Eyeview Sri Lanka

AC Mahagedara தனியார் நிறுவனத்துக்கு  Diamond Excellence விருது

Share with your friend

வேகமாக வளர்ந்து வரும் வளிச்சீராக்கல் இயந்திர விநியோக மற்றும் சேவை நிறுவனமான AC Mahagedara தனியார் நிறுவனம் Diamond Excellence 2025 விருது விழாவில் வளிச்சீராக்கல் இயந்திர விநியோகம் மற்றும் சேவை புத்தாக்கத்துக்கான உயரிய விருதை வென்றுள்ளது. AC Mahagedara நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு கயான் புத்திகவுக்கு மேற்படி விருது வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட AC Mahagedara தற்போது வளிச்சீராக்கல் இயந்திரச் சந்தையில் முதன்மையான நிறுவனமாக திகழ்கிறது. வெறும் இரண்டு ஆண்டுகளில் மேற்படி நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அனைத்து முன்னணி வர்த்தக நாமங்களின் கீழ் வரும் வளிச்சீராக்கல் இயந்திரங்களை நாடெங்கும் விநியோகிப்பதோடு அவற்றை பொருத்தும் பணியினையும் இந் நிறுவனம் மேற்கொள்கிறது.

AC Mahagedara நிறுவனத்துக்கு கொழும்பு மற்றும் அதை அண்டியதாக 03 கிளைகளும் கண்டியில் ஒரு கிளையும் அமைந்துள்ளன. இந்த ஆண்டு முடிவதற்குள் அனுராதபுரம், குருணாகல் மற்றும் காலி ஆகிய நகரங்களிலும் அதன் கிளைகளை திறப்பதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் கீழ் வளிச்சீராக்கல் இயந்திரங்களை விநியோகிக்கும் மேலும் 03 நிறுவனங்களும் காணப்படுகின்றன. இந் நிறுவனங்களுடன் இணைந்ததாக 150 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் சேவையாற்றுகின்றனர். அவர்கள் ஊடாக வீடுகள், ஹோட்டல்கள், அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என எந்தவொரு இடத்திலும் ஒரே நாளில் வளிச்சீராக்கல் இயந்திரங்களை பொருத்திக்கொள்ள முடியும். இந் நிறுவனம் அனைத்து வகையான வளிச்சீராக்கல் இயந்திரங்களின் உதிரிப்பாகங்களையும் துணைப் பாகங்களையும் விற்பனை செய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந் நிறுவனம் மக்களின் நம்பிக்கையினை பெரிதும் வென்றுள்ளது. முன்னணி வளிச்சீராக்கல் இயந்திர வர்த்தகநாமங்களுடன் எட்டப்பட்டுள்ள கூட்டிணைவின் மூலம் உயர் தரத்திலான உற்பத்திகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கும், போட்டி சேவைத் தரங்களை பேணவும் நிறுவனம் முன்னுரிமை அளித்து வருகிறது. வினைத்திறன், புத்தாக்கம் மற்றும் தரம் ஆகிய பண்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிறுவனம் கடந்த காலங்களில் மேலும் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.


Share with your friend
Exit mobile version