Eyeview Sri Lanka

AI தொழில்நுட்பத்துடன் இலங்கையில்அறிமுகமாகும் Samsung Galaxy S25 Series

Share with your friend

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய Galaxy S25 Series ஐ Samsung Sri Lanka உத்தியோகபூர்வமாக இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் Galaxy S25 Ultra, Galaxy S25+மற்றும் Galaxy S25 ஆகிய மூன்று மாதிரிகள் அடங்கும். இந்த Series புதிய AI தொழில்நுட்பத்துடன், புரட்சிகரமான பல்வகை AI முகவர்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பாவனையாளர்கள் தங்கள் சாதனங்களுடனும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடனும் எவ்வாறு தொடர்புகொள்கிறார்கள் என்பதை மறுவரையறை செய்கிறது.

அதேபோல, Galaxy-க்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Snapdragon® 8 Elite Mobile Platform தொழில்நுட்பத்துடன், தனித்துவமான AI செயல்திறன், மிகச்சிறந்த கேமரா தொழில்நுட்பம் மற்றும் வசதியான பாவனையாளர் அனுபவத்தை வழங்குகிறது. இந்த Galaxy S25 Series, நாட்டின் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

இப்புதிய Galaxy S25 Series குறித்து Samsung Sri Lanka மற்றும் Maldives நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பானர் SangHwa Song கருத்து தெரிவிக்கையில், ‘மிகச்சிறந்த கண்டுபிடிப்புகள் எப்போதும் பாவனையாளர்களின் தேவைகளை பிரதிபலிக்கும். எனவே நாங்கள் Galaxy AI-ஐ மேம்படுத்தி, அனைவரும் எளிதாக கையாளக்கூடிய, தங்கள் தனிப்பட்ட தன்மையை பாதுகாக்கும் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். AI-integrated OS தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய Galaxy S25 Series, அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி” என்று தெரிவித்தார்.

சந்தையில் உள்ள அனைத்து Galaxy S25 கையடக்கத் தொலைபேசிகளும் மற்றும் சாதனங்களும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (TRCSL) பதிவு செய்யப்பட்ட தயாரிப்புகளாக இருப்பதால், பாவனையாளர்கள் எந்தவித தடையும் சந்தேகமும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy S25 Series பாவனையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப சுயமாக மாற்றமடையும் AI துணையை (AI Companion) அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் தனியுரிமையை முன்னிலைப்படுத்தி தனிப்பயனாக்கப்பட்ட தொடர்புகளை உறுதி செய்கிறது. Google உடன் இணைந்து, AI-ஐ மையமாகக் கொண்ட Android இயங்கு தளத்தை Samsung மறுவடிமைத்துள்ளது. இது பன்முக ஊடகத் திறன்களை (Multimodal AI Capabilities) மேம்படுத்தி உரை, பேச்சு, படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பாவனையாளர்கள் இயல்பாக தொடர்புகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Circle to Search மூலம் தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் URLs-ஐ உடனடியாக கண்டறியலாம். Context-Aware Assistance எனும் அம்சம், GIFகளை பகிர்வது அல்லது நிகழ்வுகளின் விபரங்களைச் சேமிப்பது போன்ற பணிகளைத் துரிதமாகச் செய்ய, செயலிகள் இடையே எளிதாக மாற உதவுகிறது. மேம்படுத்தப்பட்ட இயற்கை மொழி புரிதல் (Natural Language Understanding) மூலம் Samsung Gallery இல் குறிப்பிட்ட புகைப்படங்களை குரல் கட்டளைகள் மூலம் கண்டுபிடிக்க முடியும். ஒரே அழுத்த்தில் செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த Gemini AI, Samsung, Google மற்றும் Spotify போன்ற மூன்றாம் தரப்பு Apps களுக்கு இடையே இயல்பாக தொடர்பு கொள்ள உதவுகிறது. இதுதவிர, Call Transcript மற்றும் Writing Assist அம்சங்கள் அப்பிளிக்கேஷன்களை மாற்றாமல், அழைப்புகளை சுருக்கி குறிப்புகளை வடிவமைப்பதற்கும் உதவுகின்றன.

Samsung Galaxy S25 Series பாவனையாளர்கள் தரவுகளை Knox Vault மூலமாக பாதுகாக்கும்போது, மிகவும் தனிப்பட்ட அனுபவத்தையும் (Hyper-Personalized Experience) வழங்குகிறது. Personal Data Engine, பாவனையாளர் தரவுகளை பாதுகாப்பாகச் பகுப்பாய்வு செய்து, அவர்களுக்கே ஏற்ப சிறப்பான பரிந்துரைகளை வழங்குகிறது. On-Device AI Processing மூலம், பாவனையாளர் தரவுகள் சாதனத்திற்குள் தனியுரிமை பாதுகாக்கப்பட்ட நிலையில் தனிப்பயன் அனுபவங்களை வழங்குகிறது. Post-Quantum Cryptography எதிர்கால இணையத்தளப் பாதுகாப்பு ஆபத்துகளுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது. மேலும், Knox Matrix Dashboard, இணைக்கப்பட்ட சாதனங்களில் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணிக்கிறது.

