ChildFund Sri Lanka மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து ஹம்பாந்தோட்டையில் உள்ள தாய் மார் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு சிறுவர் பராமரிப்பு சான்றிதழ்களை வழங்கி வலுப்படுத்தியுள்ளது

Share with your friend

பிள்ளைகளைப் பேணி வளர்த்தல் மற்றும் குழந்தைப் பருவத்தை நோக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்குப் பலமான இணைப்பை ஏற்படுத்த பராமரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை ChildFund Sri Lanka அடையாளம் கண்டுள்ளது.

முறையான அங்கீகாரம், துறைசார் பயிற்சி ஊடாக பராமரிப்பாளர்களை வலுப்படுத்தும் முயற்சியின் முதற் கட்டமாக, அவர்களின் திறன்களை தரப்படுத்தவும், தெரிவுசெய்யப்பட்ட நபர்களுக்கு தேசிய தொழில் தகுதி (NVQ) சான்றிதழை வழங்க இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையுடன், ChildFund Sri Lanka புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு.எரங்க பஸ்நாயக்க மற்றும் ChildFund Sri Lanka இன் இலங்கைக்கான முகாமையாளர் திரு.நாளக சிறிவர்தன ஆகியோர் அண்மையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதுடன், தொழிற்பயிற்சி அதிகார சபை  மற்றும் ChildFund இன் சிரேஷ்ட அதிகாரிகளின் பிரசன்னத்துடன் இது இடம்பெற்றது. 

ChildFund Sri Lanka நிறுவனத்தினத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, ஒழுங்கானதும் அனைவராலும் அங்கீகரிக்கப்படுவதுமான தொழிற் பயிற்சியினையும், தொழில்துறை சார்ந்த பயிற்சியினையும் வலுப்படுத்தலையும் உறுதிப்படுத்துவதோடு தெரிவு செய்யப்பட்ட சிறுவர் பராமரிப்பாளர்களுக்கு  தேசிய தொழில் தகுதி (NVQ) சான்றிதழை வழங்கக் கூடிய வகையில்  பயிற்சிகளை வழங்கி வருவதாக திரு. எரங்க பஸ்நாயக்க அவர்கள் குறிப்பிட்டார். “தமது சகாக்களுக்கு அறிவையும் ஆலோசனையையும் வழங்குவதற்கான ஆற்றலைக் கொண்ட ‘முன்னோடித் தாய்மாருக்கு’ முறையானதும்  அங்கீகரிக்கப்பட்டதுமான பயிற்சியை வழங்கக் கூடிய வகையில்  இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.” என நாளக சிறிவர்த்தன அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 

‘முன்னோடித் தாய்மாருக்கான எமது செயல் திட்டமானது’ குழந்தை பராமரிப்புக்கான ஒரு சமூக நிறுவனமாக உருவாகி வருவதோடு, அதன் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான பராமரிப்பு வழங்கும் துறையில் பொருளாதார வாய்ப்பை வழங்குவதுடன், குழந்தைகளது வயதுக்கேற்ற வளர்ச்சியினையும் அபிவிருத்தியினையும் வழங்குவதற்கு உதவும் வகையில் அமைந்த தரமான சேவைகளையும் வழங்குகின்றது. சிறுவர்களது போசாக்கு  ரீதியான மேம்பாட்டிற்கும், அறிவாற்றல் விருத்திக்கும் உகந்த வகையில் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களின் நடத்தையிலும் மனப்பாங்கிலும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் அவர்களது அறிவை விருத்தி செய்வதற்கு இந் நிகழ்ச்சித் திட்டமானது சாதகமான பங்களிப்பினைச் செய்துள்ளது.  பெற்றோருக்குரிய இத்தகைமையானது, அவர்களது திறன்களைப் வலிமையாக்குவதோடு குழந்தைகளது வாழ்க்கையை மாற்றுவதற்கும் உதவும். 

முதலாவது பயிற்சித் திட்டானது, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள மெதமூலன தொழிற் பயிற்சி அதிகாரசபையின் பயிற்சி நிலையத்தில் 15 தாய்மார்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கான பாடநெறிக்கான கட்டணம், பயிற்சிக்கான உபகரணங்கள் உள்ளிட்ட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ChildFund Sri Lanka நிறுவனம் வழங்குகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிற்பயிற்சி அதிகார சபையானது, பங்கேற்பாளர்கள் பதிலளிக்கக்கூடிய பராமரிப்பு மற்றும் ஆரம்பகால கற்றல் வளர்ச்சியை வழங்குவதை உறுதி செய்வதற்காக, அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட பராமரிப்பாளர்களை வலுப்படுத்தும் வகையில் பொருத்தமானதும் நெகிழ்வானதுமான  பயிற்சியை வழங்கும். இப் பயிற்சி நெறியானது பயிற்சியாளர்களின் தொழில் வாய்ப்பினையும் மேம்படுத்துகிறது. இப் பயிற்சி நெறியில் கலந்து கொண்டு பயிற்சி நெறியை முழுமையாகப் பூர்த்தி செய்பவர்களுக்கு “குழந்தைப் பராமரிப்பிற்கான தரம் 3 தேசிய தொழில் தகுதி (NVQ) சான்றிதழ்” வழங்கப்படும்.

ChildFund Sri Lanka நிறுவனத்தின் முன்னோடித் தாய்மாருக்கான நிகழ்ச்சித் திட்டத்தில் தொண்டர்களாகப் பணியாற்றிய தாய்மார்களுக்குப் பயிற்சிகளை வழங்குதல், கல்விமான்கள், வழிகாட்டுனர்கள், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முகவர்கள் என பல விதங்களில் ஏற்கனவே சமூகத்தில் மிக முக்கியமான இலகுபடுத்துநர்களாக விளங்குபவர்ளே இப் பயிற்சி நெறிக்காக தெரிவுசெய்யப்பட்ட பங்குபற்றுனர்களாக விளங்குகின்றனர். 

ChildFund Sri Lanka நிறுவனத்தினால், மேற்கொள்ளப்பட்டுவரும் இடையீடுகளில் மிகவும் வெற்றிகரமான ஓன்றாக “முன்னோடித்தாய்மார்” நிகழ்ச்சித் திட்டம் இனங்காணப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சித் திட்டமானது, பிள்ளைகளைச் சீரிய முறையில் வளர்த்து ஆளாக்குதல் (positive parenting) தொடர்பான அறிவை விருத்தி செய்தல், குழந்தைகளின் போசாக்கு மற்றும் அபிவிருத்தியில் தாய்மாரின் ஈடுபாட்டைப் பலப்படுத்தல், பயிற்சி பெற்ற பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள் தாம் பெற்ற அறிவினைத் தமது சகாக்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் சமூகத்திற்குள் அதனை ஊடுருவச் செய்தல் போன்ற நடைமுறைகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.     சுர்வதேச அரச சார்பற்ற நிறுவனமான ஊhடைனகுரனெ நிறுவனமானது நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் சிறுவர்கள் தமது முழுமையான ஆற்றலை விருத்தி செய்யக் கூடிய வகையிலான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ChildFund நிறுவனமானது ஆரோக்கியமானதும் பாதுகாப்பானதுமான சிசுக்கள், கற்றுத் தேர்ந்தவர்களாகவும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் விளங்கும் சிறுவர்கள் மற்றும் உறுதியான சிறுவர்கள், செயல் திறனும் ஈடுபாடும் தன்மையும் மிக்க இளைஞர்கள் ஆகியோரை உருவாக்கும் ChildFund நிறுவனமானது சிசுக்களுக்கு ஆரோக்கியமானதும், பாதுகாப்பானதுமான சூழலை உருவாக்குவதும், அச்சிறுவர்கள் கல்வி கற்றுத் தேர்ந்தவர்களாகவும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் உறுதியான செயல் திறனும் ஈடுபாட்டுத் தன்மையும் மிக்க இளைஞர்களாகவும் அவர்களை உருவாக்குதல்  போன்ற விடயங்களில்  ChildFund Sri Lanka நிறுவனம் தொடர்ந்தும் இடையீடுகளைச் செய்து வருகின்றது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply