DFCC வங்கி Mastercard கொடுப்பனவு நுழைமுகத்தினூடாக இலத்திரனியல் முறையில் பணம் செலுத்துவதற்கு இடமளிக்க Mastercard உடன் ஒத்துழைக்கிறது

Home » DFCC வங்கி Mastercard கொடுப்பனவு நுழைமுகத்தினூடாக இலத்திரனியல் முறையில் பணம் செலுத்துவதற்கு இடமளிக்க Mastercard உடன் ஒத்துழைக்கிறது
Share with your friend

இலங்கையில் வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில், அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, இணையத்தின் ஊடாக பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதற்கும் இலத்திரனியல் முறையில் பணக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டும் வகையில் தனது கொடுப்பனவு நுழைமுகத்தில் Mastercard ஐ செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. 

கிறிஷான் ஜெயமான்ன – வணிகர் உள்வாங்கலுக்கான முகாமையாளர், DFCC வங்கி, ஆசிரி இத்தமல்கொட – சில்லறை வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்களுக்கான வங்கிச்சேவை, DFCC வங்கி, சந்துன் ஹபுகொட – இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான முகாமையாளர், Mastercard, டென்வர் லூயிஸ் – துணைத் தலைமை அதிகாரி/அட்டை மையத்தின் தலைமை அதிகாரி, DFCC வங்கி, கெமுனு குணசுமண – உதவித் தலைமை அதிகாரி, அட்டை செயற்பாடுகள், DFCC வங்கி

Mastercard கொடுப்பனவு நுழைமுகம் செயல்படுத்தப்படுவது வங்கியின் டிஜிட்டல் சேவை இடமளிப்பு முயற்சியில் மற்றொரு சாதனை இலக்காகும். டிஜிட்டல் பொருளாதாரத்தை நாடு அதிகரித்துச் செல்லும் அளவில் உள்வாங்கி வருவதால், வங்கியானது டிஜிட்டல் மாற்ற உள்வாங்கலை தொடர்ந்து முன்னெடுப்பதுடன், வங்கிச் சேவைத் துறையில் தீவிரமாக பங்களித்து வருகிறது.

பல்வேறு விலைமதிப்புகளுடன் தங்கள் தயாரிப்புகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் நுண், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான வணிகங்களுக்கு இந்தச் சேவை கிடைப்பதால், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதற்கான அவற்றின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு இது இடமளிக்கின்றது. Mastercard கொடுப்பனவு நுழைமுகமானது, நுண்-வணிகங்கள் வழக்கமான முறையில் பரிவர்த்தனை செய்யும் தளங்கள் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்வதை ஏற்கும். இது ஒவ்வொரு வணிகத்திற்கும் சேவை வழங்குவதை பிரத்தியேகமாக வடிவமைத்துக் கொள்ள வங்கிக்கு இடமளிப்பதுடன், வசதியாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் அதே வேளையில் உள்ளார்ந்த இடர்களை இறுக்கமாக கட்டுப்படுத்தி நிர்வகிக்க வழிவகுக்கும்.

DFCC வங்கியால் கொடுப்பனவு நுழைமுக சேவை அமுல்படுத்தப்படுவது தொடர்பில் DFCC வங்கியின் சில்லறை வங்கிச் சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைப் பிரிவுகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கருத்து வெளியிடுகையில், “அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற வகையில், பரந்த அளவிலான கொடுப்பனவுத் தெரிவுகளுடன் நம்பகமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் கொடுப்பனவு உள்கட்டமைப்புக்கான முக்கிய தேவை இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மின் வர்த்தகச் சேவைகளுக்கு இடமளிக்க எங்கள் வணிகர் வலையமைப்பிற்கு வலுவூட்டுவதற்காக, மிகவும் பிரபலமான கொடுப்பனவுச் செயலிகளில் ஒன்றாக இருக்கும் Mastercard கொடுப்பனவு நுழைமுக சேவைகளுடன் இந்த ஒத்துழைப்பில் நாங்கள் காலடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது வாடிக்கையாளர்கள், தொழில்துறை கூட்டாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு சௌகரியத்தைக் கொடுக்கும் என்றும், இலங்கை முழுவதும் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்தவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

இந்த ஒத்துழைப்பின் மூலம், DFCC வங்கியானது, சேவை வழங்குநர்களுடன் கூட்டுசேர்வதன் மூலமும், வளர்ந்து வரும் சந்தைப் பிரிவுகளில் ஊடுருவுவதன் மூலமும் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த Mastercard இன் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான முகாமையாளரான சந்துன் ஹபுகொட அவர்கள், “DFCC வங்கியுடன் ஒத்துழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பணம் செலுத்துவதை ஏற்றுக்கொள்வதற்கும், டிஜிட்டல் வழிமுறை கொடுப்பனவுகளின் புதிய உலகில் போட்டித்திறனை மேம்படுத்துவதற்கு அவர்களின் அணுகல் மற்றும் பாதுகாப்பிலிருந்து பயனடைவதற்கும் உதவுகிறது. Mastercard நிறுவனத்தில், வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையற்ற, பாதுகாப்பான மற்றும் அட்டையை உட்புகுத்தும் எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவையற்ற அனுபவத்தை வழங்கும் சிறந்த வகுப்பிலான தீர்வுகள் மற்றும் கொடுப்பனவு முறைகளை அறிமுகம் செய்வதில் நாம் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.  

புதிதாக செயல்படுத்தப்பட்ட Mastercard கொடுப்பனவு நுழைமுகமானது மின்வணிக இணையதளங்கள் அல்லது மொபைல் செயலிகளுடன் தங்குதடையற்ற ஒருங்கிணைப்பை வழங்கும் அதிநவீன மேம்பட்ட பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களைக் கொண்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று ‘எளிமைப்படுத்தப்பட்ட வர்த்தக’ சேவையாகும், இது வணிகரின் இணையதளம் அல்லது Mastercard கொடுப்பனவு நுழைமுகத்துடன் கணக்கை ஒருங்கிணைக்க தங்குதடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் இடமளிக்கிறது. இந்த சிறப்பம்சம் நுண், சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் தங்கள் தொழிற்பாட்டுச் செலவைக் குறைக்க உதவுவதுடன், அவர்களின் வணிகத்திற்கு உண்மையில் என்ன முக்கியம் என்பதில் கவனம் செலுத்துகிறது. இது 3DS 2.0 (EMV 3DS) தீர்வுகளான சமீபத்திய 3D வழிமுறை பாதுகாப்பான கொடுப்பனவுகளுக்கு இடமளிக்கிறது. இது அட்டையை எந்திரத்தில் உட்செருக வேண்டிய தேவையற்ற நுகர்வோர் அங்கீகாரத்தை ஊக்குவிக்கிறது. இணைய பரிவர்த்தனையின் போது அட்டைதாரர்கள் தங்கள் அட்டை வழங்குனருடனான தமது அங்கீகாரத்தை வழங்க உதவுகிறது.

கூடுதல் பாதுகாப்பு அடுக்கு அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைத் தடுக்க உதவுகிறது மற்றும் மோசடி வெளிப்பாடுகளிலிருந்து வணிகத்தைப் பாதுகாக்கிறது. இந்தச் சேவையானது WooCommerce, OpenCart, Prestashop, Magento மற்றும் பல்வேறு பிரபலமான பயன்பாடுகளுக்கு உதவுவதுடன், மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படுகின்ற கொடுப்பனவுகளின் போது, அதற்கு முந்தைய பயன்பாட்டின் போதான தரவு விபரங்களைத் தானாகவே கண்டறிந்து கொள்ளும் தீர்வுடன். Android Point of Sale (PoS) இயந்திரங்களை நேருக்கு நேராகப் பணம் செலுத்தும் வகையில் இணைக்கப்பட்டிருக்கும் புத்தாக்கமான இடப்பரப்பில் Mastercard கொடுப்பனவு நுழைமுகமானது அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வருகிறது.

வணிகங்கள் நிகழ்நேரத்தில் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் அறிக்கைகளை உருவாக்கவும் இலகுவான பயன்பாட்டு பணியகத்துக்கான அணுகலைக் கொண்டிருக்கும். இதனால் அவர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டணங்கள் பற்றிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கவும், நிதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இடமளிக்கும். Mastercard கொடுப்பனவு நுழைமுகம் விரைவான மற்றும் சிக்கல் இல்லாத செயலாக்கத்திற்காக பெரும்பாலான இணைய பயன்பாடுகளுடன் தங்குதடையின்றி ஒருங்கிணைக்கிறது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: