Christell Luxury Wellness இனால் தமது சொந்த வர்த்தக நாமத்திலமைந்த சரும, கூந்தல் மற்றும் உடல் பராமரிப்புத் தெரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. “CHRISTELL” எனும் வர்த்தக நாமத்திலமைந்த இந்தத் தெரிவுகள், நிறுவனத்தின் விரிவாக்கச் செயற்பாடுகளின் அங்கமாக அமைந்துள்ளது. ஒக்டோபர் 30 ஆம் திகதி கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் இடம்பெற்ற இந்த அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு, இந்த புதிய சரும மற்றும் கூந்தல் பராமரிப்புத் தெரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.
“CHRISTELL” இன் சகல தயாரிப்புகளிலும் பசுமையான மற்றும் உயர் தரம் வாய்ந்த மூலப்பொருட்கள் அடங்கியுள்ளதுடன், இலங்கையின் இயற்கையான குணப்படுத்தும் சுதேச மூலிகைகளைக் கொண்டு, நவீன விஞ்ஞான மருத்துவ முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதால், சிறந்த பெறுபேறுகளை வழங்கும் வகையில் அமைந்திருக்கும். சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மாசுகள் மற்றும் அசேதன உள்ளம்சங்களற்ற தயாரிப்புகளாக அமைந்திருப்பதுடன், ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. சகல மூலப் பொருட்களும், அவற்றின் உச்ச காலகட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு பெறப்படுகின்றன. பாரம்பரிய தயாரிப்புச் செயன்முறைக்காக தாவரத்தின் செயல்நிலையிலுள்ள அங்கம் மாத்திரமே பெறப்படுகின்றது. உள்நாட்டு உற்பத்திச் செயன்முறைகளினூடாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஆதரவளிப்பதுடன், உள்நாட்டு விவசாயச் சமூகத்துக்கும் ஆதரவளிப்பதாக அமைந்திருக்கும்.
சருமப் பராமரிப்புத் தயாரிப்புகளினூடாக சருமத்தை மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல், ஒட்டுமொத்த சுகாதாரம் மற்றும் நலனில் தாக்கம் செலுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. Christell Skin Clinic இன் மருத்துவ பணிப்பாளரான வைத்தியர். ஷானிகா அரசகுலரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “பாதுகாப்பற்ற சருமப் பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்தியிருந்ததால் எமது பல வாடிக்கையாளர்கள் பாரதூரமான பின்விளைவுகளுக்கு முகங்கொடுத்திருந்ததை நாம் அவதானித்தோம். துரதிர்ஷ்டவசமாக இந்த எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளது.” என்றார்.
Christell Skin Clinic இன் பணிப்பாளர் பேராசிரியர். ரமணி அரசகுலரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த காலங்களிலிருந்தே எமது வாடிக்கையாளர்கள் தமக்கு பொருத்தமான சருமப் பராமரிப்புத் தெரிவுகளை எம்மிடம் கேட்ட வண்ணமிருந்தனர். இலங்கையின் அழகியல் துறையில் முன்னோடியாக Christell Skin Clinic அமைந்திருப்பதுடன், நவீன, துளையிடாத சிகிச்சை முறைகளை சகல சரும, கூந்தல் மற்றும் உடல் பராமரிப்புத் தேவைகளுக்காகவும் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வழங்குகின்றது. எமது நிபுணத்துவத்தையும், சிகிச்சைசார் அறிவையும் பயன்படுத்தி, எமது சொந்த தயாரிப்புத் தெரிவை அறிமுகம் செய்வதற்கு இது சிறந்த தருணமாக அமைந்துள்ளதென நாம் தீர்மானித்தோம். எமது உலகத் தரம் வாய்ந்த சருமவியல் சேவைகளின் நீடிப்பாக இந்த அறிமுகம் உள்ளது.” என்றார்.
CHRISTELL தயாரிப்புத் தெரிவுகளை, Christell Skin Clinic இன் ஒன்லைன் விற்பனைப் பகுதியிலும், நாடு முழுவதிலுமுள்ள அதன் சகல சிகிச்சை நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.