STEM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்வியில் தம்மை ஈடுபடுத்தியுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ‘FIRST Global Challenge’ இல் பங்கேற்றும் இலங்கை அணி அங்கத்தவரான மாஸ்டர் ரிகார்டோ ட்ரிஷேன் செனெவிரட்னவுக்கான பயண அனுசரணையை வழங்க SLT-MOBITEL முன்வந்திருந்தது. ஜெனிவாவில் அண்மையில் இடம்பெற்ற இந்த FIRST Global Challenge போட்டியில் பங்கேற்று வெற்றியீட்டுவதற்கு கைகொடுத்து ஊக்குவிக்கும் வகையி்ல இந்த அனுசரணையை SLT-MOBITEL வழங்கியது.
தொழில்நுட்பத்தினால் வழிநடத்தப்படும் பொருளாதாரத்தை உருவாக்குவதில் SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், புத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்கால திறன்களில் முதலீடு செய்வதன் முக்கியத்துவதையும் உணர்ந்துள்ளது. FIRST Global Challenge இல் மாஸ்டர் ரிகார்டோ ட்ரிஷேன் செனெவிரட்னவின் பங்கேற்புக்கு ஆதரவளித்திருந்ததனூடாக, இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும், இளைஞர்களுக்கு STEM கல்வியை தொடர வாயப்பு காணப்படுவதை உறுதி செய்வதுடன், கல்விசார்மட்டத்திலும் நிபுணத்துவமட்டத்திலும் பிரகாசமான எதிர்காலத்துக்கு தம்மை தயார்ப்படுத்திக் கொள்வதற்கான வளங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்கின்றது.
மாஸ்டர் ரிகார்டோ ட்ரிஷேன் செனெவிரட்னவின் பிரசன்னத்தினால், தெற்காசிய பிராந்தியத்தில் தொழில்நுட்ப முன்னோடி மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் ஊக்குவிப்பாளர் எனும் தோற்றப்பாடு சர்வதேச மட்டத்தில் SLT-MOBITEL க்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இலாப நோக்கற்ற அமைப்பான FIRST Global இனால் FIRST Global Challenge ஒலிம்பிக் பாணியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சர்வதேச ரொபோட்டிக்ஸ் போட்டியினூடாக, சகல நாடுகளையும் சேர்ந்த அணிகளை ஒன்றிணைத்து, போட்டியிடச் செய்து, சர்வதேச ரொபோவியலில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், உயர் கல்வி மாணவர்கள் மத்தியில் காணப்படும் பன்முகத்தன்மையை இணைக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த ஆண்டின் First Global Challenge இல் உலகளாவிய ரீதியிலிருந்து 180 க்கும் அதிகமான அணிகள் பங்கேற்றிருந்தன.
உலகின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் தமது திறன்களை பயன்படுத்தும் இந்த இளைஞர்கள் மத்தியில் இந்தப் போட்டியினூடாக புரிந்துணர்வு மற்றும் ஒன்றிணைந்த செயற்பாடு போன்றன ஊக்குவிக்கப்படுகின்றன. பெருமளவு சர்வதேச முகவர் அமைப்புகள், சர்வதேச அரசாங்கங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அடங்கலான தொழிற்துறை முன்னோடிகள் இந்தப் போட்டியை அங்கீகரித்துள்ளன.
இந்த ஆண்டின் இலங்கை அணியில் புரோகிராமிங்கில் சிறந்த மாணவர்கள், எந்திரவியல் மற்றும் வடிவமைப்பில் பாண்டித்தியம் பெற்றவர்கள், உயர் கல்வியில் STEM உடன் தொடர்புடைய கல்வியை தொடர் எதிர்பார்ப்பு கொண்டவர்கள் அடங்கியிருந்தனர். இந்த போட்டி ஆரம்பம் முதல் இலங்கை அணிகள் இதில் பங்கேற்றிருந்ததுடன், கடந்த கால விருதுகள் வழங்கலில் வெற்றியீட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.