Site icon Eyeview Sri Lanka

CSE Masterminds Quiz – 2022இல் நிதிப் பிரிவில் வெற்றியாளராக பீப்பள்ஸ் லீசிங் அங்கீகரிக்கப்பட்டது 

Share with your friend

கொழும்பு பங்குச் சந்தையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, நான்காவது “CSE Masterminds Quiz 2022”இன்  நிதிப் பிரிவில், இலங்கையின் முதன்மை வங்கி அல்லாத நிதி நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) வெற்றியாளராக தெரிவானது. 

இந்நிகழ்வு 2022ஆம் ஆண்டு நவம்பர் 03ஆம் திகதி வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றதோடு, நாடளாவிய ரீதியில் நிதி, வங்கி அல்லாத நிதி, தனியார் மற்றும் அரச துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 67 அணிகள் பங்குபற்றியிருந்தன.

பங்குபெற்ற அணிகள் அவர்களது முக்கிய வணிகப் பகுதியின் அடிப்படையில் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கியமைக்காக விருதுகள் வழங்கப்பட்டன. உலகளாவிய பொருளாதாரம் மற்றும் மூலதனச் சந்தைகள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு, சர்வதேச வர்த்தகம், இலங்கைப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், இலங்கைப் பங்குச் சந்தை, பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பெயர் ஆகியவை போட்டியின் மையப்படுத்தப்பட்ட பகுதிகளாக அமைந்தன. 

பிஎல்சி “நிதி பிரிவில்” வெற்றியாளராக தெரிவானதோடு, டிஎப்சிசி வங்கி (குழு 1), அமானா டக்காஃபுல் இன்சூரன்ஸ், சிடி சிஎஸ்எல்ஏ, சீரோபேடா, அன்செல் லங்கா வரையறுக்கப்பட்ட நிறுவனம் மற்றும் அக்கியுடி நொலேட்ஜ் பார்ட்னர்ஸ் ஆகியன அந்தந்த பிரிவுகளில் முதலிடம் பெற்றமைக்காக விசேட பாராட்டுகளைப் பெற்றன.

ஷமோத்யா குணவர்தன, ஷிரங்க அர்சகுலேரத்ன, பிரசாதி என் லீலாரத்ன, தரங்க கம்லத் மற்றும் எரந்ததி குமாரசேன ஆகியோர் பிஎல்சி அணியை பரிதிநிதித்துவப்படுத்தினர். 

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி என்பது இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும், மேலும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011 ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங், பங்களாதேஸில் வெளிநாட்டு முயற்சி உட்பட நிபுணத்துவம் வாய்ந்த ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கி அல்லாத நிதியியல் சக்தியாக வளர்ந்துள்ளது.


Share with your friend
Exit mobile version