தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான SLT-MOBITEL இன் வைத்திய பதிவு செய்கைப் பிரிவான eChannelling ஊடாக, ‘Eco Channelling Delivery’ எனும் விசேட மருந்துப் பொருட்கள் விநியோக சேவைக் கட்டமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக சுகாதார பராமரிப்பு பிரிவில் சூழலுக்கு நட்பான விநியோக பொறிமுறை அறிமுறையை அறிமுகம் செய்துள்ளது.
முக்கியமாக, இந்த பிரத்தியேகமான, நிலைபேறான மற்றும் பெறுமதி வாய்ந்த சேவையை அறிமுகம் செய்யும் முதலாவது தொலைத் தொடர்பாடல் வர்த்தக நாமமாக SLT-MOBITEL திகழ்கின்றது. ஓடர் செய்யப்படும் மருந்துப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அதே நாளில் சைக்கிளில் சென்று SLT-MOBITEL இன் mAgent இனால் கொழும்பு 3 இல் காணப்படும் புகழ்பெற்ற வைத்தியசாலையின் பாமசியிலிருந்து, கொழும்பு 1 முதல் 8 வரையான பகுதியினுள் காணப்படும் 5 கிலோமீற்றர் தூரத்தினுள் 200 ரூபாய் எனும் கட்டணத்தில் வழங்கப்படும்.
SLT-MOBITEL இனால் வலுவூட்டப்பட்டவர்களாக mAgent கள் திகழ்வதுடன், நாடு முழுவதிலும் SLT-MOBITEL இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விஸ்தரிப்பதற்கு கைகொடுக்கும் வகையில் காணப்படுகின்றனர்.
தினசரி அடிப்படையில் தமது தேவைகளை ஓடர் செய்து கொள்ளும் தெரிவை https://www.echannelling.com/ எனும் இணையத்தளத்தில் ‘Eco channelling’ ஐ க்ளிக் செய்து அல்லது echannelling app ஐ டவுன்லோட் செய்து கொள்வதன் மூலம் பெறுகின்றனர். தினசரி விநியோகம் பி.ப. 4 மணி முதல் 6 மணி வரை இடம்பெறும். கட்டணப் பட்டியல் பெறுமதி தொடர்பான e-கூற்று விற்பனையாளரால் அனுப்பப்படும். பொருளை பெறுகையில் பணத்தை செலுத்துவது, ஒன்லைன் கொடுப்பனவுகள் அல்லது POS இயந்திரங்களினூடாக கட்டணத்தை வாடிக்கையாளர் செலுத்தலாம்.
eChannelling இன் ‘Eco Channelling Delivery’ திட்டத்தின் பிரதான இலக்கு என்பது, நாட்டில் நிலவும் இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் தடங்கல்களில்லாத சேவைகளைப் பெற்றுக் கொடுப்பது பிரதான இலக்காகும். ‘Eco Channelling Delivery’ ஊடாக குறித்த தினத்தினுள் மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதற்கான உத்தரவாதமளிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சைக்கிளில் பயணிப்பது சூழலுக்கு நட்பான வகையில் அமைந்திருப்பதுடன், நிலைபேறான தீர்வாகவும் அமைந்துள்ளது. போக்குவரத்துக்கு பூஜ்ஜிய எரிபொருள் மற்றும் இலத்திரனியல் நுகர்வின் காரணமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நலனில் பங்களிப்பு வழங்குகின்றன.
டிஜிட்டல் யுகத்தில் இணைய மற்றும் app கட்டமைப்புகளைப் பயன்படுத்தி சௌகரியமான வாழ்க்கை முறைக்கான சமூகத்தை கட்டியெழுப்புவதில் eChannelling தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வந்துள்ளது. SLT-MOBITEL இன் சரக்கு கையாளல் பிரிவினால் தனது mAgent சேவையினூடாக Eco Delivery முன்னெடுக்கப்படுகின்றது. நபர் ஒருவரின் மருத்துவ அறிக்கைகளுக்கமைய அத்தியாவசிய மருந்துப் பொருட்களையும் அறிக்கைகளையும் வாரத்தின் ஏழு நாட்களிலும் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கின்றது.
நாடு முழுவதிலும் விநியோக சேவையை விஸ்தரிப்பதற்கு eChannelling திட்டமிட்டுள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களையும் சுகாதார பராமரிப்பு சேவைகளையும் உள்வாங்கி, பரந்தளவு சேவைகளை சௌகரியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது.