இலங்கையின் தளவாடங்கள், விநியோக சங்கிலி மற்றும் போக்குவரத்து துறையில் முன்னணி தொழில்முறை அமைப்பான Chartered Institute of Logistics and Transport Sri Lanka (CILT SL) ஆனது, Chartered Institute of Logistics and Transport இன் உலகளாவிய முதன்மை நிகழ்வான CILT International Convention 2025 இனை நடத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இம்மதிப்புமிக்க மாநாடு 2025 செப்டம்பர் 14 முதல் 17 ஆம் திகதி வரை கொழும்பில் உள்ள Cinnamon Life – City of Dreams இல், “எதிர்காலத்திற்கு தயாரான தளவாடங்கள்: மாற்றத்தை ஏற்றுக்கொண்டு நிலைத்தன்மையை மேம்படுத்தல்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது.

இம்மாடானானது உலகளாவிய தளவாடங்கள் மற்றும் போக்குவரத்தில் ஒரு முக்கிய மாநாடாகும். இது 30 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 150 இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் பங்கேற்பில், அரச அதிகாரிகள், தூதர்கள், உலகளாவிய தொழில் தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் அனைத்து வகையான போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி துறைகளைச் சேர்ந்த தொழில்முறையினர் பங்கேற்பில் நடைபெறும். இந்நான்கு நாள் மாநாட்டின் நிரலில் உலகப் புகழ்பெற்ற வல்லுநர்களின் முக்கிய உரைகள், செய்முறை ரீதியான பயிற்சிகள் மற்றும் தொழிலொன்றை வடிவமைக்கும் சமீபத்திய போக்குகள், புதுமைகள் மற்றும் சவால்களை ஆராயும் குழுவின் கலந்துறையாடலும் இடம்பெறும். பிரதிநிதிகள் மதிப்புமிக்க தொடர்பாடல் வாய்ப்புகளையும் சிறப்பான தொழில்களை பாராட்டும் மதிப்புமிக்க CILT விருது விழாவிலும் கலந்து கொள்வார்கள். கலாச்சார சுற்றுப்பயணங்கள் மற்றும் அனுபவங்கள், இலங்கையின் பண்பாட்டு பாரம்பரியத்தை வெளிப்படுத்தி, சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை மேலும் மேம்படுத்தவுள்ளது.
CILT SL இன் தலைவர் சந்திம ஹுலங்கமுவ இம்மாநாட்டை நடத்துவதை பற்றி குறிப்பிடுகையில் “இந்நிகழ்வானது இலங்கை மற்றும் உலகளாவிய தளவாட சமூகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்” எனக் குறிப்பிட்டார். மேலும் இம்மாநாடு பரஸ்பர இணைப்பு மற்றும் சிக்கலான உலகில் முக்கியமான கருப்பொருள்களான தொழில்நுட்ப முன்னேற்றங்கள், விநியோக சங்கிலி உத்திகள், சுழற்சித்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை ஆராயும் என்றும் அவர் குறிப்பிட்டார். “தொழிலின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய பிரதிநிதிகளுடன், இது அறிவு பரிமாற்றம், புதுமைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் இலங்கையை தெற்காசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியங்களில் ஒரு போட்டித்தன்மை மிக்க தளவாட மையமாக நிலைநிறுத்துவதற்கு ஒரு மதிப்புமிக்க தளமாக இருக்கும்,” என்றும் அவர் கூறிப்பிட்டார்.
இம்மாநாட்டின் தலைமை அதிகாரி கயாத்ரி கருணாநாயக்க, இம்மாநாடு டிஜிட்டல் மயமாக்கல், நிலைத்தன்மை மற்றும் பின்னடைவு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார். “பொருளாதார சக்திகளின் மாற்றங்கள், தொற்றுநோய்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள், காலநிலை மாற்றம் மற்றும் வேகமான தொழில்நுட்ப முன்னேற்றங்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு யுகத்தில், தகவமைப்பு மற்றும் புதுமை ஆகியவை முக்கிய வேறுபாட்டு காரணிகளாக உள்ளன,” என்றும் அவர் கூறிப்பிட்டார். உள்நாட்டு தொழில்முறையினரையும், ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் நூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து, இம்மாநாடு மாற்றத்தைத் தூண்டவும் சிந்தனையை ஊக்குவிக்கவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப தொழில்கள் செழிக்க உதவும் ஒத்துழைப்புகளை வளர்க்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1919 ஆம் ஆண்டு, முதலாம் உலகப் போரின் பின்னணியில் லண்டனில் நிறுவப்பட்ட Chartered Institute of Logistics and Transport ஆனது, தற்போது 30 இற்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. இது தளவாடங்கள், விநியோக சங்கிலி மற்றும் போக்குவரத்து துறைகளில் தனிநபர்களுக்கான முன்னணி உலகளாவிய தொழில்முறை அமைப்பாகவும் விளங்குகிறது. CILT அதன் தகுதிகள், பயிற்சி மற்றும் தொழில்முறை தரங்களுக்காக பரவலாக மதிக்கப்படுவதோடு இவை உலகத் தரம் வாய்ந்த தளவாட தொழில்முறையினரை உருவாக்க உதவுகின்றன.
CILT இலங்கை ஆனது 1984 ஆம் ஆண்டு Chartered Institute of Transport ஆக நிறுவப்பட்டு, 2012 ஆம் ஆண்டு பிராந்திய ரீதியில் அந்தஸ்தைப் பெற்றது. இது அதன் வலுவான ஆளுகை, தலைமைத்துவம் மற்றும் விரிவடைந்து வரும் உறுப்பினர் தளத்தை பிரதிபலிக்கிறது. தொழில்துறைத் தலைவர்களின் அனுபவமிக்க குழுவால் வழிநடத்தப்படும் CILT SL, நாட்டின் தளவாட மற்றும் போக்குவரத்து நிலப்பரப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மேலும் இரண்டு ஆற்றல்மிக்க துணைப் பிரிவுகளை இயக்குகிறது: WiLAT (Women in Logistics and Transport), இது பாலின பன்முகத்தன்மை மற்றும் பெண்களின் அதிகாரமளிப்பை மேம்படுத்துகிறது, மற்றும் Next Generation Forum, இது இளம் தொழில்முறையினரிடையே தலைமைத்துவம் மற்றும் புதுமையை மேம்படுத்துகிறது.