Cochchi.lk உடன் SME களுக்கான e-commerce திறன்களை மேம்படுத்த SLT-MOBITEL உடன் இணைந்துள்ள HNB

Home » Cochchi.lk உடன் SME களுக்கான e-commerce திறன்களை மேம்படுத்த SLT-MOBITEL உடன் இணைந்துள்ள HNB
Share with your friend

புதிய e-commerce சந்தைகள் மற்றும் வாங்குபவர்களுடன் உள்ளூர் SMEகளை இணைக்கும், இலங்கையின் மிகவும் டிஜிட்டல் புத்தாக்கமான வங்கியான HNB PLC, SME களுக்கு புதிய ஆன்லைன் வர்த்தக தளமான Cochchi.lkக்கு இலவச அணுகலை வழங்க SLT-MOBITEL உடன் கைகோர்த்துள்ளது.

புதிய e-commerce தளத்தில் நுழையும் போது, இரண்டு தொழில் நிறுவனங்களின் கூட்டாண்மை HNB SMEகளுக்கு கூடுதல் பலன்களை வழங்கும். இந்த கூட்டாண்மை தொடர்பில் இடம்பெற்ற விசேட நிகழ்விற்கு HNB பிரதிப் பொது முகாமையாளர்- வாடிக்கையாளர் மற்றும் SME வங்கியியல், சஞ்சய் விஜேமான்ன, HNB உதவிப் பொது முகாமையாளர்- SME, கைலைவாசன் இந்திரவாசன், SME தயாரிப்புகள் மற்றும் கூட்டாண்மைகளின் HNB தலைவர் நிலுகா அமரசிங்க, மற்றும் SLT தலைமை தகவல் மற்றும் டிஜிட்டல் அதிகாரி, திலக் கம்லத், SLT பொது முகாமையாளர். மாற்றம் திட்டங்கள், இஷாரி சிறிவர்தன, SLT பிரதிப் பொது முகாமையாளர் டிஜிட்டல் திட்டங்கள், தினேஷ் பெரேரா மற்றும் SLT சிரேஷ்ட முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) – SME தயாரிப்பு அபிவிருத்தி, லால்வின் டி சொய்சா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த HNBஇன் உதவி பொது முகாமையாளர் – SME, கைலைவாசன் இந்திரவாசன், “தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் வாழும் நாம் எமது பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான புதிய வழிகளையும் வாய்ப்புகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. நமது ஏற்றுமதியை மேம்படுத்துவதிலும், நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் நமது SMEக்களுக்கான புதிய சந்தைகளை அடையாளம் காண்பதிலும் கவனம் செலுத்துவது, நமக்கு மிகவும் தேவைப்படும் பணப்புழக்கத்தின் புதிய ஆதாரங்களை உருவாக்கும். SMEகளுடன் எப்போதும் பணிபுரியும் ஒரு வங்கியாக, அவர்களின் மாற்றத்தை ஆன்லைனில் எளிதாக்குவது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறாக, எமது SME வாடிக்கையாளர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்குவதற்காக SLT-MOBITEL உடன் இணைந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என தெரிவித்தார்.

இக்கூட்டாண்மை HNB வாடிக்கையாளர்களுக்கு இலவச விளம்பர இட ஒதுக்கீட்டு அனுகூலங்களை வழங்குவதுடன், துவக்க மற்றும் சந்தாக் கட்டணங்களிலிருந்து விலக்கு மற்றும் கூடுதல் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வாங்கும் திறன் போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. மேலும், வீதிக் கடை வாடிக்கையாளர்களுக்கு 500க்கும் மேற்பட்ட வகைகளில் பரந்துபட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை வழங்கும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான பிரத்தியேகமான “இலங்கையில் தயாரிக்கப்பட்டது” என்ற பிரிவும் இதில் உட்படுத்தப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட e-commerce தளமானது SLT-MOBITELஇன் தரவு மையத்தில் Cloud Environmentஇல் இயக்கப்படும். மேலும், தளமானது SME மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் e-shopsகளை உருவாக்க உதவுகிறது, அதே நேரத்தில் பாவனையாளர்களுக்கு (இறுதி வாடிக்கையாளர்கள் மற்றும் ஸ்டோர் உரிமையாளர்கள்) ஒரு நெகிழ்வான, அம்சம் நிறைந்த e-business தளத்தை வழங்குகிறது.

அண்மையில், ஏசியன் பேங்கர் சஞ்சிகை நடத்திய மதிப்புமிக்க சர்வதேச சில்லறை நிதிச் சேவைகள் விருது வழங்கும் நிகழ்வு 2022இல் 12வது தடவையாக இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக மகுடம் சூட்டப்பட்டதன் மூலம், வாடிக்கையாளர் வங்கிச் சேவையில் இலங்கையின் மறுக்கமுடியாத தலைவர் என்ற நற்பெயரை HNB முத்திரை பதித்துக் கொண்டது.

வங்கியின் பிரத்யேக உடற்பயிற்சி தொடர்பான தயாரிப்பான, HNB FITக்கு, Asian Digital Finance Forum மற்றும் Awards நிகழ்வில் ‘Best loT initiative’ என முடிசூட்டப்பட்டது. ஏசியன் ஃபின்டெக் அகாடமி (AFTA) மூலம் நடத்தப்படும் இந்த மன்றம், டிஜிட்டல் துறையில் புத்தாக்கங்களை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் தாக்கம் செலுத்தும் நபர்களை அங்கீகரித்து விருதுகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

LankaPay Technnovation Awards 2022இல் டிஜிட்டல் ஆர்வமுள்ள வங்கி தனது நிலையை மேலும் பலப்படுத்தியது, அங்கு நான்கு சிறந்த விருதுகளைப் பெற்றது. HNBஆனது, ஆண்டின் சிறந்த ‘Best Digital Payment Strategy’ நிதி நிறுவனத்திற்கான வெள்ளி விருதையும், நிதிச் சேர்க்கைக்கான ஆண்டின் மதிப்புமிக்க வங்கி மற்றும் வாடிக்கையாளர் வசதிக்காக சிறந்து விளங்கியதற்காக ஆண்டின் சிறந்த வங்கி விருதையும் பெற்றது. ஒட்டுமொத்த விருதுகளும் – இந்த ஆண்டு வங்கிகளுக்கு இடையேயான டிஜிட்டல் கொடுப்பனவுகளில் (வங்கி நிறுவனங்கள்) சிறந்து விளங்குகிறது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: