அனைவரையும் அரவணைத்து, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வங்கிச்சேவைகளை வழங்குவதில் இடைவிடாத அர்ப்பணிப்பைக் காண்பிக்கும் வகையில், திருகோணமலை, மானிப்பாய், மற்றும் அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் ஏற்கனவே கொண்டுள்ள தங்கக் கடன் சேவைகளை வழங்கும் நேரத்தை DFCC வங்கி உத்தியோகபூர்வமாக மேலும் நீட்டித்துள்ளது. மக்கள் தமது அன்றாடக் கடமைகளை செய்யும் போது வங்கிச்சேவை கிடைக்கப்பெறும் நேரங்களை தவற விடும் சந்தர்ப்பங்களுக்கு பெரும்பாலும் முகங்கொடுக்கின்ற இப்பிரதேசங்களில் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சௌகரியமான வழியில் நம்பிக்கைக்குரிய நிதித் தீர்வுகளை வழங்குவதில் வங்கி தற்போது மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த வங்கிச்சேவை நேரத்தின் நீட்டிப்பு மாறியுள்ளது. இந்த சேவை மேம்பாட்டுடன் இணைந்ததாக, இலங்கையில் தற்போது கிடைக்கப்பெறும் அதிகூடிய தொகையாக 24 கரட் தங்கத்திற்கு ரூபா 200,000 வரையான தொகையை DFCC வங்கி தொடர்ந்தும் வழங்கி வருகிறது.

இந்த இடங்களில் தனது சேவை வழங்கலை வலுப்படுத்துவதனூடாக, வலுவூட்டல், இலகுவாக கிடைக்கச்செய்தல், மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ள முற்போக்குச் சிந்தனை கொண்ட நிதிக் கூட்டாளர் என்ற தனது வகிபாகத்தையும் DFCC வங்கி மீள உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கை முறைகளுடன் இந்த மேம்படுத்தப்பட்ட சேவை மிகச் சிறப்பாக ஒன்றியுள்ளதுடன், விவசாயம், சுய தொழில், மற்றும் நேரத்தை முன்னிலைப்படுத்திய ஏனைய தொழில்களில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவைகளை வழங்கும் வகையில் வார நாட்களில் நீட்டிக்கப்பட்ட நேரங்களிலும் மற்றும் சனிக்கிழமைகளிலும் அடகுசேவையை வழங்குகின்றது.
திருகோணமலை, மானிப்பாய், மற்றும் அக்கரைப்பற்று வாசிகள் தற்போது மிகவும் இலகுவாக DFCC வங்கியின் விரைவான, பாதுகாப்பான, மற்றும் வெளிப்படையான தங்கக் கடன் சேவை நடைமுறையைப் பெற்றுக்கொள்ள முடியும். அக்கரைப்பற்று கிளையில் வார நாட்களில் பி.ப 6.00 மணி வரை மாலை நேர சேவைகள், மானிப்பாய் மற்றும் திருகோணமலை கிளைகளில் சனிக்கிழமைகளில் மு.ப. 9.00 – பி.ப 5.00 வரையான வங்கிச்சேவை என பிரத்தியேகமயமான சேவை நேரங்கள் கிடைக்கப்பெறுவதுடன், வாடிக்கையாளர்களின் சௌகரியம் மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றை உச்சப்படுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. தமது தொழில்களின் நிமித்தம், வழக்கமான வங்கிச்சேவை நேரங்களில் தமக்கு வேண்டிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை நேரடியாக தீர்த்து வைக்கும் வகையில் இந்த மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பூகோளரீதியாக விரிவாக்கப்பட்டுள்ளமை மாத்திரமன்றி, சீரமைக்கப்பட்ட மற்றும் வாடிக்கையாளர் நேயம்மிக்க நடைமுறைகளினூடாக வழங்கப்படும் ஒப்பற்ற கடன் தொகை இம்முயற்சியை தனித்துவமான ஒன்றாக மாற்றியுள்ளது. இவ்வாறு செய்வதனூடாக, தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் நிதிரீதியான நெகிழ்திறனுக்கு ஆதரவளிப்பது மாத்திரமன்றி, பிராந்தியத்தில் பொருளாதார செயற்பாடுகளுக்கும் DFCC வங்கி உந்துசக்தியளிக்கின்றது. மேம்பட்ட சௌகரியம் மற்றும் மிகச் சிறந்த கடன் விதிமுறைகள் ஆகியன தங்கக் கடன் சேவைகளில் மிகத் தெளிவாக சந்தை முன்னோடி என்ற ஸ்தானத்தில் வங்கியை நிலைநிறுத்தியுள்ளதுடன், அர்த்தமுள்ள நிதிக் கட்டமைப்பு வசதியின் தேவையை மிகவும் கொண்டுள்ள சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கான திட்டமிடப்பட்ட மூலோபாயத்தையும் பிரதிபலிக்கிறது.