Eyeview Sri Lanka

Global Business Excellence Awards 2025 விருது விழாவில் மூலிகை அடிப்படையிலான தனிநபர் பராமரிப்பு பொருட்களில் சிறந்த நிறுவனமாக கௌரவிக்கப்பட்ட சுதேசி

Share with your friend

மூலிகை சார்ந்த தனிநபர் பராமரிப்பு பொருட்களில் சந்தையின் முன்னோடியாக விளங்கும் சுதேசி இன்டஸ்ட்ரீஸ் வோர்க்ஸ் பி.எல்.சி. (Swadeshi Industrial Works PLC) நிறுவனம், Global Business Excellence Awards 2025 – Elite Series II உலகளாவிய வணிக விசேடத்துவத்திற்கான விருது விழாவில், மூலிகை அடிப்படையிலான தனிநபர் பராமரிப்பு பொருட்களில் சிறந்த நிறுவனம் என்ற விருதை தனதாக்கியுள்ளது.

Swadeshi Industrial Works PLC நிறுவனத்தின் தலைவி திருமதி அமரி விஜயவர்தன, நிறுவனத்தின் பிரதித் தலைவரும் அதன் முகாமைத்துவ பணிப்பாளருமான சூலோதர சமரசிங்க,  பிரதம செயற்பாட்டு அதிகாரி அமில உடவத்த, செயற்பாடு மற்றும் MIS பொது முகாமையாளர் சமந்த மனமுதலி, பெருநிறுவன அலுவல்கள் மற்றும் வணிக சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் சமிந்த ஜயசிங்க…

இந்த Global Business Excellence Awards 2025 – Elite Series II விருது விழா, 2025 ஓகஸ்ட் 10ஆம் திகதி கொழும்பு BMICH இல் நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கையின் சிறந்த வணிக நிறுவனங்களும் தலைவர்களும் கௌரவிக்கப்பட்டனர். உலகளாவிய வணிக விசேடத்துவ விருதானது, பல்வேறு தொழில்துறைகளில் சிறந்த சாதனைகளை கௌரவிக்கும் ஒரு சர்வதேச மேடை ஆகும். இதனை London Business Consultancy நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

வெளிப்படையான மற்றும் நியாயமான தெரிவுச் செயன்முறை உறுதி செய்யப்பட்டு, தொழில்துறை நிபுணர்களின் விசேட குழுவினரால் இவ்விருதுகள் தீர்மானிக்கப்பட்டன. அனைத்து அளவிலான வணிகங்களையும் உலகளாவிய மற்றும் தேசிய ரீதியில் கௌரவமளித்து, ஒரு சிறந்த அளவுகோலை உருவாக்குவதே இவ்விருது விழாவின் நோக்கமாகும். ஒவ்வொரு சாதனையும் ஒரு கதையை கூறுகிறது. அது தூரநோக்கு, கடின உழைப்பு, மற்றும் ஈடுகொடுக்கும் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த விருது வெறுமனே ஒரு கௌரவிப்பு மாத்திரம் அல்ல; ஒரு உயர்ந்த குறிக்கோளை நோக்கிச் செல்லும் ஒப்பிட முடியாத அர்ப்பணிப்புக்கும் ஆர்வத்திற்குமான ஒரு மரியாதையாகும். ஒவ்வொரு கௌரவிப்பின் மூலமும் வெற்றியை கொண்டாடுவதோடு மாத்திரமல்லாமல், ஏனையோரையும்  அதற்காக ஊக்குவித்து, பெரிய கனவுகளை காணவும், மேலும் அதிகம் அதற்காக பாடுபடவும், சிறந்த சாதனைகளை  அடையவும் தூண்டுகிறது.

ஒரு உள்ளூர் நிறுவனம் எனும் வகையில் சுதேசி, இலங்கையிலுள்ள சமூகங்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. Swadeshi Industrial Works PLC நிறுவனமானது, இயற்கை அன்னையை பராமரிப்பதில் கவனம் செலுத்தி, நிலைபேறான திட்டங்களை நிறைவேற்றுதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விகாரைகளின் ‘ஆலோக பூஜா’ வருடாந்த ஒளியேற்றல் நிகழ்வுகளுக்கான அனுசரணை, ‘சுதேசி கொஹொம்ப மிஹிந்தலா சத்காரய’ வேம்பு மர நடும் பிரசாரங்கள், இலங்கையில் வரட்சியான பகுதிகளில் உள்ள சமூகங்களுக்கும் பாடசாலைகள் மற்றும் விகாரைகளுக்கும் நீர்த் தொட்டிகளை நன்கொடையாக வழங்குதல், கொஹொம்ப பேபி பராமரிப்பு பொருட்களை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சுதேசி நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளாக குறிப்பிடலாம்.

“இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் உற்பத்தி நிறுவனம் எனும் வகையில், சுதேசி நிறுவனமாகிய நாம் எமது அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் தொடர்பில் நுகர்வோர் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். நாம் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுடன், பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக முழுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன், எமது தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையானது. அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளுக்கு கொடுமை ஏற்படுவதிலிருந்து தடுக்கப்பட்டவை. சுதேசி கொஹொம்ப மற்றும் ராணி சந்தனம், கொஹொம்ப பேபி ஆகியன இங்கிலாந்திலுள்ள Vegetarian Society, UK யின் அங்கீகாரம் பெற்றவையாகும்.” இந்த உறுதிமொழியானது, நிறுவனத்தின் முன்னோக்கிய சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ளவும் உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் அவற்றிற்கு முன்னுரிமையளிக்கின்றது. உண்மையான இலங்கை நிறுவனமான சுதேசி, கடந்த 80 வருடங்களில் தொழில்துறையில் முந்திக் கொண்டு தனது பெயரில் பல்வேறு முதலாவதாக மேற்காண்ட சாதனைகளுக்குரிய உரிமை கோரல்களுக்கு உரித்துடையதாக திகழ்கின்றது.

இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேசியின் முன்னணி வர்த்தகநாமங்களில் சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி, பேர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப ஹேண்ட் வொஷ், கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிறீம் ஆகியன உள்ளடங்குகின்றன. சுதேசி நிறுவனம், இலங்கையில் முதலிடத்திலுள்ள மூலிகை வர்த்தகநாமமான ‘கொஹொம்ப ஹேர்பல்’ மற்றும் பாரம்பரிய அழகு வர்த்தகநாமமான ‘ராணி சந்தனம்’ ஆகியவற்றை தயாரித்து சந்தைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கையின் சுகாதார அமைச்சின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச வாசனை சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், ISO 9001 – 2015 தரச் சான்றிதழின் அடிப்படையில் அவை தயாரிக்கப்படுகின்றன.


Share with your friend
Exit mobile version