Fast Companyஇன் நான்காவது ஆண்டு பட்டியலில் புத்தாக்கத்திற்கான 100 சிறந்த பணியிடங்கள் பட்டியலில் Twinery, Innovations by MASக்கு 18ஆவது இடம்

Home » Fast Companyஇன் நான்காவது ஆண்டு பட்டியலில் புத்தாக்கத்திற்கான 100 சிறந்த பணியிடங்கள் பட்டியலில் Twinery, Innovations by MASக்கு 18ஆவது இடம்
Share with your friend

Fast Company தனது நான்காவது வருடாந்திர சிறந்த பணியிடங்களின் புத்தாக்கங்களுக்கான பட்டியலை அறிவித்ததுடன், இதன் மூலம் அனைத்து மட்டங்களிலும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதில் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் வணிகங்களை கௌரவித்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த புத்தாக்கமான கலாச்சாரம் மற்றும் மக்களுக்கான Twinery, Innovations மூலம் MAS 18வது இடத்தைப் பிடித்துள்ளது.

Accenture நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட, 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த புத்தாக்கங்களுக்கான பணியிடங்கள் பட்டியலானது, கணினி அறிவியல்,  உயிரியல் துறை, நுகர்வோர் தொகுக்கப்பட்ட பொருட்கள், இலாப நோக்கமற்ற நிறுவனங்கள், கல்வி, நிதிச் சேவைகள், இணைய பாதுகாப்பு, பொறியியல், பன்முகத்தன்மை, நிலைத்தன்மை, B2B, மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகள், உட்பட பல்வேறு பிரிவுகளில் இருந்து 100 வெற்றியாளர்களை தரவரிசைப்படுத்தியுள்ளது. Fast Company எடிட்டர்கள் மற்றும் Accenture நிறுவனத்தின் ஆய்வாளர்கள் இணைந்து சுமார் 1,500 விண்ணப்பங்களைப் பெற ஒன்றாக வேலை செய்துள்ளனர், மேலும் எட்டு புகழ்பெற்ற நடுவர்கள் குழு முதல் 100 நிறுவனங்களை மதிப்பாய்வு செய்து ஒப்புதல் அளித்தது. 2022 விருதுகள் உலகெங்கும் உள்ள பணியிடங்களைக் கொண்டுள்ளன/நிறுவனங்களின் பட்டியலை கொண்டுள்ளது.

“Fast Companyஆல் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்! இது எங்கள் குழுவின் அர்ப்பணிப்பான பணியை முன்னிலைப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒத்துழைப்பு மற்றும் உள்கட்டமைப்பு செயல்படுத்தப்பட்டால், புதிய அணுகுமுறைகள் புத்தாக்கங்கள் எங்கும் நிகழலாம் என்ற உண்மையையும் இது எடுத்துக்காட்டுகிறது”, என Twineryஇன் பிரதம புத்தாக்க அதிகாரி ரணில் விதாரண தெரிவித்தார்.

Twineryஇன் மனித வளத் தலைவர், Dineli ஜெயசேகர கூறுகையில், “Fast Companyயினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது, தொழில்முறை மட்டத்தில் மட்டும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் நமது திறமையை வளர்த்துக்கொள்வதற்கான சரியான சூழலை வளர்ப்பதற்கு நாங்கள் எடுக்கும் முயற்சியை உண்மையாகவே உறுதிப்படுத்துகிறது. சிறந்த விதத்தில் அவர்கள் செயல்பட அவர்களுக்கு இது உதவுகிறது.” என தெரிவித்தார். 

“புத்தாக்கங்களுக்கான சிறந்த பணியிடங்களின் இந்த ஆண்டு பட்டியல், குழு முழுவதும் படைப்பாற்றலை வளர்ப்பதில் ஆழ்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய நிறுவனங்களை அங்கீகரிக்கிறது,” என Fast Companyன் தலைமை ஆசிரியர் பிரெண்டன் வோகன் தெரிவித்தார். “பலமான சவால்களை எதிர்கொண்டு, இந்த தலைவர்களும் அணிகளும் தொடர்ந்து புத்தாக்கங்களுக்காக துண்டுதல்களை வழங்க வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் முழுமையான பட்டியலை பார்வையிட : https://www.fastcompany.com/best-workplaces-for-innovators/list 

Fast Companyன்இன் Best Workplaces for Innovators வெளியீடு (செப்டம்பர் 2022) இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது, மேலும் அச்சுப் பதிப்பு ஆகஸ்ட் 16, 2022 முதல் நியூஸ்ஸ்டாண்டுகளில் வெளியிடப்படும். #FCBestWorkplacesஐப் பயன்படுத்தி சிறந்த பணியிடங்கள் புத்தாக்கங்களுக்கான உரையாடலுக்கான இணையவும்.

Twinery, Innovations by MAS தொடர்பில் Twinery, MASஇன் புத்தாக்கங்கள் மனித கைத்தறி இடைமுகத்தை மாற்றுவதில் சிறந்த முன்னேற்றம் கண்டு வருகின்றன, இது உங்கள் சருமத்துக்கு அடுத்தபடியாக அற்புதமான, வாழ்க்கையை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை வைக்கிறது. எமது தாய் நிறுவனமான MAS ஹோல்டிங்ஸ் மூலம் உலகின் மிகப்பெரிய பிராண்டுகளுக்கான உற்பத்தியில் 30+ ஆண்டுகால அனுபவத்தைத் கொண்டுள்ள, Twineryஆனது பொருட்கள், விளக்குகள், வெப்பமாக்கல், வாசனைப் பாதுகாப்பு மற்றும் Haptics என 50க்கும் மேற்பட்ட பல்வகைதன்மை விளைவிக்கக் கூடிய தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. எங்கள் கண்டுபிடிப்புகள் வணிகங்களை  மாற்றியமைக்கவும், வாழ்க்கையை மேம்படுத்தவும்  மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றியமைக்கவும் உதவுகின்றன. இது Twinery புத்தாக்கமானது எங்கள் தீர்வுகள் மட்டுமல்ல, நமது கலாச்சாரமும் கூட. உலகத் தரம் வாய்ந்த விஞ்ஞானிகள், வடிவமைப்பாளர்கள், பொறியியலாளர்கள், சந்தைப்படுத்துபவர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோரை ஒன்றிணைத்து, நாளைய மென்மையான பொருட்கள் தொழில்நுட்பங்களை உருவாக்கி வணிகமயமாக்கி அவற்றை இன்று சந்தைக்குக் கொண்டு வருகிறோம்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: