பன்முகப்படுத்தப்பட்ட இலங்கையின் பல்கூட்டு நிறுவனம் LIMRA Holdings Limited இன் துணை நிறுவனமான DCS International, IP அடிப்படையிலான கண்காணிப்பு கமெராக்களின் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றான Zhejiang Uniview Technologies உடன் இணைந்து தனது தயாரிப்புப் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளது. அதற்கிணங்க, இலங்கையில் Uniview-க்கான பிரத்தியேக தேசிய விநியோகஸ்தராக DCS INTERNATIONAL தொழிற்படும், இது தொழில்வாண்மைத்துவம் மற்றும் நம்பகத்தன்மையுடன் பாதுகாப்பான உலகத்தை உருவாக்கவும் துணைபுரிகின்றது.
20 ஆண்டுகால எல்லையற்ற தேடுதல்களுடன், Uniview ஆனது எல்லையற்ற ஆராய்ச்சி மூலம் வீடியோ தொழில்நுட்பம் முதல் AIoT தீர்வுகள் வழங்குதல் வரை, பரந்த அளவிலான தயாரிப்புகளை உள்ளடக்கிய ஒரு பரந்த பரிணாமத்தை எட்டியுள்ளது. நிறுவனத்தின் வீடியோ தயாரிப்பு வரிசைக்கு IP கமெரா, NVR, Encoder, Decoder, Storage, Client Software மற்றும் App, AIoT display முதல் ஸ்மார்ட் அலுவலகம் மற்றும் வீட்டிற்காக intelligent access control வரையிலான AloT தீர்வுகள் உள்ளடங்குவதுடன், அவற்றிற்காக video IoT, display மற்றும் conference தயாரிப்புக்கள், cloud computing மற்றும் network, smart access control மற்றும் storage ஆகிய அடிப்படையான தொழில்நுட்பத் தேவைகளை உள்ளடக்குகின்ற Big Data, Cloud மற்றும் IoT என்பன உபயோகப்படுத்தப்படுகின்றன. தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களை உள்ளடக்கிய 18 சர்வதேச கிளைகளுடன், Uniview உலகெங்கிலும் உள்ள முன்னணியான விமான நிலையங்கள், தொழிற்துறைப் பூங்காக்கள், வணிகக் கட்டிடங்கள், வங்கிகள், குடியிருப்புகள், பாடசாலைகள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றில் ஸ்மார்ட் தீர்வுகளை வழங்கி முன்னணியில் திகழ்கின்றது.
DCS INTERNATIONAL அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் மக்களைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் அதன் ஒருமைப்பாடு மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், நிறுவனங்களின் தகவல் ஓட்டம் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்ய வலுவான அணுகுமுறையை எடுத்துள்ளது. DCS INTERNATIONAL என்பது ESET இணையப் பாதுகாப்புத் தயாரிப்புகள் போன்ற மதிப்புமிக்க பிராண்டுகளின் பிரத்தியேக விநியோகஸ்தராகும். அதன் தாய் நிறுவனமான LIMRA Holdings கடந்த 30 ஆண்டுகளாகச் செயற்பட்டு வரும் நடுத்தர அளவிலான பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமாகும். இது இப்போது ஆறு கிளஸ்டர்களில் நிர்வகிக்கும் நான்கு துறைகளில் 10 துணை நிறுவனங்களைக் கொண்ட குழுவாக வெற்றிகரமாகப் பன்முகப்படுத்தப்பட்டிருக்கின்றது. DCS International-க்கு அப்பால், EGUARDIAN Lanka மற்றும் Kiddies & Toys International ஆகியவை சில முக்கிய முன்னணி கிளஸ்டர் நிறுவனங்களாகும்.
DCS INTERNATIONAL நிறுவனத்தின் பணிப்பாளர் கௌஷல்ய சேதுங்க தனது எண்ணங்களைப் பகிர்கையில், “எங்கள் சமீபத்திய சர்வதேச கூட்டாளரை – Uniview (Unlimited New View-UNV) அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இது ஓர் நவீனத்துவமிக்க IP கண்காணிப்புத் தீர்வாளர் ஆகும், இது அதன் பிரிவில் மற்றும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்க முயற்சிக்கும் Analog கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் தீர்வுகளில் உலகின் முன்னணி நிலை என்ற மதிப்பிற்குரிய பட்டத்தை பெற்றுள்ளது. மன அமைதியை வழங்கும் மிக முக்கியமானவற்றைப் பாதுகாக்கும் அதிநவீன பாதுகாப்புத் தீர்வுகளை வழங்குவதே எமது நோக்கமாகும். எமது பட்டியலில் UNV சேர்க்கப்பட்டது, இந்த பணிக்கான எங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் குறிக்கின்றது.”
Zhejiang Uniview Technologies நிறுவனத்தின் பணிப்பாளர் Malcolm Han கருத்துத் தெரிவிக்கையில், “DCS International உடன் கைகோர்த்து இலங்கைச் சந்தையில் நுழைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். புதுமையான தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்துடன், ஸ்மார்ட், இணைப்பு நகரங்கள் மற்றும் வாழ்க்கையைத் திறக்க, Uniview பல்வேறு தொழிற்துறைகளில் விரிவடைந்துள்ளது. நாங்கள் வலுவான கூட்டாண்மைகளைத் தீவிரமாக நிறுவி வருகிறோம், மேலும் உலகளவில் சிறந்த தீர்வுகளை வழங்க மற்ற தொழிற்துறை முன்னோடிகளுடனான ஒத்துழைப்பை நாடுகின்றோம்.”