Eyeview Sri Lanka

Cinnamon Life இல் The Suites குடியிருப்புப் பகுதியின் புதிய குடியிருப்பாளர்களை ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் வரவேற்பு

Share with your friend

Cinnamon Life இன் குடியிருப்புத் தொகுதியான ‘The Suites’இன் முதல் வீட்டுச் சாவிகளை அதன் உரிமையாளர்களுக்கு கையளிக்கும் நடவடிக்கைகளை ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இரண்டு முதல் நான்கு படுக்கைகளுடனான 196 அலகுகளைக் கொண்ட தொடர்மனைத் தொகுதியின் பூர்த்தி மற்றும் கையளிப்பினூடாக, கொழும்பின் முன்னணி நீர்நிலைக்கு முகப்பாக அமைந்த கலப்பு அபிவிருத்தித் திட்டம் எனும் பிரதான மைல்கல்லை பூர்த்தி செய்துள்ளது.

அதிகளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த Cinnamon Life திட்டம், கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்திருப்பதுடன், அயலவர்களின் வசிப்பிட மற்றும் வாழ்க்கை முறைத் தெரிவுகளை விஸ்தரிப்பதுடன், சொகுசு, சௌகரியம் மற்றும் வசதி ஆகியவற்றுக்கு முன்மாதிரியாக அமைந்திருக்கும்.

இந்தத் திட்டத்தின் பூர்த்தி செய்யப்பட்ட அலகுகள் கையளிப்பு தொடர்பில் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் பிரிவு தலைமை அதிகாரி நயன மாவில்மட கருத்துத் தெரிவிக்கையில், “Suites Tower இன் பூர்த்தி மற்றும் கையளிப்பினூடாக, திட்டத்தின் பாரிய மைல்கல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டின் அதிகளவு சவால்கள் நிறைந்த சூழலில் இந்த சாதனை எய்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த திட்டம் பூர்த்தியை எய்துவதை காண்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். கொழும்பு நகரின் மையப்பகுதியில் பயணிக்கையில் Cinnamon Life இன் கம்பீரத் தோற்றத்தை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். இந்நிலையில் இந்த குடியிருப்புக்கான முதல்தொகுதி உரிமையாளர்களை வரவேற்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

நகரினுள் நகரம் (‘city within a city’) எனும் தொனிப்பொருளுக்கமைய, Cinnamon Life என்பது கொழும்பு நகரின் வாழ்க்கை முறையின் எடுத்துக்காட்டாக திகழ எதிர்பார்ப்பதுடன், ஆசியாவின் முதலாவது வாழ்க்கை முறை மற்றும் களியாட்ட மையமாகவும் அமைந்திருக்கும். இந்தத் தொகுதியில் வசிப்போருக்கு, விறுவிறுப்பான, சௌகரியமான, அதிகளவு விரும்பப்படும் வாழ்க்கை முறை, நவீன வாழ்க்கை முறை மற்றும் கண்கவர் அம்சங்களை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். இலங்கை-பிரித்தானிய புகழ்பெற்ற வடிவமைப்பாளரும், கலைஞர் மற்றும் எழுத்தாளருமான சிசில் பல்மன்ட் இனால் வடிவமைக்கப்பட்ட Cinnamon Life, 4.5 மில்லியன் சதுர அடிப் பகுதியைக் கொண்டுள்ளது. 800 அறைகளைக் கொண்ட சொகுசு சினமன் ஹோட்டலையும் கொண்டிருக்கும். முதற்தர வதிவிடத் தொகுதியும் இதில் அடங்குகின்றது. நகரின் முன்னணி விற்பனை மற்றும் களிப்பூட்டும் விற்பனைத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் என்பதுடன், நவீன வசதிகளைக் கொண்ட அலுவலகத் தொகுதிகளும் அடங்கியிருக்கும்.

வதிவிடத் தொகுதியின் விலை 395,000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான விலையில் அமைந்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் +94-112-152152 அல்லது www.cinnamonlife.com எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.


Share with your friend
Exit mobile version