Site icon Eyeview Sri Lanka

Allianz Lanka வின் புதிய தலைமை அலுவலகம் One Galle Face இல்: புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பின் மையம்

Share with your friend

இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றான Allianz Lanka, கொழும்பின் வணிக பிராந்தியத்தின் மையப்பகுதியில் உள்ள One Galle Face tower இல் தனது புதிய தலைமை அலுவலகத்தை அண்மையில் திறந்து வைத்தது.

இந்த மைல்கல் நிகழ்வைக் குறிக்கும் வகையில் 2023 பெப்ரவரி 23 ஆம் திகதி அன்று இந்த தலைமை அலுவலகத்தின் உத்தியோகபூர்வ திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் Allianz Lanka வின் தலைவர் கானி சுப்ரமணியம், Allianz Lankaவின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் இலங்கைக்கான முகாமையாளர், அலன் ஸ்மீ; Allianz Life Insurance Lanka Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெயலால் ஹேவாவசம்; மற்றும் பணிப்பாளர் சபை சார்பாக ஷிரோமல் குரே மற்றும் தீப்தி லொகுஆராச்சி ஆகியவர்களோடு தலைமைக்குழு உறுப்பினர்கள், மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்குபற்றினர். 

தொற்றுநோய்க்காலத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் தொழில் முறை மாற்றத்தின் பலன்களை அறுவடை செய்வதற்காக Allianz இந்நிறுவனம் கையாண்ட உத்திகளின் அடிப்படையிலேயே அதன் தலைமை அலுவலகத்தை One Galle Face க்கு இடமாற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதன் அடிப்படையில், Allianz Lanka வின் தலைமை அலுவலகம் ஒரு கலப்பு மாதிரி பணியிடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வலுவலகம் அங்கு பணிபுரியும் அதன் ஊழியர்களுக்கு மேம்பட்ட உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் தொழில் திருப்தி ஆகியவற்றை அளிப்பதற்கு ஏற்ப வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த அலுவலமானது ஊழியர்களின் மனநலத்தை மேம்படுத்தும் விடயங்கள் மற்றும் இந்நிறுவனத்தின் வணிக பங்காளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான நிலையான நடைமுறைகளை செயல்படுத்தும் அமிசங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, ஒரு செயல்பாடுகள் சார்ந்த அலுவலக வடிவமைப்பினை கொண்டுள்ளது. 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய Allianz Lanka வின் தலைவர் கானி சுப்ரமணியம், “இந்த புதிய இடத்தின் பலன்களைப் பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு பங்களித்த சக ஊழியர்களின் கூட்டு முயற்சியின் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. எங்களது புதிய தலைமை அலுவலகமானது உலகளாவிய ரீதியில் காணப்படும் Allianz நிறுவனங்களின் மையக்கருவாக உள்ள பணியிட அழகியல், இயக்கவியல் மற்றும் தத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றுகிறது. எங்கள் புதிய அலுவலகங்களில் புதிய தொழில்நுட்ப வசதிகள், சந்திப்புக்களை மேற்கொள்ளவதற்காக அதிக அறைகள், ஓய்வெடுப்பதற்கான இடங்கள், ஓய்வறைகள், பாரிய இடவசதி கொண்ட பயிற்சி அறைகள், ஒரு விளையாட்டு (gaming) அறை, சுகாதார நிலையம், சர்வமதத்தினருக்கான அறை, மற்றும் ஒரு பல்வகை உணவகம் இருக்கின்றன. இதன்மூலம், மிகவும் சிறந்த தொழில்சார் அனுபவத்தை ஊழியர்கள் பெற்றுக்கொள்வர்.

“இந்த கலப்பு மாதிரியானது, உலகளாவிய ரீதியில் இயங்கும் எங்கள் பணியிடங்களில் பணிபுரியும் பணியாளர்களின் திருப்தியில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதிரியானது ஊழியர்கள் தங்கள் நேரத்தை மிகவும் திறம்பட பயன்படுத்தவும் தமது “வேலை-வாழ்க்கை” சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது,” என Allianz Lankaவின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் இலங்கைக்கான முகாமையாளர் அலன் ஸ்மி கூறினார்.  “எமது புதிய தலைமை அலுவலகம், எமது ஊழியர்களுக்கு சிறந்த வேலைச் சூழலை வழங்குவதுடன், அதிக உற்பத்தித்திறன், வினைத்திறன் மற்றும் தொழில் திருப்தியையும் வழங்குகின்றது. இந்த புதிய பணியிடமானது, எதிர்காலத்தில் ஆக்கப்பூர்வமான, பயனுள்ள மற்றும் புதுமையான தீர்வுகளை ஊக்குவிக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.” 

Allianz Lanka என கூட்டாக அறியப்படும் Allianz Life Insurance Lanka Ltd. மற்றும் Allianz Insurance Lanka Ltd. ஆகியவை ஜெர்மனியின் Munich நகரைத் தலைமையிடமாகக் கொண்ட காப்புறுதி மற்றும் சொத்து மேலாண்மை வணிகங்களில் முதன்மையாகச் சேவைகளைக் கொண்ட உலகளாவிய நிதிச் சேவை வழங்குநரான Allianz SE க்கு முழுச் சொந்தமான துணை நிறுவனங்களாகும். Allianz குழுமத்தின் உலகளாவிய பலம் மற்றும் உறுதியான மூலதனமயமாக்கல் மற்றும் உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் வணிக அறிவு ஆகியவை, Allianz Lanka வின் வெற்றிக்கான சக்திவாய்ந்த சூத்திரமாக இருக்கின்றது.   


Share with your friend
Exit mobile version