Eyeview Sri Lanka

Baurs Healthcare இலங்கைக்கு உலகத்தரம் வாய்ந்த சுகாதார பராமரிப்பை கொண்டு வருவதில் 80 வருட பூர்த்தியை கொண்டாடுகிறது

Share with your friend

இலங்கையில் பன்முகப்படுத்தப்பட்ட துறைகளில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முன்னணி நிறுவனமும், Baurs என அறியப்படும் A. Baur & Co. (Pvt) Ltd., இன் சுகாதாரபராமரிப்பு பிரிவான Baurs Healthcare, இந்த ஆண்டில் தனது 80 ஆவது வருட பூர்த்தியை பெருமையுடன் கொண்டாடுகிறது. தாய் நிறுவனத்தின் 128 ஆவது வருட பூர்த்தி கொண்டாடப்படும் நிலையில், சுகாதாரபராமரிப்பு பிரிவு தனது 80 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றமை விசேட அம்சமாகும். 

1945 ஆம் ஆண்டு Baurs Healthcare நிறுவப்பட்டது முதல், இலங்கையின் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதில் தன்னை அர்ப்பணித்து செயலாற்றுவதுடன், உலகத் தரம் வாய்ந்த மருந்துகள், மருத்துவ தொழினுட்பங்கள், நோய் இனங்காணல்கள், சத்திர சிகிச்சை சாதனங்கள் மற்றும் மருத்துவ போஷாக்கு போன்றவற்றையும் உறுதி செய்கிறது. செம்மையாக்கம், ஒழுக்கம் மற்றும் சுவிஸ்-தர பெறுமதிகள் போன்றன சுமார் எட்டு தசாப்த கால சிறப்புக்கு உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூகங்களின் நலனில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு, வியாபார வெற்றிகரத்தன்மை மற்றும் சமூக தாக்கத்துடன் பொருந்துவதாக அமைந்துள்ளது.

கடந்த காலங்களில், சர்வதேச ரீதியில் காணப்படும் பெருமளவான சுகாதார பராமரிப்பு முன்னோடிகளுடன் Baurs Healthcare மூலோபாய பங்காண்மைகளை ஏற்படுத்தியுள்ளன. முன்னணி சர்வதேச வர்த்தக நாமங்களான GSK, Fresenius Medical Care, Nestlé Health Science, Roche, Sanofi, Isispharma, OMRON, Viatris (formerly Mylan), Sandoz, Ajanta Pharma, Novartis, Alcon, Mega, Merck, Dexa, Eisai, MSD, Encube, CheplaPharm, Johnson & Johnson, Apex, Vitrolife, Unichem, Rohto, Medtronic, Welch Allyn, Becton Dickinson, மற்றும் Geister போன்றவற்றுடன் மேலும் பலதுடன் நிறுவனம் பிரதிநிதித்துவம் மற்றும் விநியோகத்துவ உரிமை உடன்படிக்கையை கொண்டுள்ளது. இந்த மூலோபாய பங்காண்மைகளினூடாக, இலங்கையர்கள் மத்தியில் உயர்தரம் வாய்ந்த சுகாதார பராமரிப்பு தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முக்கியமான பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Baurs இன் பிரதம நிறைவேற்று அதிகாரி/முகாமைத்துவ பணிப்பாளர் ரொல்ஃப் பிளாசர் கருத்துத் தெரிவிக்கையில், “சுகாதார பராமரிப்பு பிரிவின் 80 வருட பூர்த்தி மற்றும் Baurs இன் 128 வருட பூர்த்தி போன்ற இந்த மைல்கற்களை கொண்டாடும் வகையில் – சுகாதார பராமரிப்பு அணுகல், தரம் மற்றும் சகாயத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான எமது நோக்கத்தை நாம் மீள உறுதி செய்கிறோம். சர்வதேச மருத்துவ புத்தாக்க முன்னிலைத் தன்மை மற்றும் இலங்கை மக்களுக்கிடையேயான பிணைப்பாக செயலாற்றுவதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். எமது உயரதிகாரிகள், பங்காளர்கள், வைத்தியசாலைகள் மற்றும் முக்கியமான நாம் சேவையாற்றும் நோயாளர்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக எமது வெற்றிகரமான செயற்பாடு அமைந்துள்ளது.” என்றார்.