Snapdragon® 8 Elite for Galaxy 40% வேகமான NPU, 37% வேகமான CPU, மற்றும் 30% மேம்பட்ட GPU உடன், மிகச்சீரான AI செயலாக்கத்தை வழங்குகிறது. ProScaler மற்றும் mDNIe தொழில்நுட்பங்கள் சிறந்த காட்சி மற்றும் செயல்திறனை வழங்குகின்றன. விளையாட்டு ரசிகர்களுக்கு Vulkan Engine & Advanced Ray tracing மூலம், இன்னும் மிருதுவான மற்றும் ஆழமான Gaming அனுபவத்தை வழங்குகிறது. இது தவிர, மேம்படுத்தப்பட்ட வெப்ப மேலாண்மை அமைப்பு, 40% பெரிய Vapor Chamber உடன், தொடர்ச்சியான உயர்ந்த செயல்திறனை தக்கவைத்திருக்க உதவுகிறது.

Galaxy இன் அடுத்த தலைமுறை ProVisual Engine மூலம் Galaxy S25 Ultra கையடக்கத் தொலைபேசி, புகைப்படத்துக்கு ஒரு புதிய தரத்தை நிர்ணயிக்கிறது. 50MP Ultrawide Sensor,மிகத் தெளிவான, உயிரோட்டமான புகைப்படங்களை வழங்கும். அதேசமயம், 10-bit HDR Video Recording, வீடியோ பதிவு வளமான வண்ண வெளிப்பாட்டை வழங்குகிறது. மேம்பட்ட குறைந்த ஒளி வீடியோ செயலாக்கம் (Low-Light Video Processing) எந்த ஒளி நிலையிலும் மிகச் சிறந்த தெளிவைத் தருகிறது.

தொழில்முறை தர திருத்த கருவிகள் பாவனையாளர் அனுபவத்தை மேம்படுத்துகின்றன. Audio Eraser, தேவையற்ற பின்னணி சத்தங்களை நீக்குகிறது. Virtual Aperture, அம்சம் DSLR போன்ற Depth-of-Field ஐ கட்டுப்படுத்த உதவுகிறது. Galaxy Log சினிமாத்தனமான வீடியோ தயாரிப்புக்கான மேம்பட்ட வண்ண தரப்படுத்தல் வசதியை வழங்குகிறது. அத்துடன், Portrait Studio & Filters அம்சம் உயிருள்ள 3D அவதார்கள் மற்றும் பழைய Analog-style filters களை உருவாக்க உதவுகிறது.

இது தவிர, Galaxy S25 Series இல் Samsung நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து பல முக்கிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Titanium Build மற்றும் Corning® Gorilla® Armor 2 பாதுகாப்பு கண்ணாடி மூலம் அதிக உறுதித்தன்மையை வழங்குகிறது. இது மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, Armor Aluminum மற்றும் பழைய Galaxy சாதனங்களில் இருந்து பெறப்பட்ட cobalt பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 7 ஆண்டுகள் Operating System மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளை (Security Updates) வழங்குவதன் மூலம் சாதனத்தின் பயன்பாட்டு காலத்தை அதிகரித்துள்ளது.

Galaxy S25 Series வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரூ. 51,850 வரை தள்ளுபடியும், ரூ. 143,830 மதிப்புள்ள இரண்டு ஆண்டுகள் இலவச திரை மாற்றீடு உத்தரவாதமும் (Screen Replacement) வழங்கப்படுகிறது. மேலும், டயலொக் மற்றும் SLT மொபிடெல் மூலம் 1TB இலவச Dataவும் பெறலாம். Samsung Easy Pay மூலம் மாதம் ரூ. 10,989 என்ற 24 மாத தவணை முறையில் கொள்முதல் செய்யலாம். மேலும், Google One Offer சலுகை திட்டத்தின் கீழ் 6 மாத Gemini Advanced மற்றும் 2TB cloud storage இலவசமாக வழங்கப்படுகிறது.

Galaxy S25 Ultra மாதிரிகள் Titanium Silverblue, Titanium Black மற்றும் Titanium Gray ஆகிய நிறங்களிலும், Galaxy S25 & S25 மாதிரிகள் Navy, Silver Shadow, Icy Blue ஆகிய நிறங்களிலும் கிடைக்கின்றன. அதுமாத்திரமின்றி, Galaxy S25 Series ஐ  John Keells Office Automation, Singer, Singhagiri, Damro, Softlogic Retail, Dialog, SLT Mobitel மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் நாடு முழுவதும் கிடைக்கிறது.

இலங்கையின் நம்பர் 1 கையடக்கத் தொலைபேசி வர்த்தகநாமமான SLIM Sri Lanka வழங்கும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் மதிப்பாய்வில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ‘People’s Youth Choice Brand of the Year’ விருதை வென்றுள்ளது. Gen Z மற்றும் Millennials உள்ளிட்ட அனைத்து வயதினரினதும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் Samsung தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

புதிய Samsung Galaxy S25 Series உடன் AI-இன் சக்தியை அனுபவியுங்கள் – கையடயக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை மறுவரையறை செய்யவும், உங்கள் சொந்த Galaxy S25 Series ஐ இப்போதே https://www.jkoa.com/products/mobiles_and_accessories/phones என்ற முகவரியில் order செய்யுங்கள்.


Share with your friend
Exit mobile version