HNB கார்ட் வைத்திருப்பவர்களுக்கு ‘Shop with Joy’திட்டத்தின் ஊடாக பிரத்தியேக சலுகைகள்

Share with your friend

இலங்கையின் முன்னணி தனியார் துறை வாடிக்கையாளர் வங்கியான HNB PLC, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ‘Shop With Joy’ திட்டத்தின் மூலம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு பல பிரத்தியேக சலுகைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

13 நவம்பர் 2022 முதல் 31 டிசம்பர் 2022 வரை HNB இலங்கையின் முன்னணி வாடிக்கையாளர் அங்காடிகள், நகைக் கடைகள் மற்றும் e-commerce பிராண்டுகள் மற்றும் பிரபலமான உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஹோட்டல்களுடன் இணைந்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு 70% வரையிலான  கழிவுகள் மற்றும் 60 மாதங்கள் வரை மேலதிக கட்டணங்கள் இல்லாத மாதாந்தர தவணை திட்டங்கள் உட்பட பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது.

“கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம் HNB இல் உள்ள எங்களுக்கு மிகவும் உற்சாகமான காலப்பகுதியாகும். ஒவ்வொரு ஆண்டும் எங்களது நம்பிக்கையான வாடிக்கையாளர்களுடன் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுகிறோம். இந்த இந்த உற்சவ காலத்தில், எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியான பண்டிகை காலத்தை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் உள்ள எங்களது பரந்த வர்த்தக பங்குதாரர்களின் வலையமைப்பின் மூலம் பல்வேறு சலுகைகளை வழங்குகிறோம்.” என HNB கார்ட் பிரிவின் பிரதானி திருமதி கௌதமி நிரஞ்சன் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள உள்ள பல பல்பொருள் அங்காடிகள் பல சிறப்பு சலுகைகளை வழங்க HNB உடன் கைகோர்த்துள்ளன. தற்போதைய சூழலில் நுகர்வோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். HNB கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள், நாட்டில் உள்ள முன்னணி சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளில் இருந்து வாரம் முழுவதும் மளிகை பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய வீட்டு உபகரணப் பொருட்களை கொள்வனவு செய்யலாம்.

உதாரணமாக, Cargillsஇல் இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு 2,500 ரூபாவுக்கு மேல் கொள்வனவு செய்பவர்களுக்கு 20% தள்ளுபடி வழங்குகிறது. Keells Super இல் புதிய காய்கறிகள், பழங்கள் மற்றும் Sea Foods களுக்கு 4,000 ரூபாவுக்கு மேல் Order செய்தால் 25% தள்ளுபடி வழங்குகிறது. HNB கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு, Laugfs Super இல் இருந்து புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் 2,500 ரூபாவுக்கு மேல் Order செய்தால் 25% சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறார்கள்.

Softlogic Glomark ஆனது HNB கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்கு முறையே 20% மற்றும் 10% தள்ளுபடி வழங்குகிறது. 2,000 ரூபாவுக்கு மேல் பில்களுக்கு SPAR இலிருந்து புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன்களை கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால், 20% தள்ளுபடி வழங்குகிறது. Arpico Super Centerகளில் பழங்கள், காய்கறிகள் மற்றும் Sea Food பொருட்கள் 3000 ரூபாவுக்கு மேல் வாங்கினால் 25% தள்ளுபடியையும் வழங்குகிறது.

இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் இலத்திரனியல் பொருட்களுக்கான தேவையை கருத்தில் கொண்டு, HNB, Abans மற்றும் Buyabans “சிங்கர் காட்சியறைகள் மற்றும் Singer.lk, Softlogic காட்சியறைகள், Softlogic MAX மற்றும் Furnitures, Seetha Holdings, Dinapala Group, Hunters, சிங்ககிரி மற்றும் CameraLK ஆகியவற்றுடன் கைகோர்த்துள்ளன. நாட்டில் உள்ள பல புகழ்பெற்ற பிராண்டுகள், வாடிக்கையாளர்கள் 24 மாதங்கள் வரை கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் மாதாந்திர தவணை திட்டங்களுடன் இந்த கடைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு 40% வரை தள்ளுபடியைப் பெறலாம்.

மேலும், HNB பல ஆன்லைன் கொள்வனவு கடைகளுடன் கூட்டு சேர்ந்து வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பாக ஷாப்பிங் செய்ய உதவுகிறது. இதன்படி, Daraz.lk, Takas.lk, Wasi.lk, Promateworld.com, Glomark.lk மற்றும் PickMe Food and Market ஒன்லைன் வர்த்தக இணையத்தளங்களில் இருந்து கொள்வனவு செய்யப்படும் எந்தவொரு தயாரிப்புக்கும் 30% வரை தள்ளுபடியைப் பெற முடியும்.

HNB கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள், நாட்டில் உள்ள பிரபல்யமான நகைக் கடைகளில் நகை வாங்குபவர்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் இல்லாத மாதாந்த தவணைத் திட்டங்களைப் பெறுவதற்கான சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன்படி, Premadasa Jewellers, Raja Jewellers, Swarnamahal Jewellers, Vogue Jewellers, Colombo Jewellers Stors மற்றும் Mallika Hemachchandra Jewellers ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நகைகளுக்கு 40% வரை தள்ளுபடியும், 12 மாதங்கள் வரை மேலதிக கட்டணங்கள் இல்லாமல் தவணைக் கட்டணத் திட்டங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும், HNB கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள், இந்த விளம்பரக் காலத்தில் நாடு முழுவதிலுமுள்ள பல பிரபலமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் இருந்து சிறப்பு விலையில் உணவை அனுபவிக்க முடியும்.

HNB கார்ட் வைத்திருப்பவர்களுக்கு Cinnamon Hotels, Browns Hotels மற்றும் Oak Ray ஆகியவற்றில் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படும். மேலும், HNB கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள், Pizza Hut இலிருந்து ஏதேனும் பெரிய Pan Pizza வாங்குவதன் மூலம் கூடுதல் Classic Large Pan Pizzaவைப் இலவசமாக பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது அல்லது Taco Bell’s à la carte மெனுவிலிருந்து ஒரு பொருளை வாங்கி மற்றுமொரு பொருளை இலவசமாகப் பெறலாம். மேலும், HNB கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் Kingsbury Hotelஇல் உள்ள Indulgence இல் உணவு வாங்குபவர்களுக்கு 20% தள்ளுபடியும், Cinnamon Red” Flavored இல் இரவு உணவை அனுபவிக்கும் போது அவர்களின் கிரெடிட் கார்ட்களுக்கு 20% தள்ளுபடியையும் பெற்றுக் கொள்ள முடியும்.

புதிய பாடசாலை தவணைக்கான பாடசாலை உபகரணங்களை வாங்க விரும்பும் மாணவர்கள், Promateworld.com இலிருந்து அனைத்து பாடசாலைப் பொருட்கள் மற்றும் எழுது கருவிகளை வாங்கும் போது, ​​கிரெடிட் கார்ட்களில் 30% மற்றும் டெபிட் கார்ட்களில் 25% வரை தள்ளுபடி சலுகையைப் பெறலாம்.

இதுதொடர்பான மேலதிக தகவல்களை https://www.hnb.net/personal/promotions/card-promotions#secoffers ஐப் பார்வையிடுவதன் மூலம் பெறலாம்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply