Site icon Eyeview Sri Lanka

HUTCH ரோமிங் சம்பியன்: இந்தியாவில் இடம்பெறும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை பார்வையிடும் வெற்றியாளர்

Share with your friend

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான HUTCH, அதன் சமீபத்திய பரபரப்பான ஊக்குவிப்பு பிரசாரத்தின் முடிவை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமது வாடிக்கையாளர்களுக்கு இந்தியா செல்வதற்கான இலவச விமான டிக்கெட்டை வெல்வதற்கும், கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை நேரடியாக பார்த்து மகிழவும் ஒரு நம்பமுடியாத வாய்ப்பை HUTCH வழங்கியுள்ளது.

“Hutch Roaming Promotion” எனும் ஒரு தனித்துவமான மற்றும் ஈர்க்கக்கூடிய ஊக்குவிப்பு பிரசாம், கடந்த செப்டம்பர் 05 முதல் செப்டம்பர் 28 வரை இடம்பெற்றது. பங்கேற்பாளர்கள் மிக எளிய விடயமான, HUTCH ரோமிங் திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் இதில் பங்குபற்ற முடியும்.

அந்த வகையில், கொழும்பைச் சேர்ந்த HUTCH வாடிக்கையாளரான F.S. சஹல் இதில் அதிர்ஷ்ட வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு, இந்தியா சென்று திரும்புவற்கான இலவச விமானப் பயணச்சீட்டை வென்றுள்ளார். கிரிக்கெட் மீதான அவரது ஆர்வம் மற்றும் சாகச மனப்பான்மை ஆகியன, கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை உற்சாகமாகவும் மிக அருகில் சென்று பார்ப்பதற்கான அனுபவத்தை பெறுவதற்குமான வாய்ப்பை பெறுவதற்கு அவருக்கு வழிவகுத்துள்ளது.

எப்போதும் புத்தாக்கமான சேவைகள் மற்றும் குறிப்பிடும்படியான அனுபவங்களை வழங்குவதன் மூலம் தனது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் HUTCH உறுதியாக உள்ளது. இந்த பிரசாரமானது, தமது வாடிக்கையாளர்கள் தொடர்பில் HUTCH கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஆர்வமான விடயங்களில் ஈடுபடவும், புதிய எல்லைகளை நோக்கிச் சென்று ஆராயவும், மெய்சிலிர்க்கும் அனுபவங்களை பெறவும் HUTCH வாய்ப்பளிக்கிறது.

HUTCH தனது வாடிக்கையாளர்களுடன் மேலும் நெருக்கமாக இணைவதற்கும், அவர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்குவதற்கும் இது போன்ற பல்வேறு விடயங்களை எதிர்காலத்திலும் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது.

Hutch வழங்கும் குறைந்த கட்டண ரோமிங் திட்டங்களைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு: https://hutch.lk/roaming-rates/


Share with your friend
Exit mobile version