மிகவும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மற்றும் டிஜிட்டல் ரீதியாக இயக்கப்படுகின்ற வங்கிகளில் ஒன்றாக மாறுவதற்கான முயற்சியில் தீவிரமாக செயற்பட்டு வருகின்ற DFCC வங்கி, கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் சமூகங்களுக்கு உதவுவதற்காக DFCC Virtual Wallet இன் வலுவூட்டலுடன் ‘Digital Dansala’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாதகமான சூழ்நிலையின் சுமைகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பான வழிமுறைகளின் தேடலில் நாம் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை மக்கள் மத்தியில் அடுத்தவர்களுக்கு கொடுக்கும் மற்றும் அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆன்ம உணர்வு பெருகிக் கொண்டிருக்கும் நேரத்தில் ‘Digital Dansala’ நிகழ்ச்சித்திட்டம் அதற்கு பலனளிக்கும் வகையில் அறிமுகமாக்கப்பட்டுள்ளது.
DFCC வங்கியின் ‘Digital Dansala’ என்பது நாட்டில் உள்ள ஒரு வங்கியால் முதன்முதலாக முன்னெடுக்கப்படுகின்ற இத்தகைய ஒரு முயற்சியாகக் காணப்படுவதுடன், இதன் மூலம் Virtual Wallet ஐப் பயன்படுத்தும் DFCC வங்கி வாடிக்கையாளர்கள் நாட்டில் தற்போது எழுந்துள்ள சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள DFCC வங்கியின் கிளை வலையமைப்பு முழுவதும் உள்ள உள்ளூர் சமூகங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக எந்த தொகையையும் பணமாக நன்கொடையளிக்க முடியும். ‘Digital Dansala’ ஊடாக வாடிக்கையாளர்கள் மனமுவந்து வழங்கும் உதவித்தொகைக்கு சமமான தொகையை DFCC வங்கி தனது பங்களிப்பாக வழங்கும். இது சமூகங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கான வங்கியின் நிலைபேற்றியல் மூலோபாயத்துடன் ஒத்திசைகிறது. பாதிக்கப்பட்ட பிரஜைகளுக்கான உலர் உணவுப் பொருட்கள் விநியோகப் பணிகள் நாடு முழுவதும் உள்ள 139 கிளை வலையமைப்போடு இணைப்புப்பணிகளுடன் வங்கியின் நிலைபேற்றியல் பணிப்பிரிவால் மத்தியரீதியில் ஒருங்கிணைக்கப்படும்.
இந்த முயற்சிக்கு DFCC Virtual Wallet வலுவூட்டுகின்றது. இது இலங்கை வங்கித் துறையில் 2015 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த வகையிலான முதல் மொபைல் மெய்நிகர் Wallet சேவையாக மாறியிருந்தது. Virtual Wallet ஆனது 40 க்கும் மேற்பட்ட கட்டணக் கொடுப்பனவுகள், நிறுவன கொடுப்பனவுகள், CEFT வழிமுறை நிதிப் பரிவர்த்தனை, ஏனைய வங்கி கடனட்டைகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் திறன், வாடிக்கையாளரின் நடைமுறை / சேமிப்பு கணக்குகளின் மீதிகள், வட்டி வீதங்கள், நிலையான வைப்பு முதிர்வு திகதிகள் போன்றவற்றை சரிபார்த்தல், பயனாளிகளை விருப்பத்திற்கேற்றவாறு சேர்த்துக்கொள்ளல் மற்றும் மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் வழியாக CEFT கட்டண உறுதிப்படுத்தல் சிட்டைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற ஏராளமான வசதிகளுக்கு உதவுகின்றது. மேலும், DFCC கடனட்டையைச் சேர்ப்பது, கணக்கு நிலுவைகளைச் சரிபார்ப்பது, 3 மாத கூற்றுக்கள், பரிவர்த்தனை விவரங்கள், பணமீளளிப்பு (Cashback) வெகுமதி விவரங்கள், செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை, சமீபத்திய மற்றும் இன்னமும் பட்டியலில் சேர்க்கப்படாத பரிவர்த்தனைகள் மற்றும் கிடைக்கக்கூடிய மீதி போன்ற கடனட்டைகள் தொடர்பான பல செயல்பாடுகளை வாடிக்கையாளர்கள் இதன் மூலமாக அணுகலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போதைய நிலைமைக்கு ஏற்ப, DFCC வங்கி கடந்த சில மாதங்களாக இந்த மார்க்கத்துக்கு 25 க்கும் மேற்பட்ட புதிய அம்சங்களை உருவாக்கியுள்ளது, இது ஏற்கனவே உள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பெறுமதியைச் சேர்க்கிறது. இந்த முயற்சிக்கு உதவுவதற்காக, DFCC வாடிக்கையாளர்கள் தங்களது Virtual Wallet App செயலியின் ஊடாக நன்கொடைகளை வழங்க இப்போது ‘நன்கொடைகள்’ (Donations) தெரிவை அணுகலாம். ஆரம்பத்தில், பயனர்கள் தங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும், அதைத் தொடர்ந்து அவர்கள் ‘Bills’ குறியை கிளிக் செய்து பின்னர் ‘Donations’ என்பதைத் தெரிவு செய்ய வேண்டும். பின்னர், பயனர்கள் ‘Digital Dansala’ என்ற தெரிவைத் தேர்ந்தெடுத்து தாம் விரும்பும் நன்கொடை பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். எந்தவொரு DFCC வங்கி வாடிக்கையாளர் அல்லாதவர்களும் தமது வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டே இணையத்தளத்தில் கிடைக்கும் ஒன்லைன் முறையில் கணக்கு ஆரம்பிக்கும் தெரிவின் மூலம் ஒரு கணக்கைத் திறந்து, பின்னர் டெபிட் அட்டையைப் பயன்படுத்தி அல்லது 24 மணி நேர விரைவு சேவை இலக்கமான 2350000 ஐ அழைப்பதன் மூலம் நிதியை நன்கொடையாக வழங்க DFCC Virtual Wallet ஐ செயல்படுத்தலாம்.
இந்த முயற்சி குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கூறுகையில், “எனது நினைவுக்கு எட்டிய வரை, ஒரு தேசமாக நாம் கூட்டாக நம் வாழ்நாளின் கடினமான காலகட்டங்களில் ஒன்றிற்கு முகங்கொடுத்துள்ளோம். எங்களது அர்ப்பணிப்பு மிக்க முன்கள பணியாளர்கள் சுகாதார நெருக்கடியிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள நிலையில், நிதி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மக்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை ஈடுசெய்யும் வகையில் செயல்பட வேண்டும். இது சம்பந்தமாக, DFCC வங்கி வழக்கங்களுக்கு அப்பாற்பட்டு செயற்பட்டுச் செல்வது முக்கியம் என்று நம்புகிறது, மேலும் இந்த சவாலான காலகட்டங்களில் உதவ டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொருத்தமாக ஒருங்கிணைக்கிறது. DFCC Virtual Wallet இன் ‘Digital Dansala’ மூலம், மனித தேவைகளுக்கு உதவுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் எமது வாடிக்கையாளர்களுக்கு அணுகல் கிடைக்கப்பெறுகிறது. இதன் மூலம் தேசத்திற்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கோ இதிலிருந்து மீளுவதற்கு உதவ விரும்பும் அனைத்தையும் நன்கொடையாக வழங்குவதில் தாமும் பங்கு வகிப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகின்றது,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலும் 2021 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.