இந்த ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை SLT-MOBITEL இணையத்தளமான www.sltmobitel.lk இலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
2023 ஆம் ஆண்டு வருடப்பிறப்பை கொண்டாடும் வகையிலும், மக்களின் டிஜிட்டல் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலும், தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL, இலங்கையின் முதலாவதும், வேகமானதும் பரந்தளவு இணைப்புத்திறனையும் கொண்ட SLT-MOBITEL Fibre சேவையின் டவுன்லோட் வேகத்தை 200Mbps ஆகவும், அப்லோட் வேகத்தை 100Mbps ஆகவும் அதிகரித்துள்ளது.
அனைவரையும் டிஜிட்டல் உள்வாங்கலில் கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில், வேகமான ஹோம் புரோட்பான்ட் சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL, தனது ஃபைபர் இணைப்புகளை மேம்படுத்தி வழங்குகின்றது.
வேகமான இணைப்புகளினூடாக, SLT-MOBITEL இன் சிறந்த வலையமைப்பு ஆற்றல்கள் பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றலும் வெளிப்பட்டுள்ளது. 2023 ஜனவரி மாதத்தில், வாடிக்கையாளர்கள் தமது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் மீளத் தொடர்புகளை ஏற்படுத்தும் போது, அல்ட்ரா-வேக புரோட்பான்ட் இணைப்பினூடாக, வாடிக்கையாளர்களின் இணைப்புத்திறன் மேம்படுத்தப்படுவதுடன், அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அனுபவிக்கக்கூடியதாகவும் இருக்கும். அல்ட்ரா வேகத்துக்கு மேலதிகமாக, Fibre அணுகலினூடாக, தகவல் பரிமாற்றத்தின் போது அவதானிக்கக்கூடிய எவ்விதமான தாமதங்களும் இருக்காது.
வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் வேகமான மற்றும் வினைத்திறனான சேவைகள் மற்றும் தீர்வுகளை எதிர்பார்க்கும் நிலையில், SLT-MOBITEL இன் புத்தாண்டுக் கொடுப்பனவாக அமைந்துள்ள 200Mbps வேக அதிகரிப்பானது, தேசத்தின் புரோட்பான்ட் பிரசன்னத்தை விரிவாக்கம் செய்ய ஆதரவளிப்பதாக அமைந்திருக்கும் என்பதுடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும். உயர் பான்ட்வித் பாவனையாளர்களுக்கு வரையறைகளற்ற வாய்ப்புகளை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், உயர்தரமான உள்ளடக்கம் மற்றும் ஆகக்கூடிய காட்சியமைப்பு, சில நிமிடங்களில் திரைப்படங்களை டவுன்லோட் செய்து கொள்வது, ஒன்லைனில் multiplayer கேமிங்கில் ஈடுபடுவது, மல்டிமீடியா பொருளடக்கத்தை பயன்படுத்துவது மற்றும் தெளிவான வீடியோ அழைப்புகளை அனுபவிப்பது போன்ற வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எவ்வாறாயினும், இந்த மேம்படுத்தல் Fibre Unlimited 10, 25 மற்றும் 50 பக்கேஜ்களுக்கு பொருந்தாது.