Eyeview Sri Lanka

Bocuse d’Or Sri Lanka 2025 சமையல் கலை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று Cinnamon Life சாதனை

Share with your friend

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த சுற்றுலா விடுதியான Cinnamon Life at City of Dreams Sri Lanka, அண்மையில் நடைபெற்ற Bocuse d’Or Sri Lanka 2025 போட்டியில் முதலிடம் பிடித்து, மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில் பல முன்னணி ஹோட்டல்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ள Cinnamon Life, நாட்டின் உயர்தர உணவுப் பரிமாறல் மற்றும் சமையல் நுட்பத்தில் தனது சிறப்பை நிரூபித்து உணவுக் கலைத் துறையில் புதிய தரநிலைகளை அமைத்துள்ளது

Bocuse d’Or ஆசியாவுக்கான இந்த மதிப்புமிக்க தேசிய ரீதியிலான போட்டியில் இலங்கை முழுவதிலுமிருந்து 26 சிறந்த சமையல் குழுக்கள் பங்கேற்றன. இதில் Cinnamon Life ஐ பிரதிநிதித்துவப்படுத்திய நிலுபுல் சந்தகெலும் மற்றும் ஆதித்ய ஃபொன்சேகா ஆகிய இருவரும் தனித்துவமான தொழில்நுட்பம், கலைத்திறன் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றனர். இவர்களின் செயல்திறன், Cinnamon Life சமையல் குழுவின் படைப்பாற்றல் மற்றும் துல்லியத்திற்கான சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

இந்த வெற்றிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், ஆதித்ய ஃபொன்சேகா சிறந்த கொம்மிஸ் (உதவி) சமையல்காரர் விருதை வென்றார். ஹோட்டலின் நிறைவேற்று துணை சமையல் கலைஞரான சாமக பெரேராவின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்ற ஃபொன்சேகா, இப்போட்டியின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் சமையல் திறமைக்கு வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

இந்த வெற்றி தொடர்பில் Cinnamon Life at City of Dreams Sri Lanka-வின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பொது முகாமையாளர் சஞ்சிவ் ஹுலுகல்லே கருத்து தெரிவிக்கையில், “Bocuse d’Or Sri Lanka 2025போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று வந்ததில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். இது எங்கள் குழுவிற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, மாறாக, பிராந்தியத்தில் சமையல் சிறப்பின் ஒளிவிளக்காக Cinnamon Life ஐ நிலைநிறுத்தும் எங்களது தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்த வெற்றியாகும்.” என தெரிவித்தார். இந்த தேசிய ரீதியிலான வெற்றியுடன், Cinnamon Life சர்வதேச சமையல் கலை அரங்கில் தனது இடத்தை உறுதிசெய்துள்ளதுடன், இலங்கையில் புத்தாக்கம், வழிகாட்டுதல் மற்றும் உலகத்தரம் வாய்ந்த உணவுக் கலாச்சாரத்தின் முக்கிய மையமாக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. கொழும்பின் தனித்துவமான வாழ்க்கைமுறை இருப்பிடமாக, Cinnamon Life விருந்தோம்பல் துறையின் அனைத்து அம்சங்களிலும் படைப்பாற்றல், ஆடம்பரம் மற்றும் மிகச்சிறந்த தரத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தொடர்ந்து முன்னோடியாக திகழ்கிறது.


Share with your friend
Exit mobile version