வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் HNB FINANCE, தனது வாடிக்கையாளர்களின் தயாரிப்புகளுடன் கிறிஸ்மஸ் கண்காட்சியை டிசம்பர் 16 முதல் 18 வரை வத்தளை புனித அன்னாள் பேராலய வளாகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. கிறிஸ்மஸ் சந்தை டிசம்பர் 16 முதல் மூன்று நாட்களுக்கு காலை 9 மணி முதல் திறந்திருக்கும்.
HNB FINANCEஇன் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு அணுகுமுறையின் மற்றொரு கட்டமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் சந்தையானது, நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான நுகர்வுப் பொருள் தயாரிப்புகளை பொது நுகர்வோர் சமூகத்திற்குக் கொண்டு வந்து, அந்த தயாரிப்புகளுக்கான விற்பனை ஊக்குவிப்பையும் வழங்குவதற்கு, இந்த நிகழ்வு ஒரு உகந்த தளத்தை உருவாக்குகிறது. HNB FINANCE கிறிஸ்மஸ் சந்தைக்கான நுழைவுக் கட்டணம் இலவசம், மேலும் இந்த கிறிஸ்மஸ் சந்தையானது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும் பொதுவாக அனைவருக்கும் திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் நவலோக மருத்துவ நிலையத்திலிருந்து இலவச சுகாதார பரிசோதனையை பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இது குறித்து கருத்து தெரிவித்த HNB FINANCE PLC இன் விற்பனைப் பிரிவின் தலைவர் உதார குணசிங்க, “பாரிய சவால்களுக்கு மத்தியில் நாம் இன்னொரு வருடத்தின் இறுதிக்குள் வந்திருகிறோம். தங்கள் அன்புக்குரியவர்களுடன் இதுபோன்ற சிறு சிறு மகிழ்ச்சியுடன் கிறிஸ்மஸைக் கொண்டாடும் வாய்ப்பை அவர்களால் வழங்க முடிந்தால், அது அவர்களின் வாழ்க்கைக்கு இந்த தருணத்தில் ஆறுதலைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. இதை மனதில் வைத்து, HNB FINANCE ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கிறிஸ்மஸ் சந்தையின் மூலம், எங்கள் மைக்ரோ லோன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்துவதற்கும் அவற்றை விற்பனை செய்வதற்கும் உகந்த தளத்தை உருவாக்க முடியும். நுகர்வோர் இந்த பொருட்களை மிகவும் கவர்ச்சிகரமான விலையில் வாங்க முடியும் என்பதால், கிறிஸ்மஸ் சந்தை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் ஒரு பயனுள்ள வர்த்தக தளமாக மாறும் என்று நான் நம்புகிறேன். இந்த கடினமான பணிகளுக்குத் தோள் கொடுத்த எங்களின் அனைத்து HNB FINANCE உறுப்பினர்களுக்கும், இந்தப் பணிகளை வெற்றிகரமாகச் செய்ய முன்வந்த HNB FINANCE வாடிக்கையாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.
HNB FINANCE கிறிஸ்மஸ் சந்தையானது பல்வேறு வகையான பாதணிகள், ஆடைகள், பரிசுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், எழுது கருவிகள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள், மரப் பொருட்கள், அலங்கார செடிகள், நிதிச் சேவைகள் உட்பட பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
அதன் வாடிக்கையாளர்களை மேம்படுத்துவதற்கும், அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு உகந்த தளத்தை உருவாக்குவதற்கும், HNB FINANCE அதன் தொடக்கத்தில் இருந்தே இதுபோன்ற பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது போன்ற சமூகம் தலைமையிலான செயற் திட்டங்கள் சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு பெரும் ஆதரவை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.