Eyeview Sri Lanka

HNB FINANCE PLCஇன் நிதிச் சேவைத் தீர்வுகள் தற்போது அம்பலாந்தோட்டையில்

Share with your friend

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது அம்பலாந்தோட்டை கிளையை கடந்த ஜூன் 30ஆம் திகதி இல. 43, மகா வீதி, அம்பலாந்தோட்டையில் (பெரகம சந்திக்கு அருகில்) திறந்து வைத்தது.

அம்பலாந்தோட்டை கிளையின் திறப்பு நிகழ்வின் போது HNB FINANCE PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்த நிகழ்விற்கு HNB FINANCE PLCஇன் பிரதிப் பொது முகாமையாளர்கள், கிளை முகாமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட முக்கிய உறுப்பினர்கள் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அம்பலாந்தோட்டை கிளை திறப்பிற்கு சமாந்தரமாக HNB FINANCE தங்கக் கடன் சேவையும் இந்தக் கிளையில் புதிதாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தங்கத்திற்கான உச்ச முற்கொடுப்பனவுத் தொகையை குறைந்த வட்டியின் கீழ் பெற்றுக் கொடுக்கும் HNB FINANCE தங்கக் கடன் சேவையிலுள்ள மற்றுமொரு சிறப்பம்சம் தான், சேவை, ஆவணங்கள் அல்லது மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லாமல் துரிதமான, நம்பிக்கையான சேவையை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும். தங்கக் கடன் சேவைக்கு மேலதிகமாக, HNB FINANCE அம்பலாந்தோட்டைக் கிளையானது லீசிங் சேவைகள், சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக்கள், வணிகக் கடன்கள், வீட்டுக் கடன்கள் போன்ற பல நிதிச் சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்குகிறது.

HNB FINANCE PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், புதிய கிளையில் அதி கூடிய வசதிகளுடன் வழங்கப்படும் சேவைகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், “அம்பலாந்தோட்டை நகரில் திறக்கப்பட்ட இந்தக் கிளை, இப்போது அம்லாந்தோட்டை நகரத்தில் புதிய வளாகத்தில் இயங்கும், இது மிகவும் விசாலமான மற்றும் மக்கள் எளிதில் அணுகக்கூடியது. அம்பலாந்தோட்டை, மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் எமது வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவர்கள் மிகவும் நம்பகமான மற்றும் திறமையான சேவையை வழங்குவார்கள் என்பது எனது நம்பிக்கை.” என அவர் கூறினார்.


Share with your friend
Exit mobile version