CAMON 17 சீரிஸை அறிமுகப்படுத்திய Tecno Mobile; தனது தரக்குறியீட்டின் புதிய தூதராக சூப்பர் ஹீரோ Chris Evans அறிவிப்பு

Share with your friend

வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான TECNO அதன் சமீபத்திய மாதிரியான CAMON 17 இனை அறிமுகப்படுத்தியுள்ளது. அன்ட்ரொய்ட் சார்ந்த ஸ்மார்ட்போனான இது, அதிநவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. இத்தொலைபேசியில் அதனை ஈர்க்கக்கூடிய MediaTek Helio G85 (12 nm) chipset, Octa-core (2×2.0 GHZ Cortex-A75 & 6/18 GHz Cortex-a55) processor ஆகியவற்றைக் கொண்டுள்ளதோடு Android11, HIOS 7.6 OS மூலம் இயக்கப்படுகிறது. CAMON 17 இன் பிரதான கெமரா 48MP மற்றும் செல்பி புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற 16MP கொண்ட முன் கெமராவினையும் கொண்டுள்ளது. 9mm தடிப்பம் கொண்ட இது உள்ளங்கையில் வைத்திருக்க வசதியாக பொருந்துகிறது. நேர்த்தியான வடிவமைப்புடன் வெள்ளி நிறத்தில் (Frost Silver) கிடைக்கிறது.

டெக்னோவின் வளர்ந்து வரும் சாதனங்களில் சமீபத்திய வெளியீடு குறித்து Tecno Mobile – Sri Lanka  பணிப்பாளர் Ray Zhao தெரிவிக்கையில், “எமது சமீபத்திய சாதனமான CAMON 17 இனை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் நாம் பெரு மகிழ்ச்சியடைகிறோம். CAMON 17 ஆனது சராசரி உள்ளூர் பயனருக்கு கைக்கடக்கமான, விலைக்கேற்ற ஸ்மார்ட்போன் ஆகும். இக்கையடக்கத் தொலைபேசி ஒரு செயல்திறன் மிக்க processor கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இது ஒரு நேர்த்தியான உள்ளமைப்பு மற்றும் சிறந்த கெமரா ஆகியவற்றைக் கொண்டு பூர்த்தி செய்யப்பட்டு, ஒரு வித்தியாசமான பயனர் அனுபவத்தை வழங்குகின்றது. ஒரு தரக்குறியீடு என்ற வகையில், சமீபத்திய தொழில்நுட்பத்தை மக்கள் அணுகுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இதன்மூலம் அவர்கள் இன்றைய வேகமான உலகின் சாத்தியக்கூறுகள் கொண்ட உலகத்தை அவர்களால் காண முடியும்.” என்றார். CAMON 17 இன் வெளியீடானது, SPARK 7, SPARK 7 pro, CAMON 17 pro & Pova 2 ஆகிய ஏனைய நான்கு மாதிரிகளின் வெளியீட்டோடு ஒத்துப்போகிறது. புதிய சாதனங்களின் வரிசையும் பயனர்களிடையே இதேபோன்ற சிறந்த வரவேற்பைப் பெறும் என்று தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்களது உலகமயமாக்கல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, TECNO தரக்குறியீடு அண்மையில் ஹெலிவூட் பிரபலமான Chris Evans இனை அதன் தூதராக நியமித்துள்ளது. வளர்ந்து வரும் இந்த ஸ்மார்ட்போன் தரக்குறியீடு உடனான தனது இணைவு குறித்து ஹொலிவூட்டின் உச்சத்திலுள்ள எவன்ஸ் தெரிவிக்கையில் “டெக்னோவுடன் கூட்டு சேருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது வளர்ந்து வரும் சந்தைகளுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை வழங்குவதில் கவனம் செலுத்தும் ஒரு புதுமையான தரக்குறியீடாகும். அந்த வகையில் அதன் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதன் தத்துவமான ‘Stop at Nothing’ என்பதற்கு அமைவானதாகும்.”

CAMON 17/17 Pro கெமராக்களின் எல்லையற்ற திறன்களை நிரூபிக்கும் ஒரு ‘ Rise of the Selfie’ எனும் கிறிஸ் எவன்ஸ் நடித்த ஆவணப்படமும் இவ்வெளியீட்டின் ஒரு பகுதியாக இருக்கும். CAMON 17 என்பது ஒரு இலட்சிய வடிவமைப்பாகும், இது இன்றைய சந்தையில் ‘தெளிவான செல்பி கெமரா’ என்று பெருமையை கொண்டுள்ளது.

நடிகை மற்றும் மாடல் ரோஷல் ரோஜர்ஸ், சினிமா கதைஆசிரியர் Cjay மற்றும் பயண வீடியோ பதிவாளர், greenfolk_girl என அழைக்கப்படும் மாஷி மற்றும் சஹன் பெரேரா உள்ளிட்ட உள்ளூர் பிரபலங்களால் இதன் உள்ளூர் வெளியீட்டு நிகழ்வு அலங்கரிக்கப்படவுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் உத்தியோகபூர்வ டெப்லெட் மற்றும் கையடக்கத் தொலைபேசி பங்காளரான TECNO, உள்ளூர் மற்றும் உலகளாவிய பிரபலங்களுடனான தொடர்புகளை பேணி வருகின்றது.

புதிதாக இத்துறையில் நுழைந்தவராக இருந்தபோதிலும், AI- மேம்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றில் புதுமைகளுடன் வெளியான சில தரக்குறியீடுகளில் TECNO வும் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. வன்பொருள் மற்றும் மென்பொருளை ஒருங்கிணைக்கும் புத்திசாலித்தனமான அமைப்பை உருவாக்க, ஆய்வு மற்றும் அபிவிருத்தியில் முதலீட்டை வலுப்படுத்த TECNO உறுதிபூண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், TECNO வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடு வருடாந்தம் சுமார் 30% ஆக அதிகரித்துள்ளது.

டெக்னோ 2020 ஆம் ஆண்டில் டென்னிஸ் கோர்ட்டின் அளவை கொண்ட உலகின் மிகப்பெரிய புத்தகத்தை (flip book) அறிமுகப்படுத்தியபோது அது தொடர்பில் பேசப்பட்டு வந்ததுடன், இதன் மூலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இணைந்தது. இந்த flip book திட்டம், தரக்குறியீட்டின் ஆபிரிக்காவிற்கான விரிவாக்கத்துடன் இணைந்து, CAMON 15 Premier மூலம் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதில் காண்பித்தது. 2020 ஆம் ஆண்டில் அண்டை நாடான இந்தியாவில் மட்டும் வருடாந்தம் 200% விற்பனையாக உயர்ந்து அதன் உலகளாவிய சந்தை பங்கை விரிவுபடுத்தியதன் மூலம் இத்தரக்குறியீட்டின் மற்றுமொரு சாதனையாகும்.

இந்த வெளியீட்டு நிகழ்வின் நேரடி நிகழ்வை பயனர்கள் எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு TECNO Mobile இன் உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் யூடியூப் கணக்குகள் ஊடாக பார்வையிடுவதன் மூலம் அற்புதமான பரிசுகளை வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply