Eyeview Sri Lanka

Galaxy S22 அறிமுகம்: மாணவ தூதுவர்கள் மற்றும் உறுப்பினர்களின் புத்தாக்கத்தைப் பாராட்டும் Samsung

Share with your friend

இலங்கையின் No:1 brandஆன Samsung, அவர்களின் முதன்மை தொடரான Samsung Galaxy S22ஐ அண்மையில் அறிமுகம் செய்தது. இவ் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடந்ததுடன் இதில் Samsung மாணவ தூதுவர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Samsung மாணவ தூதுவர்கள் brandஇன் பிரதிநிதிகளான இவர்கள் நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து வந்தவர்கள். Samsung மாணவர் தூதுவர் திட்டம் இலங்கையில் உள்ள இளம் மற்றும் திறமையான பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு அவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான ஓர் தளமாக உள்ளது. அவர்களில் சிறந்த புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த பயிற்சித் திட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றதுடன் பல தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பை பெற்றனர். இதேவேளை இதில் கலந்துகொண்ட நிபுனத்துவ ஆலோசனை வழங்கும் நிபுனர் மட்ட உறுப்பினர்கள் Galaxy பாவனையாளர்களுக்கு அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அவர்களுக்கு உதவும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

Samsung உறுப்பினர்களின் உதவியுடன் இந்த மாணவ தூதுவர்கள் Galaxy S22 தொடரின் அற்புதமான அம்சங்களை நேரடியாக அனுபவிக்க முடிந்தது. ஒரு வரவேற்கக் கூடிய நிகழ்வுக்கும் இத்தொடரின் சிறப்பான அம்சங்களை Nightography, 5G மற்றும் gaming போன்றவற்றை அனுபவிக்க சில மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டன. Samsungஇன் இலச்சினை தூதுவரான Yohani de Silva மற்றும் Samsung முகாமைத்துவப் பணிப்பாளர் Kevin SungSU YOU ஆகியோரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றனர். 

Kevin SungSU YOU, Samsungஇன் இலங்கைக்கான முகாமைத்துவப் பணிப்பாளர், “இந்த அதிநவீன பொருட்களை அடுத்த தலைமுறை நுகர்வோருக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.Samsung Galaxy S22இன் சிறப்பை நேரடியாக அனுபவிப்பதற்கு Samsung மாணவ தூதுவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.எமது பயணத்தின் முழுவதும் எங்களுக்கு மகத்தான ஆதரவாக இருந்துள்ளார்கள். மேலும் இவ் அறிமுகத்தில் அவர்களையும் கொண்டிருப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்” எனக் கூறினார். 

இந்நிகழ்வைப் பற்றி Samsung மாணவதூதுவர் கூறியதாவது:

Naveen Fernando – saegis Campus 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததும், Samsungஇன் ஊழியர்கள், பிரபலங்கள் மாணவ தூதுவர்கள் மற்றும் நிபுனர்களை சந்தித்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.   நிகழ்ச்சிகளை onlineஇல் பார்ப்பது வழக்கம். இவ்வாறான நிகழ்வுகளில் பங்குகொள்ள நான் ஆசைப்பட்டதுண்டு. அந்த ஆசையை Samsung நிறைவேற்றியது. இதன் பல 5G தொழில்நுட்பத்தைப் பற்றி கொடுக்கப்பட்ட பேச்சுக்கள் மூலம்  நிறை அறிவைப் பெற்றேன்.

Punesha Weerasinghe – University of Colombo 

இவ்நிகழ்வு  ஒரு அற்புதமான அனுபவமாக இருந்ததோடு Samsung மாணவ தூதுவர்களை சந்தித்ததும் 5G தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டதும் சிறந்த வாய்ப்பாகும். அத்துடன் இலச்சினை தூதுவர் Yohaniஇன் நிகழ்ச்சி ரசிக்கத்தக்கதாகவும் இருந்தது.

Dinuka Piyadigama – Informatics institute of Technology 

நான் அழைக்கப்பட்ட தொழில்நுட்ப நிகழ்வுகளில் சிறந்த நிகழ்வு இதுவாகும். இதில் தொழில்நுட்ப ஆர்வம் உள்ள பலரை சந்தித்தது சிறப்பானது. மற்றும் இச்சாதனங்களை வைத்திருந்தது சந்தோசமாகவும் உற்சாகமாகவும் இருந்தது.

Zeron Anas – General Sir John Kotelawala Defence University

Samsung மாணவர் தூதுவர்கள் முயற்சியில் அற்புதமான அனுபவத்தைப் பெற்றதோடு 5G தொழில்நுட்பத்தில் எங்கள் அறிவை விரிவுப்படுத்த பல விடயங்களைக் கற்றுக் கொண்டோம். அத்துடன் S pen ஒரு Dedicated Home, மேம்பட்ட உற்பத்தி திறன் அம்சங்கள், Pro-Grade Cameraக்கள், பாரிய Storage, Faster Charging தொழில்நுட்பம், Galaxy S22 Ultraஇல் பயன்படுத்தப்படும் artificial intelligence போன்றவற்றை அறிந்து கொண்டோம்.

Fathima Litha – KAATSU International University of Sri Lanka

Samsung S22 வெளியீடு Samsung மாணவ தூதுவர்கள் ஒன்றாக சந்தித்த அதிகாரப்பூர்வமான Samsung நிகழ்வாகும். Samsungஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் Mr Kevin மற்றும் நிர்வாகக் குழுவை சந்தித்ததும் நிபுனத்துவ உறுப்பினர்களுடன் உரையாடியது மற்றும் இலச்சினை தூதுவர் Yohaniஇன் நிகழ்ச்சியை அனுபவித்தது ஒரு சிறந்த அனுபவத்தை தந்தது.

Azarudeen Mohamed – The open University of Sri Lanka

அடுத்த தலைமுறை mobile tech 5Gஇன் புதிய விடயங்களைப் பற்றி அறிய முடிந்தது. மேலும் மற்ற மாணவ துர்துவர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

Shajani perara – National School of Business Management

அற்புதமான நபர்களுடன் அத்தகைய மாலைப் பொழுதில் ஒரு பகுதியாக இருந்தது திருப்தியாக இருந்ததது. முழு நிகழ்வும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாம் என் குடும்பத்துடன் இருப்பது போல் உணர்ந்தது இவ் முழுநிகழ்வும் எனக்கு மிகவும் பிடித்தது.

Sayuru Katipearchchi – Ocean University of Sri Lanka 

இவ்வாறான ஒரு அற்புதமான தயாரிப்பு வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டது முதல் தடவையாகும்.Galaxy S22 Nightography உடன் சிறந்த அனுபவத்தை பெற்றுக்கொண்டேன். இந் நிகழ்வில் ஒருவராக இருந்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

Gishan Rivindu – Sri Lanka Institute of Information Technology

Samsung மாணவ தூதுவர்களுடன் வல்லுநர்கள் மற்றும் Samsung குழுவுடன் முதல்முறையாக நேரடியாக சந்தித்தது மிகவும் அருமையான தருணமாகும். Galaxy S22 மற்றும் S22 Ultra ஆகியவை நாம் இதுவரைப் பார்த்த சிறந்த சாதனங்கள். அதனைப் பயன்படுத்தி அனுபவிப்பதற்கான வாய்ப்பை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன் nightography அனுபவத்தை மிகவும் விரும்புகிறேன். எதிர்காலத்தில் மேலும் பல தயாரிப்பு வௌயீட்டு நிகழ்வில் பங்கேற்க எதிர்பார்க்கிறேன்.

Nimasha Sankalani – University of Colombo

ஆரம்ப முதல் இறுதிவரை Samsung Galaxy S22 தொடரில் வெளியீட்டு நிகழ்வில் ஒரு பகுதியாக இருந்ததை நான் மிகவும் பெருமயாக உணர்ந்தேன். ஏற்பாடுகள் சிறப்பாக திட்டமிட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

Uditha Gamage – University of Moratuwa

தயாரிப்பு வரிசையின் அம்சங்களைப் பற்றிய விடயங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு நிகழ்வுகள் அதில் அடங்கும் மற்றும் nightography அம்சங்களை நான் குறிப்பாக ரசித்ததோடு இலச்சினை தூதுவர் Yohani இன் இசைநிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.

Vinura Osada Gallage – University of Moratuwa

Galaxy S22 unpacked நிகழ்வுக்கு எங்களை அழைத்ததற்காக Samsung Srilanka குழுவினருக்கு நன்றி.திரையில் அல்லது நேரலையில் பார்ப்பதை விட இது எல்லா வகையிலும் சிறப்பாக இருந்தது.

இந்த நிகழ்வைப் பற்றி Samsung உறுப்பினர்கள் கூறியவை: 

Sadesh Abeysinghe – Expert Level 5

S22 தொடரின் வெளியீடு நன்றாக செயல்படுத்தப்பட்டது என நினைக்கின்றேன். இவ்வாறான நிகழ்வொன்றில் நான் கலந்து கொள்வது இரண்டாவது தடவையாகும். அவர்களின் தொலைபேசிகளின் தரத்தைப் போலவே Samsungஇன் ஏற்பாட்டுக் குழுவும் அருமையான ஒன்றை வழங்கியது.

Janith Chandima Fernando – Expert Level 5

சிறந்த அனுபவத்தை பெறுவதற்கான சாதனங்களை வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது. குறைந்த வெளிச்சத்தில் படங்களை எடுக்க முடிந்தது அற்புதமாக இருந்தது. இவற்றின் அம்சங்கள் மிகவும் ஆச்சரியமாக இருந்ததோடு Camera அருமையாக இருந்தது.

Sakila Pamudith – Expert Level 2

குறிப்பாக Mr Kevin SungSU YOU, மற்றும் Samsung நிர்வாக அதிகாரிகளை சந்திப்பதற்கு இது சிறந்த வாய்ப்பாக இருந்ததோடு அனைத்து சிறப்பான சந்தர்ப்பங்களிலும் எங்களுடன் இணைந்ததிற்கு நன்றி.


Share with your friend
Exit mobile version