CTC இல் சிறப்பாக செயற்பட்டவர்கள் 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர Pinnacle விருதுகளில் கௌரவிப்பு

Share with your friend

Ceylon Tobacco Company PLC (CTC) தனது வருடாந்த Pinnacle விருது வழங்கும் விழாவை, நிறுவனத்தின் சிறந்த செயல்திறன் கொண்டவர்களின் சாதனைகளைக் கௌரவிக்கும் வகையில் அண்மையில் நடத்தியது. தொடர்ந்து இரண்டாவது வருடமும் ஒரு மெய்நிகர் நிகழ்வாக நடத்தப்படும் CTC Pinnacle Awards என்பது ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்திற்கு சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கு கடினமாக உழைக்கும் ஊழியர்களின் முயற்சிகளை அங்கீகரிக்கும் ஒரு உள்ளக விருது வழங்கும் தளமாகும். இந்த ஆண்டு, வர்த்தக சந்தைப்படுத்தல் பிரிவில் மொத்தம் ஏழு பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

2021 ஆம் ஆண்டின் வர்த்தக சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரிக்கான முதன்மை விருது Route-to-Market Executive விஷான் வீரசிங்கவுக்கு வழங்கப்பட்டதோடு வர்த்தக சந்தைப்படுத்தல் அதிகாரிகளான தினுஷாத ஸ்ரீ கஹவிட்ட மற்றும் புத்திம விக்கிரமாரத்ன ஆகியோருக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை வென்றனர். 

முதன்மை விருதுக்கு மேலதிகமாக, 2021 ஆம் ஆண்டில் விசேஷித்த சிறப்பை வெளிப்படுத்திய ஊழியர்களுக்கு நான்கு விருதுகள் வழங்கப்பட்டன.  வர்த்தக சந்தைப்படுத்தல் நிர்வாகிகளான ஸ்ரீஹரி இல்லமநாதன் மற்றும் லசித தர்மதாச ஆகியோர் ‘2021 ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வர்த்தக சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி’ பிரிவுக்கான விருதினைப் பெற்ற அதேவேளை சேனல் முகாமையாளர் MT/HoReCa, தானியா பத்திரகே ‘2021 ஆம் ஆண்டின் சிறந்த உதவி முகாமையாளருக்கான விருதைப் பெற்றார். இதேவேளை நவீன வர்த்தக மற்றும் HoReCa நிர்வாகி, ரமாலா விஜேசேகர, ‘பிராண்டுகள், மூலோபாய திட்டமிடல் மற்றும் நுண்ணறிவு, வணிக மேம்பாடு 2021’ பிரிவில் ஆண்டின் சிறந்த நிர்வாகிக்கான விருதை வென்றார்.

CTC Pinnacle Awards, ஆர்வம், லட்சியம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய அமிசங்கள் சிறந்து விளங்கும் என்பதை பிரதிபலிக்கின்றது. Pinnacle விருதுகள் போன்ற முன்முயற்சிகள் மூலம், CTC தனது ஊழியர்களுக்கு சவால்களை தைரியமாக எதிர்கொண்டு சுறுசுறுப்பாகவும் நேர்மையாகவும் பொறுப்புடன் சமைத்து சேவைகளை வழங்குவதற்கு வழிவகுக்கின்றது. நிறுவனம் அதன் ஊழியர்கள் அதன் மிகப்பெரிய பலம் என்று நம்புவதோடு அவர்களின் பயிற்சி மற்றும் மேம்பாட்டில் கணிசமாக முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

116 வருட வரலாற்றைக் கொண்ட CTC, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகவும் பெறுமதிமிக்க நிறுவனங்களில் ஒன்றாகும். இலங்கையில் தனது பயணத்தின் ஒரு பகுதியாக, இந்நிறுவனம் தொடர்ந்து அதன் உயர்மட்ட நிலையை உறுதிப்படுத்தி அனைத்து பங்குதாரர்களுக்கும் மேலதிக வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply