Eyeview Sri Lanka

AkzoNobel-தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA) கைகோர்த்து உள்நாட்டு பெயின்ட் பூச்சாளர் சமூகத்தின் திறன்களை மேம்படுத்தி, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறந்த தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளன

Share with your friend

இலங்கையில் டியுலக்ஸ் பெயின்ட் வகைகளின் தயாரிப்பாளரான AkzoNobel பெயின்ட்ஸ் லங்கா (பிரைவட்) லிமிடெட், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் (VTA) புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. 2023 ஒக்டோபர் 4ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கையின் பிரகாரம், நாடு முழுவதையும் சேர்ந்த டியுலக்ஸ் பெயின்ட் பூச்சில் ஈடுபடும் மேற்பூச்சாளர்களுக்கு, “நிபுணத்துவ பெயின்ட் பூசல்” என்பதில் நிலை 3 தேசிய தொழிற்பயிற்சி தகைமை (NVQ) சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். நிறுவனத்தின் தனது பெயின்ட் பூச்சாளர் சமூகத்தின் ஈடுபாட்டு பயணத்தில் உள்ளம், இதயம் மற்றும் பை (MHP) – செயற்திட்டத்தின் அங்கமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.  

NVQ நிலை 3 சான்றிதழ் என்பது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்த தகைமை வாய்ந்த பெயின்ட் பூச்சாளர்களுக்கு உதவும் வகையிலான நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப கற்கையை பெற்றுக் கொடுப்பதுடன், வெளிநாடுகளில் பணியாற்ற விரும்பினால் அதற்கு உதவும் வகையிலும் அமைந்துள்ளது.

பெயின்ட் மற்றும் மேற்பூச்சு வகைகளில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் AkzoNobel, பெயின்ட் பூச்சில் ஈடுபடுவோரின் நலன் மற்றும் திறனை மேம்படுத்துவதில் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இலங்கையில் உறுதியான பெயின்ட் பூச்சாளர் சமூகத்தின் திறன்கள் விருத்தி, தன்னிறைவு மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றை மேமப்டுத்துவதற்கான முயற்சிகளுக்கு உதவும் வகையிலும் அமைந்துள்ளது. பிரத்தியேகமான “டியுலக்ஸ் பெயின்ட் பூச்சாளர்” வெகுமதி நிகழ்ச்சித்திட்டமும் இந்த நடவடிக்கையின் அங்கமாக அமைந்திருப்பதுடன், இந்த பெயின்ட் பூச்சாளர் குழுவிலிருந்து, இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்கான பங்குபற்றுநர்கள் தெரிவு செய்யப்படுவர். 

AkzoNobel லங்கா நிறுவனத்தின் வணிக தலைமை அதிகாரி அமில இந்திக கருத்துத் தெரிவிக்கையில், “VTA உடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இந்த திறன் கட்டியெழுப்பல் நிகழ்ச்சித் திட்டம், எமது பெயின்ட் பூச்சாளர்களுக்கு நாட்டினுள் அல்லது வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். இதற்காக தொழிற்பயிற்சி அதிகார சபையினால், அவசியமான வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கப்பட்டு, பங்குபற்றுநர்களுக்கு தமது உயர்மட்ட திறனை அடைவதற்கு உதவியளிக்கப்படும்.” என்றார்.

மேலும், இந்த கற்கையில் கைகோர்த்துள்ள சகல பங்குபற்றுநர்களுக்கும் கற்கை முழுவதுக்குமான அனுசரணை வழங்கும் நடவடிக்கையை டியுலக்ஸ் மேற்கொள்ளும் என்பதுடன், கற்றை நிறைவில் குளோபல் டியுலக்ஸ் அகடமியினால் வழங்கப்படும் சான்றிதழும் இவர்களுக்கு வழங்கப்படும்.

அண்மையில், நாடு முழுவதையும் சேர்ந்த தொழிற்பயிற்சி அதிகார சபையின் விரிவுரையாளர்களுக்கு Woodcare water-based தொழில்நுட்பம் தொடர்பான ஒரு நாள் பயிற்சிப்பட்டறைகளை நாடு முழுவதிலும் AkzoNobel பயிற்றுவிப்பாளர்கள் முன்னெடுத்திருந்தனர். நீர் சார் தயாரிப்புகள் தொடர்பான அவர்களின் திறன்கள் மற்றும் அறிவு ஆகியவற்றுடன், அவற்றின் பிரயோகம் மற்றும் அனுகூலங்கள் தொடர்பான அறிவை மேம்படுத்துவதை இலக்காக கொண்டும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

VTA தொழிற்பயிற்சி அதிகாரசபை தவிசாளர் பிரசன்ன ரணசிங்க எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தகைமையை பெற்றுக் கொடுப்பதற்காக AkzoNobel லங்கா உடன் கைகோர்த்துள்ளமையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இதனூடாக பெயின்ட் பூச்சாளர்களுக்கு பிந்திய திறன்களை பெற்றுக் கொள்ள முடிவதுடன், வேகமாக வளர்ந்து வரும் துறையில் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கும் உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.


Share with your friend
Exit mobile version