Site icon Eyeview Sri Lanka

Airtel Freedom ரூ. 749 பெக்கேஜ் குறித்து தங்களது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் பாவனையாளர்கள்

Share with your friend

கோவிட்-19 தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து கடந்த 2 ஆண்டுகளில் நாம் எதையாவது கற்றுக்கொண்டிருக்கின்றோம் என்றால், அது தனித்துவமான சிறப்பம்சமாகும். தொலைக்காட்சி பார்ப்பது முதல் வீட்டில் இருந்தவாரே வேலை செய்தல் (Work From Home – WFH) வரை நாம் செய்யும் அனைத்திற்கும் எங்கள் கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறோம், மேலும் பலர் இப்போது தாங்கள் செலுத்தும் பணத்திற்கு அதிக மதிப்பைப் பெறுவதற்கான வழிகளைத் தேடுகிறார்கள்.

அந்த வகையில் அதுதொடர்பில் எயார்டெல் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிகிறது. எயார்டெல் லங்கா எந்தவொரு வலையமைப்பிற்கும் இடையில் வரையறையற்ற உள்ளூர் அழைப்புகள் மற்றும் வரையறையற்ற சமூக ஊடக வலையமைப்பு பாவனையை Browsingஐ வழங்கும் முதலாவது கையடக்க தொலைத்தொடர்பு சேவை வழங்குநராகும். எயார்டெல் Unlimited Freedom Packageக்கு மாறிய சிலரின் அனுபவம் எப்படி இருந்தது மற்றும் வாக்குறுதியளித்தபடி எயார்டெல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பதை வழங்குகிறதா என்று கேட்க தீர்மானித்தோம்.

இளம் வங்கித் துறை நிபுணரான பாக்யா, எயார்டெல்லின் ரூ. 749 பெக்கேஜ் பற்றி அவர் தனது நண்பர் மூலம் சமூக வலைதளத்தில் அறிந்து கொண்டார். புதிய தொலைத்தொடர்பு இணைப்பை முயற்சிக்க முதலில் தயங்கினாலும், அதிக பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் அதை முயற்சி செய்ய முடிவு செய்தார்.

“எனது தற்போதைய தொலைபேசி எண்ணை மாற்ற விரும்பவில்லை. ஆனால் என்னிடம் Dual SIM மொபைல் தொலைபேசியொன்று இருப்பதால் Airtel ஐ இரண்டாவது SIM ஆக பயன்படுத்த முடிவு செய்தேன். நான் சுமார் ஒரு மாதமாக இதைப் பயன்படுத்தினாலும், எனது தேவைகளுக்கு இது சரியான பெக்கேஜ் என்று என்னால் சொல்ல முடியும். நான் இதற்கு முன்பு மற்ற வலையமைப்புகளிலிருந்து பல Packageகளைப் பயன்படுத்தினேன். ஆனால் அவை யாவும் நான் எதிர்பார்த்த பணத்திற்கான பெறுமதியை தரவில்லை. பணத்திற்கான சிறந்த மதிப்பு மிக்க சேவையை தேடும் நேரத்தில் ஏனைய வலையமைப்புகளுக்கு Unlimited Pack அழைப்புகளை மேற்கொள்ள எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. சிறந்த சிக்னல் கவரேஜ், உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளின் தரம் மற்றும் Data நம்பகத்தன்மை ஆகியவையும் மிக முக்கியம். Zoom மூலம் படிப்பிற்காக இந்த பெக்கேஜைப் பயன்படுத்துமாறு எனது சகோதரருக்கு பரிந்துரைத்தேன்.” என அவர் தெரிவித்தார்.

நிதித்துறை பின்னணியைக் கொண்டவரான, டைரோன் அத்தபத்து ஒரு புதிய எயார்டெல் பாவனையாளர். ஆனால் ஏற்கனவே அதன் அதிகபட்ச நன்மைகளை அனுபவித்து வருகிறார். அது தொடர்பான கருத்துக்களை அவர் நம்மிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டார். “நான் சில மாதங்களுக்கு முன்பு எயார்டெல் இணைப்பைப் பயன்படுத்துகிறேன். ஆனால் இப்போது எனது பரிந்துரையின்படி எயார்டெல் ரூ. 749 Pack எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் பயன்படுத்துகின்றனர். நான் எயார்டெல்லுக்கு ரூ. 749 பெக்கேஜை உபயோகிக்க ஆரம்பித்து 3 மாதங்களுக்கும் மேலாகிவிட்டாலும், அதில் எனக்கு கூறுவதற்கு எந்த புகாரும் இல்லை. என் மனைவி அவரது கல்வி செயற்பாடுகளுக்கும் நான் என்னுடைய அலுவலக வேலைக்கும் பயன்படுத்துகிறோம். மேலும் 30GB கொண்ட Package ஆக இருப்பதுடன், எந்த சிக்கல்களும் இல்லாமல் FaceBook, Messenger, Youtube மற்றும் Whatsapp சமூக வலைப்பின்னல்களுக்கு வரையறையற்ற அழைப்புக்களை மேற்கொள்ள முடியும். எயார்டெல் நிறுவனம் இதுபோன்ற ஒன்றை பாவனையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது போன்ற கடினமான காலகட்டத்தில் இது ஒரு பெரிய நிவாரணம் என்று நான் நம்புகிறேன்.”

