுதியைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, சேமிப்பகம் மற்றும் செயலாக்க பகுதிகளுக்யிடையில் இடம்பெறும் தரவுகளை முன்னும் பின்னுமாக பிரதியெடுப்பதற்கான நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது.

மேலதிக bandwidth உடன் கூடிய அதன் பிரத்தியேக DDR உடன் MariSilicon X ஆனது, தாமதங்களை வெகுவாகக் குறைப்பதுடன் தேவையற்ற வகையில் மீண்டும் மீண்டும் இடம்பெறும் தரவு வாசிப்பு – பதிவு வட்டத்தின் காரணமாக ஏற்படும் மின் நுகர்வுகளைக் குறைக்கிறது.

OPPO இன் AI Noise Reduction Algorithm இயக்கத்தின் அடிப்படையில், ​​OPPO Find X3 Pro உடன் ஒப்பிடும்போது MariSilicon X மூலம் 20 மடங்கு வேகமான செயல்திறனை அடைய முடியும். MariSilicon X ஆனது நிகழ்நேரத்தில் ஒவ்வொரு பிரேமிலும் சிக்கலான மேம்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் 4K AI Night Video யினை எடுக்க உதவுகிறது.

Ultra HDR இற்கான சக்திவாய்ந்த ISP

MariSilicon X ஒரு சக்திவாய்ந்த ISP ஐக் கொண்டுள்ளது.  இது நம்பமுடியாத 20bit 120db dynamic எல்லைக்குட்பட்ட வகையில் புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. இது Find X3 Pro இனை விட 4 மடங்கு அதிகமான வேகமாகும். இது புகைப்படங்களின் பிரகாசமான மற்றும் இருண்ட பகுதிகளுக்கு இடையேயான 1,000,000:1 எனும் மாறுபாடு விகிதத்தை அளிப்பதுடன், புகைப்படங்களை உயிரோட்டமா பேணுகின்றது.

நிகழ்நேர RAW செயலாக்கம்

அதன் பாரிய கணனியல் சக்தி மற்றும் உயர் தரவுச் செயற்றிறன் காரணமாக, MariSilicon X புகைப்படவியல் தொடராக்கத்தில் புரட்சியை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அசல் புகைப்படவியல் தரவை செயலாக்குவதுடன், புகைப்படங்கள் 8dB signal-to-noise விகிதத்தை அடைய உதவுகிறது. அந்த வகையில் இது கணிப்பீட்டு ரீதியான புகைப்படம் எடுப்பது தொடர்பான ஒரு புதிய உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது.

RGBW Pro பயன்முறையானது Pro செயல்திறனை வழங்குகிறது

Dual Image Pipeline வடிவமைப்பு மற்றும் இரு மடங்கு raw supersampling முறையைப் பயன்படுத்தி, MariSilicon X ஆனது OPPO இன் RGBW சென்சரின் முழுத் திறனையும் வழங்குகிறது. இதன் விளைவாக, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், signal-to-noise விகிதத்தில் 8.6dB மேம்பாடு மாத்திரமன்றி, texture தரத்தில் 1.7x முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது.

4K AI Night Video யில் ஒரு முக்கிய முன்னேற்றம்

ஒரு பிரத்தியேக imaging NPU எனும் வகையில், MariSilicon X ஆனது, கணிப்பீட்டு ரீதியான புகைப்படத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது. செயல்திறன் மற்றும் மின்சத்தி திறன் ஆகிய இரண்டிலும் அதன் மிகப் பாரிய முன்னேற்றத்துடன், தெளிவான மற்றும் துல்லியமான வீடியோக்களை உருவாக்க AI Noise Reduction algorithms இன் பலத்தை வெளிப்படுத்துகிறது. இது அதியுச்ச எல்லையுடனான சிறந்த நிற மீளுருவாக்கம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு பிரேமும் உயர் சிறப்பைக் கொண்ட புகைப்படமாக மாறுவதற்கு அனுமதிக்கிறது. அந்த வகையில், அன்ட்ரொய்ட் போன்களில் 4K AI HDR Night வீடியோக்களை எடுப்பது சாத்தியப்படுவது இதுவே முதல் முறையாகும்.

2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் Find X தொடரில் MariSilicon X அறிமுகமாகவுள்ளதுடன், இது ஸ்மார்ட்போன்களுக்கான மிகச் சக்தி வாய்ந்த புகைப்படவியல் அனுபவத்தைக் கொண்டு வரும்.


Share with your friend
Exit mobile version