இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, இலங்கையில் பணிபுரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகவும் ஆசியாவில் இரண்டாவது முறையாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 23 வயது மற்றும் 38 வயதிற்குட்பட்ட இளம் ஊழியர்களுக்காக நாட்டில் பணிபுரிவதற்கு மிகவும் சிறந்த 15 நிறுவனங்கள் (15 best work places for millennials in Sri Lanka 2021) அடங்கிய பட்டியலில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Great Place to Work சர்வதேச நிறுவத்தின் மூலம் வருடம் தோறும் இலங்கையில் பணிபுரிவதற்கு மிகவும் பொருத்தமான முதல் 40 நிறுவனங்கள் அடங்கிய பட்டியலில் HNB Finance இடம் பிடித்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய ரீதியில் தொற்றுநோயை எதிர்கொண்டு, ஒட்டுமொத்த சமுதாயமும் சவாலான சூழலை எதிர்கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த மதிப்பீட்டை பெற்றதன் மூலம் HNB Finance பலமுறை தங்கள் சேவைகளை உயர் தரத்தில் நிர்வகிப்பதற்கு உறுதிபூண்டுள்ள ஊழியர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய பாடுபட்டுள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது.
‘கொரோனா வைரஸ் உலகெங்கிலும் உள்ள அனைத்து துறைகளையும் மோசமாகப் பாதித்து வரும் இந்த சூழலில் எமது நிறுவனம் இவ்வாறான ஆங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதன் மூலம் புலப்படுவது என்னவென்றால் எமது பணியாளர்களைச் செயல்படுத்துவதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் நிறுவனத்தின் பணி பாராட்டப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஊழியர்கள் நம்பகமான பணிச்சூழலை உருவாக்க முடிந்தால் எந்த வர்த்தகத்திலும் சிறந்த வணிக செயல்திறனை அடைய முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த மதிப்பீடுகள் எங்கள் சேவை கலாச்சாரத்தின் தரம் மற்றும் தனித்துவத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.’ என HNB Finance PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதன் மூலம், நிறுவனங்களின் செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டு, பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நெகிழ்வான பணி அட்டவணையை அறிமுகப்படுத்தியதுடன், நிலைக்கு ஏற்ப வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற சரியான நேரத்தில் மாற்றங்களைச் செய்தது. கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின்படி, மிகக் குறைவான ஊழியர்கள் மட்டுமே அத்தியாவசிய வேலைக்குச் சமூகமளித்தனர்.
நிறுவனம் அனைத்து ஊழியர்களின் மன ரீதியான நல்வாழ்வைப் பராமரிக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது, ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல், தொழில்நுட்ப அறிவுறுத்தல் அமர்வுகளைப் பயன்படுத்துதல் மற்றும் Online கூட்டங்களை ஏற்பாடு செய்தல், கொரோனா வைரஸால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை மேற்கொண்டது. வர்த்தகத் துறையில் ஒட்டுமொத்த சரிவைச் சந்தித்த போதிலும், HNB Finance எந்த ஊழியருக்குமான சலுகைகளையும் குறைக்காமல் பார்த்துக் கொண்டது.
HNB FINANCE தற்போதுள்ள வர்த்தகங்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தியது மற்றும் தொழிலாளர் உற்பத்தித்திறனை மேம்படுத்த உற்பத்தித்திறனை அதிகரித்தது, மேலும் இந்த கடினமான காலங்களில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு கூடுதல் நிதி உதவி, பயிற்சி மற்றும் மேம்பாட்டு ஆதரவை வழங்கியது.
HNB FINANCE 2017ல் ஒரு முன்னணி முதலாளியாக அங்கீகரிக்கப்பட்டது மற்றும் 2017இல் பணிபுரிவதற்கு சிறந்த இடத்திற்கான வெண்கல விருதை வென்றது. 2018ஆம் ஆண்டில் இது பெரிய அளவிலான தொழில்முனைவோருக்கான வெள்ளி விருதை வென்றது மற்றும் 2017இல் அதன் பணியாளர்களுக்கான Pride and Advocacy என்ற சிறப்பு விருதைப் பெற்றது. 2019ஆம் ஆண்டில், HNB FINANCE ஆனது ஆசியாவின் முதல் 25 நிறுவனங்களுள் தரவரிசைப்படுத்தப்பட்ட ஒரே இலங்கை நிதி நிறுவனமாக பெயரிடப்பட்டது. 2020ஆம் ஆண்டில், HNB Finance பெரிய வர்த்தகப் பிரிவில் பணிபுரிவதற்கு சிறந்த 40 இடங்களில் இடம்பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.
Great Place to Work என்ற எண்ணக்கருவானது, பணியிட கலாச்சாரம், ஊழியர் அனுபவம் மற்றும் தலைமைத்துவ நடத்தை ஆகியவை உகந்ததாகப் பராமரிக்கப்பட்டால், அதிக வருவாய் மற்றும் சேவை புத்தாக்கங்களை அடைய முடியும். Great Place to Work மதிப்பீட்டு செயல்முறை நிறுவனத்தின் ஊழியர்களின் சுயாதீன மதிப்பீட்டு செயல்முறையை உள்ளடக்கியது, இதில் பணியாளர் நம்பிக்கை, பணியாளர் புத்தாக்கங்கள் மற்றும் கலாச்சார தணிக்கை ஆகியவை அடங்கும். சுயாதீனமாகவும் பாரபட்சமின்றியும் தங்கள் நிறுவனத்தின் மீதான ஊழியர்களின் அணுகுமுறையின் அடிப்படையில் இந்த விருதுக்கு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
HNB Finance தொடர்பில்2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். Fitch Rating நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய நீண்டகால ‘A(lka)’ தரப்படுத்தலை நிறுவனம் பெற்றுள்ளது. 60 கிளைகள் மற்றும் 10 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE PLCஇனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்குள் சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME), லீசிங் சேவைகள், தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றது.