Baurs இன் சுகாதார பராமரிப்பு பணிப்பாளரும், பிரதி முகாமைத்துவ பணிப்பாளருமான நிஷாந்த வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது உயரதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் பரந்த பங்காளர் வலையமைப்புடன் பேணி வரும் நிலைபேறான வளர்ச்சி மற்றும் ஆழமான உறவுகள், பல தசாப்த கால தங்கியிருக்கும் சேவை, தரம் மற்றும் பகிரப்பட்ட நோக்கை தேசிய சுகாதார மேம்பாட்டுக்காக வழங்குகிறன. அவசர சிகிச்சை மற்றும் அவசர நிலைகளின் போது எம்மால் ஆதரவளிக்கக்கூடிய ஆற்றல் தொடர்பில் நாம் பெருமை கொள்கின்றோம்.” என்றார்.

தனது 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஒரு பகுதியாக, Baurs Healthcare, தினசரி பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக கிராண்ட்பாஸில் ஒரு புதிய பேருந்து நிறுத்தத்தை நிர்மாணித்தல், 1990 தேசிய அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையின் ‘ஒரு ஆம்புலன்ஸ் தத்தெடுப்பு’ திட்டத்தின் கீழ் நோயாளர் காவு வண்டி புதுப்பித்தல், பிளாஸ்டிக் மாசுபாட்டை கூட்டாக எதிர்த்துப் போராடுவதற்காக மற்ற Baurs பிரிவுகளுடன் இணைந்து கடற்கரை சுத்தம் செய்யும் பிரச்சாரம் மற்றும் இளம் நோயாளிகளுக்கு ஆறுதல் மற்றும் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்தும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவை புதுப்பித்தல் உள்ளிட்ட பல சமூக நலத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் ISO 9001 மற்றும் ISO 22000 சான்றிதழ்களை வைத்திருக்கும் ஒரே சுகாதார நிறுவனம் என்ற அந்தஸ்தில் Baurs Healthcare இன் தரத்திற்கான நற்பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேமிப்பு, விநியோகம் மற்றும் செயற்பாடுகளில் அதன் கடுமையான தரநிலைகளால் ஆதரிக்கப்படுகிறது. இந்தப் பிரிவு 20,000 சதுர அடி ambient temperature-controlled warehouse ஐ இயக்குகிறது. அதோடு தொடர்ச்சியான வெப்பநிலை பதிவு, ரிமோட் சென்சிங் அலாரங்கள் மற்றும் காப்பு சக்தியுடன் கூடிய 1,500 கன அடி குளிர் சேமிப்பு வசதியையும் இயக்குகிறது. இது WHO நல்ல சேமிப்பு நடைமுறைகள் (GSP) மற்றும் அனைத்து முக்கிய கூட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் இணங்குவதை உறுதி செய்கிறது. இந்த திறன்கள் Baurs இலங்கையில் எங்கும் 24 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர் ஓடர்களை வழங்க உதவுகின்றன. கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்குள் அவசர ஓடர்கள் கையாளப்படுகின்றன.

மறுபகிர்வு மென்பொருள் மற்றும் டிஜிட்டல் விற்பனைப் படை ஒடோமேஷன் போன்ற அதிநவீன தொழினுட்பத்தால் இயக்கப்படும் Baurs Healthcare, விநியோகச் சங்கிலி செயல்முறைகளை மேம்படுத்துவது, ஓடர் இடங்களை ஒழுங்குபடுத்துவது மற்றும் வாடிக்கையாளர் மற்றும் நோயாளி தேவைகள் குறித்த முக்கியமான நுண்ணறிவுகளைப் பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கி்றது. அதன் நாடு தழுவிய விநியோக வலையமைப்பு அத்தியாவசிய மருந்துகள், நோயறிதல்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் சரியான நேரத்தில், நம்பகமான கிடைப்பை உறுதி செய்கிறது – நாடு முழுவதும் சுகாதார சமத்துவத்தை மேம்படுத்துகிறது.

இந்த இரட்டை மைல்கல்லை நினைவுகூரும் வேளையில், Baurs Healthcare அதன் புதுமை, நம்பகத்தன்மை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் பாரம்பரியத்தை கட்டியெழுப்ப தயாராக உள்ளது. இந்தப் பிரிவு புதிய கூட்டாண்மைகளை ஆராய்வது, உட்கட்டமைப்பு மற்றும் புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த விநியோகச் சங்கிலி தீர்வுகளில் முதலீடு செய்வது மற்றும் மருத்துவ மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களை ஆதரிப்பது ஆகியவற்றைத் தொடரும். இந்த முயற்சிகள் மூலம், எதிர்காலத்தில் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டில் இலங்கையின் முதன்மையான பங்காளியாக தனது பங்கை வலுப்படுத்த Baurs உறுதியாக உள்ளது.


Share with your friend
Exit mobile version