Site icon Eyeview Sri Lanka

Ballast Nedam ஹெம்மதகமவில் தூய குடிநீர் வசதியை ஏற்படுத்தியுள்ளது

Share with your friend

ஹெம்மதகமவைச் சேர்ந்த 17000 குடும்பங்களுக்கு தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன், நெதர்லாந்தின் Ballast Nedam International Projects B.V. நிறுவனம் கைகோர்த்துள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த 140 வருட காலமாக சமூகங்களுக்கு வாழ்க்கையை அணுகும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிர்மாண மற்றும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் நிறுவனமாக Ballast Nedam International Projects B.V. திகழ்கின்றது.

சப்ரகமுவ மாகாணத்தின், கேகாலையை அண்மித்து அமைந்துள்ள சிறிய நகரமாக ஹெம்மதகம அமைந்துள்ளது. இப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு கிராமங்களில் வசிக்கும் குடும்பங்கள், ஒபினெல்ல ஆற்றிலிருந்து பெறும் வடிகட்டி, தூய்மைப்படுத்தப்படாத நீரையே பருகுகின்றன. இந்நிலையில் தூய குடிநீரை பெற்றுக் கொள்ளும் வசதி இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்பட்சத்தில், அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சமூகத்தார் மத்தியில் குறைந்த நோய்ப் பரவல்கள் மற்றும் சுகாதார கட்டமைப்பில் ஏற்கனவே காணப்படும் அழுத்தத்தை குறைப்பதற்கும் வழியேற்படுத்தும்.

Ballast Nedam அதன் தாய் நிறுவனமான Renaissance Construction உடன் இணைந்து இந்தத் திட்டத்தின் வடிவமைப்பிலிருந்து 17000 இல்லங்களுக்கு நீர்மானிகளை நிறுவுவது அடங்கலாக இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உதவிகளை வழங்கும். ஏழு நீர் நிலைகளை ஊடறுத்து 40 கிலோமீற்றர் தூரத்துக்கு நீர்க் குழாய்களை பொருத்தும் பணிகளை இந்தத் திட்டம் உருவாக்கி, 70 கிலோமீற்றர்களுக்கு அதிகமான பகுதிக்கு நீர் விநியோக வலையமைப்பை ஏற்படுத்தும். அத்துடன், நாளாந்தம் 21,000 m3 நீர் சுத்திகரிப்பை மேற்கொள்ளும் பகுதியும் நிறுவப்படும்.

இந்த நீர்க் குழாய்கள் பகுதியளவில் நிலத்துக்கு கீழாகவும், பகுதியளவில் நிலமட்டத்துக்கு மேலாக, பல குடியிருப்பாளர்களின் வளாகங்களினூடாக நிறுவப்படும். இதற்காக சகல தரப்பினரிடமிருந்து ஆட்சேபனை தெரிவிக்காமையை உறுதி செய்து அனுமதியைப் பெற்றுள்ளது. இதனூடாக, நீர் நிலைகளின் மேம்படுத்தல் நிர்மாணத்தின் 50% ஐ விட அதிகமாக அமைந்துள்ளதுடன், நீர் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்காக முதல் குழாய் பொருத்தும் பணிகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு மலைசார்ந்த பகுதி அதிகளவு அனுகூலம் வாய்ந்ததாக அமைந்திருப்பதாக Ballast Nedam கண்டறிந்தது. இதனூடாக, ஈர்ப்பு சக்தியை பயன்படுத்தி வெவ்வேறு உயர வேறுபாடுகளின் அடிப்படையில் நீர் விநியோகத்தை மேற்கொள்ள முடிந்துள்ளதுடன், எவ்வித நீர்பம்பிகளை கொண்டிருக்க வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்துள்ளது. இதன் காரணமாக, இந்தத் திட்டம் செலவு குறைந்ததாக அமைந்திருப்பதுடன், சூழலுக்கு நட்பானதாகவும் அமைந்துள்ளது என திட்ட அணி அறிவித்துள்ளது. இந்த சூழல் தாக்கம் தொடர்பில் நிறுவனம் ஆழமாக அக்கறை கொண்டுள்ளதுடன், வெற்றிகரமான செயற்பாட்டுக்கு இது அத்தியாவசியமான அமைந்திருப்பதாகவும் கருதப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 17 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை பின்பற்றி உலகளாவிய ரீதியில் Ballast Nedam தனது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. ஹெம்மதகமவில், ஈர்ப்பு விசை சார் மற்றும் பம்பி பாவனையற்ற ஒப்பற்ற நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதனூடாக இதனை இந்த அணி உறுதி செய்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை சார்பாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், இந்தத் திட்டத்துக்கான நிதி கையாளல்கள் நெதர்லாந்தின் ING வங்கிக்கு வெளிக்கள அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. தொற்றுப் பரவல் காரணமாக உள்நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், Ballast Nedam மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியன இணைந்து இந்தத் திட்டம் உரிய நேரத்தில் பூர்த்தி செய்யப்படுவதை நோக்கி செயலாற்றுகின்றன. Ballast Nedam இன் செயற்திட்ட முகாமையாளர் செர்கான் கும்பசார் கருத்துத் தெரிவிக்கையில், “ஹெம்மதகமவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இந்த தூய, வடிகட்டிய நீர் விநியோகத்தை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக, இப்பிரதேசத்தில் சமூகபொருளாதார வசதிகளை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என நாம் கருதுகின்றோம். இதன் காரணமாக நாம் கொவிட்-19 உடன் தொடர்புடைய எவ்விதமான தடைகளையும் பொருட்படுத்தாது இந்தத் திட்டத்தை உரிய நேரத்தில் பூர்த்தி செய்து எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் அமையச் செய்து வழங்குவது தொடர்பில் பணியாற்றுகின்றோம்.” என்றார்.


Share with your friend
Exit mobile version