சாமர தில்ருக்க்ஷி விளம்பரத் துறையில் பணியாற்றுகிறார். எயார்டெல்லின் Unlimited Freedom பெக்கேஜ், குறிப்பாக வீட்டில் இருந்து வேலை செய்யும் போது கையடக்க தொலைபேசி இணைய இணைப்பைச் சார்ந்து இருக்கும் ஒருவருக்கு ஒரு சிறந்த ஆறுதல். இது குறித்து அவர் தனது கருத்தை பின்வருமாறு தெரிவித்தார். “கோவிட்-19 தொற்றுநோய் பரவிய காலப்பகுதியில், நாம் அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரத்திற்கு மாற வேண்டியிருந்தது. நான் நினைத்தது போல் அது எளிதாக இருக்கவில்லை. அதற்கு என்னைத் தயார்படுத்திக் கொள்ள சில நாட்கள் எடுத்தது. ஆனால் Dataகாக நான் எவ்வளவு செலவு செய்தேன் என்பதை உணர எனக்கு இன்னும் அதிக நேரம் பிடித்தது. அதிர்ஷ்டவசமாக, எனது நண்பர் வீட்டில் இருந்தே எயார்டெல் ரூ. 749 பெக்கேஜை பயன்படுத்தியதால் அதனை எனக்கு பரிந்துரைத்தார். அதன் வரையறையற்ற Data எனது மாதாந்த Data உபயோகத்தைத் திட்டமிடுவதை மிகவும் எளிதாக்கியது. மேலும் பெக்கேஜை மாதம் ஒருமுறை ஆக்டிவேட் செய்யும் வசதியும் இதில் மேலதிக நன்மையாகும். வழக்கமாக நான் வாரந்தோறும், சில சமயங்களில் Reload செய்வேன். ஆனால் இப்போது எயார்டெல் ரூ. 749 பெக்கேஜ் என்னை அந்தக் கவலையில் இருந்து மீட்டெடுத்துள்ளது. எயார்டெல் தனது பாவனையாளர்களுக்காக இத்தகைய தீர்மானம் ஒன்றை எடுத்ததில் மகிழ்ச்சி!”

எயார்டெல் தற்போது நாடு முழுவதும் அதன் வலைப்பின்னலை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது சம்பந்தமாக, நாங்கள் எங்கள் பாவனையாளர்களின் கருத்துக்களை ஆய்வு செய்ய முடிவுசெய்துள்ளோம். அதன்படி, கிரிபத்கொடையைச் சேர்ந்த தில்ருக்க்ஷி தனது அனுபவத்தைப் பற்றி இவ்வாறு கூறினார். “எயார்டெல் முதன்முதலில் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது, எயார்டெல் SIM ஒன்றைப் பெற்றவர்களில் நானும் ஒருவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் கவரேஜ் குறைவாக இருந்தது, அதனால் ஏமாற்றமாக இருந்தது. நீங்கள் விற்பனைத் துறையில் பணிபுரியும் ஒரு நபராக இருந்தால், உங்களுக்கு வரும் அழைப்பைபொன்றுக்கு பிரதிபலிக்காமல் அதை எடுக்காமல் இருந்துவிடுவது வாடிக்கையாளரை இழப்பது போன்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் சமீபத்தில் நான் Unlimited Freedom பெக்கேஜ்கள் பற்றி அறிந்தேன். அதிலுள்ள சலுகைகளைப் பற்றி அறிந்து கொண்டு மீண்டும் முயற்சிக்கவும் முடிவு செய்தேன். கவரேஜ் நெட்வொர்க் மேம்படுத்தப்பட்டு இப்போது நாடுமுழுவதிலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.”

இலங்கையில் Mobile Number Portability இன்னும் கிடைக்கவில்லை என்பதால், மீண்டும் எயார்டெல்லுக்கு மாறுவது எளிதான காரியம் அல்ல. “நான் எனது தனிப்பட்ட மற்றும் வேலை நோக்கங்களுக்காக 10 ஆண்டுகளாக எனது எண்ணைப் பயன்படுத்துகிறேன். எண்களை மாற்றுவது எளிதானது அல்ல. ஒரு மொபைல் இணைப்பில் இருந்து மற்றொரு மொபைல் இணைப்பிற்கு மாறும்போது அதே எண்ணை பயன்படுத்த வழி இருந்தால், அந்த இணைப்பை நான் விரைவில் பெறுவேன். மேலும், எயார்டெல் Freedom பெக்கேஜ்கள் மூலம் பாவனையாளர்களுக்கு நல்ல சலுகைகளை வழங்கியுள்ளது என்பதை நான் குறிப்பிட வேண்டும். இப்போது நான் எனது தனிப்பட்ட எண்ணை எயார்டெல் எண்ணுக்கு மாற்றியுள்ளேன்.”

எயார்டெல் ரூ. 749 Unlimited Freedom பெக்கேஜ் பாவனையாளர்களுக்கு வேறு எந்த நெட்வொர்க்கிற்கும் வரையறையற்ற அழைப்புகள் மற்றும் Facebook, Messanger, Whatsapp மற்றும் Youtube போன்ற சமூக ஊடக வலையமைப்புக்களில் வரையறையற்ற பாவனை மற்றும் SMS வசதிகளை வழங்குகிறது, கூடுதலாக 30GB 4G Dataவை 30 நாட்களுக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 


Share with your friend
Exit mobile version