Eyeview Sri Lanka

Baurs நிறுவனத்தின் அனோஜா பஸ்நாயக்கவுக்கு Global CEO Top Businesswomen Awards 2025 இல் கௌரவிப்பு

Share with your friend

Baurs என அழைக்கப்படும் A. Baur & Co. (Pvt.) Ltd இன் தகவல் தொழினுட்ப பணிப்பாளர் அனோஜா பஸ்நாயக்க, அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Global CEO Top Businesswomen Awards 2025 நிகழ்வில், செல்வாக்கும் செலுத்தும், தொலைநோக்குடைய பெண்களுக்கான உயர் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டார். இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ‘Celebrating Power, Purpose, and Pioneering Success’ எனும் தொனிப்பொருளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஜுன் 25ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

A. Baur & Co. (Pvt.) Ltd இன் தகவல் தொழினுட்ப பணிப்பாளர் அஜோனா பஸ்நாயக்க

முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், பரந்தளவு தொழிற்துறைகளின் 400 க்கும் அதிகமான நிறைவேற்று அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். புத்தாக்கம், மீட்சி மற்றும் நோக்கு ஆகியவற்றினூடாக வியாபாரங்களை மாற்றியமைப்பதில் பங்களிப்பு வழங்கியிருந்த அதிசிறந்த பெண் தலைமையாளர்களின் சாதனைகளை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

இலங்கையின் கூட்டாண்மை துறையில் தமது செல்வாக்குச் செலுத்தும் தாக்கம் மற்றும் டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளில் சிறந்த தலைமைத்துவம் வழங்கியிருந்தமை போன்றவற்றுக்காக அனோஜா கௌரவிக்கப்பட்டார். இரண்டு தசாப்த காலப்பகுதி வரை பரந்த தொழில் அனுபவத்தைக் கொண்டுள்ள அனோஜா, டிஜிட்டல் ரீதியில் எதிர்காலத்துக்கு தயாரான நிறுவனமாக Baurs’ ஐ தயார்ப்படுத்தியிருந்ததில் முக்கிய பங்காற்றியிருந்தார். அத்துடன், அவற்றில் cloud-first மூலோபாயங்கள், தரவுகள் அடிப்படையிலான தீர்மானமெடுத்தல்கள் மற்றும் உள்ளடக்கமான தொழினுட்ப செயன்முறைகள் போன்றன அடங்கியிருந்தன.

SAP Analytics Cloud Live reporting உடன் SAP S/4 HANA 2020 cloud deployment ஐ மேற்கொண்ட செயற்பாடுகளை மேற்பார்வை செய்திருந்த Baurs இன் செயற்திட்ட பணிப்பாளராக இவர் திகழ்ந்தார். இலங்கையில் அக்கால கட்டத்தில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருந்த முதலாவது நிறுவனமாக Baurs திகழ்ந்தது. இலங்கை கணனி சங்கத்தின் அறிமுக தேசிய CIO நிரல் 2023 இல் அனோஜா உள்ளடக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

2008 ஆம் ஆண்டில் Baurs உடன் Manager IT ஆக இணைந்து கொள்வதற்கு முன்னதாக, Brandix, PricewaterhouseCoopers, மற்றும் Hayleys போன்ற முன்னணி நிறுவனங்களில் அனோஜா பணியாற்றியிருந்தார். மேலும், Project Management Institute, USA Colombo Chapter இன் நிபுணத்துவ விருத்திக்கான உப தலைவராகவும் அனோஜா திகழ்கிறார். அவர் ஒரு சான்றளிக்கப்பட்ட Project Management Professional (PMP) ஆக திகழ்வதுடன், Sri Lanka Institute of Directors (SLID) இன் அங்கத்தவராகவும் திகழ்கின்றார். மேலும், SLID இன் புத்தாக்கம் மற்றும் தொழினுட்ப குழுவின் அங்கத்தவராகவும் இவர் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Exit mobile version