Site icon Eyeview Sri Lanka

Bodyline நிறுவனம் பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு 3000 லீட்டர் ஒட்சிசன் தாங்கியை நன்கொடையளித்துள்ளது

Share with your friend

ஆடைகள் மற்றும் நெசவு உற்பத்தி செய்யும் பெரு நிறுவனமான MAS Holdings இன் கூட்டு வர்த்தக நிறுவனமான Bodyline நிறுவனம் ஆனது 2021 ஒக்டோபர் 01 ஆம் திகதியன்று பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு 3000 லீட்டர் ஒட்சிசன் தாங்கியை நன்கொடையாக வழங்கியுள்ளது. பிம்புர பிரதேசத்தில் உள்ள கொவிட்-19 நோயாளர்களுக்கு ஒட்சிசன் வழங்குவதற்கான அவசர தேவைக்கு உதவும் வகையில் MAS தலைமைத்துவத்தின் வழிகாட்டலில் மூன்று Bodyline தொழிற்சாலைகளின் ஆதரவுடன் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோயின் 3 ஆவது அலைக்கு மத்தியில் பிம்புர ஆதார வைத்தியசாலையின் நோயாளர்கள் எதிர்கொள்ளும் தீவிர சிகிச்சைக்கான இடர்பாடுகள் குறித்து கவலை தெரிவித்த வைத்தியசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் ஒட்சிசன் தாங்கி வழங்கப்பட்டது.

Bodyline நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தினேஷ் டி சில்வா, உற்பத்தித் துறை பணிப்பாளரான சமந்த செனவிரத்ன மற்றும் மனித வளங்கள் மற்றும் நிலைபேண்தகு வணிகச் செயற்பாடுகளுக்கான பணிப்பாளரான வெனுர அத்தநாயக்க மற்றும் Bodyline II நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான பொது முகாமையாளரான எரங்க வீரசிங்க, மனித வளத் துறை முகாமையாளரான கமணி குணசேகர ஆகியோர் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். சுகாதார அமைச்சு மற்றும் பிம்புர பிரதேச செயலகத்தின் அரசாங்க அதிகாரிகள், பிற பொது சுகாதார அதிகார சபைகளின் அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

“பிம்புர மாவட்டப் பகுதியில் உள்ள பாரதூரமான நோயாளர்களுக்கு ஒட்சிசனை வழங்குவதற்கு Bodyline நிறுவனம் முன்னெடுத்த முயற்சியால் நாம் பெருமிதம் கொள்கிறோம்,” என்று Bodyline நிறுவனத்தின் மனித வளங்கள் மற்றும் நிலைபேண்தகு வணிகச் செயற்பாடுகளுக்கான பணிப்பாளரான வெனுர அத்தநாயக்க அவர்கள் குறிப்பிட்டார். “இத்தகைய உதவி தேவைப்படுகின்ற நேரங்களில், நாங்கள் செயல்படும் சமூகங்களுக்கு பெறுமதி மற்றும் சேவையை வழங்குவதில் MAS திடசங்கற்பம் பூண்டுள்ளது,” என்று தொடர்ந்தும் குறிப்பிட்டார்.  

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குளியாப்பிட்டி வைத்தியசாலைக்கு MAS நிறுவனத்தால் 6000 லீட்டர் ஒட்சிசன் ஆலை நன்கொடையாக வழங்கப்பட்டது. MAS ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் மற்ற நோயாளர்கள் உட்பட கொவிட்-19 நோயாளர்களின் தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் விசேட மருத்துவ வசதிகளுடன் பல்வேறு இடைநிலை பராமரிப்பு மையங்களை MAS நாடு முழுவதும் அமைத்துள்ளது.


Share with your friend
Exit mobile version