Site icon Eyeview Sri Lanka

HNB Finance PLCஇன் புதிய தலைவராகடில்ஷான் ரோட்ரிகோ நியமிக்கப்பட்டார்

Share with your friend

HNB Finance PLC (HNBF) நிறுவனத்தின் புதிய தலைவராக டில்ஷான் ரொட்றிகோ 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர் நிறுவனத்தின் சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராகவும் குறித்த தினத்திலிருந்து நடவடிக்கை மேற்கொள்வார்.

2014ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை HNB Finance PLCஇன் தலைவராக நடவடிக்கை மேற்கொண்ட ஜொனதன் அலஸ் ஓய்வு பெற்றதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்காக HNB Finance PLCஇன் புதிய தலைவராக டில்ஷான் ரொட்றிகோ அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டில்ஷான் ரொட்றிகோ, வங்கி, காப்புறுதி, முதலீட்டு வங்கி முறைமை மற்றும் ஆடைக் கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் பதவிகள் பலவற்றை வகித்துள்ளார். அத்துடன் அவர் தற்போது Hatton National Bannk PLCஇன் நிறைவேற்று அதிகாரமுடைய பணிப்பாளராகவும், பிரதான செயற்பாட்டு அதிகாரியாகவும் கடமையாற்றுவதுடன் HNB Assurance “Guardian Acuity Management” Lanka Financial Services Bureau Ltd மற்றும் Credit Information Bureau போன்ற நிறுவனங்களில் சிரேஷ்ட பதவிகளை வகித்து சிறந்த சேவையை செய்து வருகிறார்.

வர்த்தக பேண்தகைமையாக மேற்கொள்ளும் புத்திசாலித்தனம் மற்றும் வலுவான தலைமைத்துவத்துடன் அவர் தற்போது HNBஇல் செயற்பாட்;டு நடவடிக்கைகளுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்து சிறப்பாக கடமையாற்றி வருகிறார்.

தில்ஷன் ரொட்றிகோ தற்போது இலங்கை பணிப்பாளர் நிறுவனம் (SLID) மற்றும் ஆசிய வங்கியாளர்கள் சங்கம் (தாய்வான்) ஆகியவற்றின் கொள்கை ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக உள்ளார். அவர் இரண்டு முறை CIMA, ACCA மற்றும் Risk Professional Forumஇன் தலைவராக இரண்டு முறை பணியாற்றியுள்ளார். அவர் பத்துவருடங்களுக்கு மேலாக பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் (CIMA, ACCA, PIM MBA) விரிவுரையாளராக தனது அறிவைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் தற்போது அதன் கல்வித் துறைகளில் தனது அறிவை வழங்கி வருகிறார் மற்றும் SLIDஇன் ஆய்வுத் திட்டங்களில் சிறப்பு வரவேற்பு  விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். டில்ஷான் ரொட்றிகோ CIMA மற்றும் ACCA போன்ற இங்கிலாந்து கணக்கியல் நிறுவனங்களின் உறுப்பினராக உள்ளார் மற்றும் இங்கிலாந்தின் கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமொன்றையும் பெற்றுள்ளார்.


Share with your friend
Exit mobile version