SOFTLOGIC GLOMARK இன்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவிப்பாக, அதன் புதிய தத்துவமான “SQ☯ BETTER LIFE” (வீட்டிற்கு ஒரு சிறந்த வாழ்க்கை) இனை கொழும்பில் உள்ள NH கலெக்ஷன்ஸில் நடந்த பிரத்தியேக வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தியது. இந்த மூலோபாய மறுசீரமைப்பு நல்வாழ்வை மையமாக கொண்ட சில்லறை விற்பனைக்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் முதல் பல்பொருள் அங்காடியாக GLOMARK இன் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.

இம் மாற்றம் GLOMARK இன் உயர் மதிப்பிலான விற்பனையிலிருந்து சில்லறை விற்பனைக்கும், சுவையான உணவுகளிலிருந்து புத்திசாலித்தனமான உணவுகளுக்கும், பொருட் கொள்வனவில் இருந்து வாடிக்கையாளர் அதிகாரமளிப்புக்குமான ஒரு மூலோபாய மாற்றத்தை குறிக்கிறது. சிறந்த வாழ்க்கை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கும் தயாரிப்புக்களை ஒழுங்கமைப்பதன் மூலம் GLOMARK தெளிவான தயாரிப்பு பற்றிய கல்வி, எளிதாக அடையாளம் காணுதல், மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட உயர் மதிப்பிலான மதிப்பிலான பொருட்களை விட நல்வாழ்வு இலக்குகளுடன் ஒத்துப்போகும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வுகளை வழங்குவதன் மூலம் ஷாப்பிங்கை ஓர் அதிகாரமளிக்கும் பயணமாக மாற்றுகிறது.
“எமது வாடிக்கையாளர்களின் வாழ்வில் எமது பங்களிப்பை மறுபரிசீலனை செய்வதே ©60 BETTER LIFE என்று ODEL & GLOMARK இன் தலைமை நிர்வாக அதிகாரி டெரி ஓ’கொனர் கூறினார். “நாங்கள் வெறுமனே ஓர் பல்பொருள் அங்காடியாக இருப்பதை தாண்டி முன்னேறி வருகின்றோம். ஒவ்வொரு வீட்டிலும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தேவையான அறிவு, தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு மற்றும் அனுபவத்தை நாங்கள் வழங்குகிறோம். இதன் பொருள் எமது வாடிக்கையாளர்களுக்கு கல்வி மற்றும் தகவலை வழங்குவதன் மூலம் அவர்களின் குடும்பத்தின் நல்வாழ்வை உண்மையிலேயே மேம்படுத்தக் கூடிய தகவலறிந்த தேர்வுகளை எடுக்க அவர்களை அனுமதிப்பதாகும்.”
இவ் ©OO BETTER LIFE எனும் தத்துவம் ஆரோக்கியம், செயல்பாடு மற்றும் தகவலறிந்த தேர்வுக்கு முன்னுரிமை ஆகியவற்றுக்கு முன்னுறிமை வழங்கக் கூடிய சில்லறை விற்பனை மூலம் இலங்கை குடும்பங்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்டு வருவதற்கான GLOMARK இன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இச் சில்லறை விற்பனை மறுகண்டுபிடிப்பு இலங்கையில் நல்வாழ்வும், நோக்கமும் கொண்ட ஷாப்பிங் அனுபவத்துடன் கூடிய நவீன சில்லறை விற்பனையின் அடுத்த சகாப்தத்தை வழிநடாத்த GLOMARK இனை நிலைப்படுத்துகிறது.
இம் மறுபெயரிடல் திட்டத்தின் ஓர் பகுதியாக புடுழுஆயுசுமு இலங்கையின் நல்வாழ்வு சம்பந்தப்பட்ட குழந்தைகள் கதை புத்தகமான ©6O BETTER SQUAD இனை அறிமுகப்படுத்தியது. இந்த நகைச்சுவை பாணியிலான புத்தகம் ஆரோக்கியமற்ற உணவுகளை எதிர்த்து போராடும் மற்றும் சத்தான, ஆரோக்கியத்தை மையமாக கொண்ட உணவுகளை வென்றெடுக்கும் ஹீரோக்களின் குழுவை பின்தொடர்கிறது. ஆரோக்கியமான உணவை நகைச்சுவையாகவும், தொடர்புபடுத்தக் கூடியதாகவும் மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த கதை ஆரோக்கியமான உணவுகளை சூப்பர் ஹீரோக்களாக மறுகற்பனை செய்கிறது. இதன் மூலம் தயக்கத்துடன் அல்லாமல் உற்சாகத்துடன் சிறந்த உணவுப் பழக்கத்தை தழுவ குழுந்தைகளை ஊக்குவிக்கிறது.
GLOMARK பற்றிய விபரம்
GLOMARK என்பது இலங்கையின் முதல் உத்வேகமளிக்கும் பல்பொருள் அங்காடியாகும். இது Softlogic Supermarkets (Pvt) Ltd ஆல் இயக்கப்படும் Softlogic Holdings PLC இன் முழு உரிமைக்குள் உள்ளடங்கும் துணை நிறுவனமாகும். 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட GLOMARK இலங்கையில் நவீன சில்லறை விற்பனை அனுபவத்தை மறுவரையறை செய்துள்ளது. நல்வாழ்வு, தரம் மற்றும் தகவலறிந்த தேர்வுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கமுள்ள சில்லறை விற்பனை மூலம் இலங்கைவாழ் குடும்பங்களுக்கு சிறந்த வாழ்க்கையை கொண்டு வருவதற்கு GLOMARK உறுதிபூண்டுள்ளது.