Site icon Eyeview Sri Lanka

DFCC வங்கி, கட்டுபடியாகும் வகையில், மகிழ்ச்சிகரமான பண்டிகைக் காலத்திற்காக ‘Santa in your wallet’ சலுகையை வழங்குகிறது

Share with your friend

இலங்கையின் முதன்மையான வர்த்தக வங்கியான DFCC வங்கி, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அனைத்து DFCC அட்டைதாரர்களுக்கும் ஏராளமான தள்ளுபடிகள், CashBack சலுகைகள் மற்றும் பிற நிதியியல் வரப்பிரசாதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட வணிக மையங்களில் கிடைக்கப்பெறும் சலுகைகளுடன், நிதியியல் வரப்பிரசாதங்கள் ‘Santa in your wallet’ என்ற பண்டிகைக் கருப்பொருளை மையமாகக் கொண்டதாக இருக்கும். டெபிட் அட்டை மற்றும் கடனட்டை வைத்திருப்பவர்கள் என இரு சாராரும் 65% வரையான சேமிப்புக்களைப் பெற்றுக்கொள்வதுடன், மேலும் 1% CashBack அனைத்து கடனட்டை பரிவர்த்தனைகளுக்கும் நேரடியாகவே அட்டைதாரரின் DFCC வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தனித்துவமான முன்மொழிவு வாடிக்கையாளர்கள் இந்த ஆண்டு நிறைவடையவுள்ள இத்தருணத்தில் தங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசுகளையும், விருந்துகளையும் அளிக்கும் போது சேமிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. கடனட்டை வைத்திருப்பவர்கள் விசேட 36 மாத இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடிவதால், இது கூடுதல் கட்டுபடி, மற்றும் கொள்வனவு ஆற்றலுக்கு இடமளிக்கின்றது. DFCC வங்கி, குறைக்கப்பட்ட நடைமுறைப்படுத்தல் கட்டணங்களுடன், கடனட்டையில் நிலுவையாக உள்ள தொகையை மாற்றம் செய்யும் தெரிவு அடங்கலாக, அட்டையின் மூலமாக கடனைப் பெற்றுக்கொள்ளும் வசதியையும் செயல்படுத்தியுள்ளது.

DFCC வங்கி, அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற வகையில், தனது அனைத்து வாடிக்கையாளர்களினதும் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான ஒரு பாதையாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டுபடியை அதிகரிப்பதற்கான முயற்சிகளுக்கு வலுவான முக்கியத்துவத்தை அளிக்கிறது. இதன் காரணமாகவே இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, ஏனெனில் இது மதிப்பைத் தோற்றுவிப்பதுடன், வணிகங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்த உதவுகிறது.  

DFCC அட்டைதாரர்களுக்கான பண்டிகைக்கால சலுகைகள் குறித்து கருத்து தெரிவித்த DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா, “தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதை மிக உயர்ந்த மட்டத்தில் வைத்திருக்கும் ஒரு வங்கி என்ற வகையில், DFCC வங்கியானது பரந்தளவில் பண்டிகைக்கால சலுகைகளை தனது அட்டைதாரர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. எங்கள் தள்ளுபடி சலுகைகள் மற்றும் இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டுபடியை அதிகரிப்பதன் மூலம் எங்கள் அட்டைதாரர்களின் நிதியியல் சுமையைக் குறைத்து, பண்டிகைக் காலத்தை அவர்கள் முழுமையாக அனுபவித்து மகிழ இந்த சலுகைகள் உதவுகின்றன,” என்று குறிப்பிட்டார்.

DFCC வங்கி தொடர்பான விபரங்கள்       

  

DFCC வங்கியானது 66 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பெருமதிப்பு மிக்க Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையிலுள்ள Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளதுடன், இலங்கையில் Business Today இன் தரப்படுத்தலின் பிரகாரம் முதல் 40 ஸ்தானங்களில் திகழும் வர்த்தக நிறுவனமாகவும் இடம் பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.      


Share with your friend
Exit mobile version