Eyeview Sri Lanka

AI agents: AI வலிமையை பயன்படுத்தி உங்களின் பணிகளை இலகுவாக்கும் AI உதவியாளர்கள்

Share with your friend

வேலைப்பளு நிறைந்த திங்கட்கிழமை வேலைக்கு சமூகமளித்து, நாளொன்றில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய வேலைகளை பார்வையிட்டு, அவற்றை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதை பற்றி நீங்கள் சிந்திக்கக்கூடும். ஆனாலும், இன்றைய காலகட்டத்தில் உங்களுக்கு அவசியமான ஆவணங்களை சாராம்சப்படுத்துவதும், தரவுகளை வகைப்படுத்துவதும் AI Agent இடம் ஒப்படைத்து, அந்தப் பணி உடனடியாக முடிவடையும் வரையில் உங்களின் தேநீரை பருகி, சற்று ஓய்வெடுப்பதற்கு உங்களுக்கு வசதியுள்ளது. அதன் பின்னர், உங்களின் Teams சந்திப்புகளின் அறிக்கைகளை சாராம்சப்படுத்துவதை மற்றுமொரு AI Agent இடம் ஒப்படைத்து, முறையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் ஆவண சாராம்சம் மற்றும் வகைப்படுத்தப்பட்ட தரவுகளைப் பெற்று, அறிக்கையை தயாரிப்பதை மாத்திரம் நீங்கள் மேற்கொள்ளலாம். இவை அனைத்தையும் நீங்கள் தனித்து மேற்கொண்டால், ஒரு நாளுக்கு அதிகமாக தேவைப்படக்கூடிய பல காரியங்களை, உங்களுக்கு AI Agents பயன்படுத்தி குறைந்த காலப்பகுதியில் மேற்கொள்ளக்கூடிய வசதி ஏற்பட்டுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடையவும், திங்கட்கிழமை ஒன்றில் நேரம் எஞ்சியிருக்கும்.

இந்த AI Agents என்றால் என்ன?

இன்று வரையில், AI தொழினுட்பமாக சகல தொழினுட்ப சாதனம் மற்றும் மென்பொருளிலும் பரவியுள்ளது. உலகம் AI தொடர்பில் வெளிப்படுத்திய அச்சுறுத்தல்களும் படிப்படியாக குறைந்த வண்ணமுள்ளன.

எவ்வாறாயினும், ஒரு காலகட்டத்தில் AI மாதிரிகள் தொடர்பில் பலராலும் பேசப்பட்டதைப் போன்று, தற்போது AI Agents பற்றியும் பரவலாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த AI Agents என்பது என்ன? AI agents என்பது, AI வலிமையை பயன்படுத்தி, சில உறுதியான காரியங்களை சுயமாக மேற்கொள்ளக்கூடிய Program ஆகும்.

நீங்கள் இதுவரையில் Copilot போன்ற AI Assistant உதவியை பெற்றிருப்பீர்கள். ஆனாலும், உங்களுக்கு இதுவரையில் அதற்கு அப்பால் சென்று, ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் விசேடமாக அமைந்த AI Agents களின் உதவியை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் உள்ளது.

AI இனால் வலுவூட்டப்படும் புதிய apps ஆக AI agents ஐ குறிப்பிடுவதும் சரியானதாகும். அதாவது, எளிமையான உள்ளீட்டுக்கு பதிலளிக்கும் AI agent முதல், முழுமையாக தன்னியக்கமாக செயலாற்றக்கூடிய AI agents வரை பெருமளவு பரந்து காணப்படுகின்றன. வியாபாரமொன்றில் பயன்படுத்துவதாயின், அங்கு பொருட்கள் அல்லது சேவைகள் மீது வாடிக்கையாளர்களை கவர்வது முதல் விற்பனை ஓடர்களை தன்னியக்கமாக நிர்வகித்துக் கொள்வது வரை பணிகளை முறையாக மேற்கொள்ளும்.

AI agents ஐ எவ்வாறு கட்டியெழுப்புவது? AI agents ஐ எவ்வாறு செயலில் ஈடுபடுத்துவது?

உங்களுக்கு சுலமாக Microsoft Copilot Studio ஊடாக பல்வேறு செயற்பாடுகளுக்காக விசேடமாக அமைந்த AI Agents தயாரித்து, வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, சேவையை பெறுபவருக்கு நிறுவனம் தொடர்பான சிக்கலுக்கு நிறுவனத்தின் கொள்கைகள், சட்ட விதிமுறைகள், ஒழுங்குகள் போன்றவற்றிலிருந்து உடனடியாக பதிலை தேடி வழங்கும் employee self-service agent ஐ உருவாக்குவது  கடினமான காரியமல்ல.

தேவையெனில் செயற்திட்ட முகாமையாளராக ஏதேனும் திட்டமொன்றை நிர்வகிக்கும் AI உதவியாளர் முதல், மனித வளங்கள் பிரிவின் தரவுகள் கட்டமைப்பை நிர்வகிப்பது முதல் கடமையில் ஈடுபட்டுள்ளவர்கள் அடிக்கடி கேட்கும் பிரச்சனைகளை தீர்ப்பது வரை பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவும் AI உதவியாளர் வரை AI agents உங்களுக்காக வடிவமைத்து, Copilot Studio பயன்படுத்தி மேலும் உங்களுக்கு உகந்த வகையில் செயற்படுத்திக் கொள்ளலாம்.

Generative AI உடன் இதுவரையில் வந்துளள் பயணம் AI agents உடன் எவ்வாறு அமையும்?

AI agents க்கு சுயமாக செயலாற்ற அனுமதிப்பது – அதாவது, உங்களின் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகளை அல்லது மனித ஈடுபாடு அவசியமில்லாத பணிகளை முழுமையாக ஒப்படைப்பதில் ஏதேனும் அவதானம் நிலவுகின்றதா? இல்லை. எப்போதும் AI agents அவசியமான தரவுகளுக்காக மாத்திரம் தம்மை ஈடுபடுத்துகின்றன.

எவ்வாறாயினும், Generative AI உடன் கடந்து வந்துள்ள இந்த குறுகிய ஆனாலும் பரந்த AI வரலாற்றினுள், AI agents என்பது இன்னமும் ஆரம்ப நிலையில் உள்ளன.


Share with your friend
Exit mobile version