Hytera இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு அதிநவீன டிஜிட்டல் மொபைல் ரேடியோ கட்டமைப்பை வழங்குகிறது

Home » Hytera இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு அதிநவீன டிஜிட்டல் மொபைல் ரேடியோ கட்டமைப்பை வழங்குகிறது
Share with your friend

Hytera, அதன் இலங்கைக் கூட்டாளரான Securatec உடன் இணைந்து, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் களத் தொடர்பாடல் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான 10 வருட ஒப்பந்தத்தை வெற்றிகரமாக வென்றுள்ளது. பரபரப்பான போட்டி நிலவிய கொள்முதல் ஒப்பந்தம் கோரல் நடைமுறைக்குப் பிறகு ஒப்பந்தம் வழங்கப்பட்டதுடன், இங்கு நிறுவனம் 1 ஆவது தெரிவாக உருவெடுத்தது. Securatec ஏற்கனவே இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு Hytera வின் அதிநவீன MD788 மொபைல் ரேடியோ சாதனங்கள் மற்றும் ஆன்டெனாக்கள் 150 ஐ வழங்கியுள்ளது. இது பல்துறை டிஜிட்டல் செயல்பாடுகளை வழங்குவதுடன், எந்த சூழ்நிலையிலும் தகவல் பரிமாற்றம், செயல்பாடுகள் மற்றும் சம்பவ பதில் நடவடிக்கை நேரங்களை மேம்படுத்துகிறது. இந்த சாதனங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட, புதிய ரேடியோ சாதனங்கள் நீடித்து உழைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதுடன், அவை பணி மேசையிலும் வெளிப் புலத்திலும் எளிதாக செயல்பட வல்லவை.

இந்த செயல்திட்டம் தொடர்பில் Hytera Sri Lanka வின் பொது முகாமையாளரான கெவின் சன் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “பொலிஸ் படையின் களத் தொடர்பாடல் வலையமைப்பை மேம்படுத்துவதற்காக, இலங்கை பொலிஸ் திணைக்களத்துடன் இந்த கூட்டுறவை ஏற்படுத்த முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிறந்த தெரிவுகளை வழங்குவதற்கு சக நிறுவனங்களுடன் போட்டியிடுவது கடினமாக இருந்தாலும், நாங்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. எமது விரிவான சட்ட அமுலாக்கப் பிரிவு மற்றும் பிற வாடிக்கையாளர்கள் பட்டியலில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ப்பது Hytera வில் எமக்கு மதிப்புக்குரிய ஒரு ஆதாரமாகும். எதிர்காலத்தில் இலங்கை பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

Securatec வழங்கிய புதிய Hytera டிஜிட்டல் ரேடியோக்கள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வாகனங்களில் பயன்படுத்தவும், தகவல் அனுப்பியவர்களுடனும், வெளிப்புலத்தில் உள்ள அலுவலர்களுடனும் மிகவும் திறம்பட அவர்கள் தொடர்புகொள்வதற்கும் உதவுகின்றன. மேலும், அனலொக் ரேடியோக்கள் போலல்லாமல், Hytera வின் தீர்வுகள் நெகிழ்வானவை என்பதுடன் டிஜிட்டல் மற்றும் அனலொக் ரேடியோக்கள் என இரண்டிலும் தொழிற்படுகின்றன. இது முழுமையான டிஜிட்டல் தகவல் தொடர்பாடல் உள்கட்டமைப்பிற்கு பொலிஸ் படையை மாற்றுவதால், மிகவும் பயனுள்ள காவல்துறை பணிக்கு அனுகூலமாக அமையும். Hytera மற்றும் அதன் இலங்கைக் கூட்டாளரான Securatec, எதிர்காலத்திலும் இலங்கை பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து செயற்பட உறுதிபூண்டுள்ளன. இது நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்கான தொடர்பாடல் உட்கட்டமைப்பை மேம்படுத்துகிறது.

பல்வேறு வகையான தொழில் துறைகள் மற்றும் பயன்பாடுகளில் டிஜிட்டல் ரேடியோ தொடர்பாடல் தீர்வுகளை செயல்படுத்துவதில் Hytera ஆழமான அனுபவத்தைக் கொண்டுள்ளது. Hytera வின் PoC3000 இயங்குதளம் மற்றும் PNC370 ரேடியோக்கள் மூலம் துருக்கியில் உள்ள வாடகை வண்டிகளுக்கு இடையேயான தகவல் தொடர்பாடல் முறைமையை நிறுவனம் மாற்றியமைத்தது. இது பாரம்பரிய வாடகை வண்டி முறைமைக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்து, தகவல் தொடர்பாடல் மற்றும் கண்காணிப்பு முறையை செயல்படுத்துகிறது. கஸகஸ்தானில், Hytera வின் PNC380 சாதனங்கள் மற்றும் Hytalk இயங்குதளம் கொண்ட விரிவான டிஜிட்டல் மல்டிமீடியா திறன் கொண்ட வலையமைப்பினை செயல்படுத்துவதன் மூலம் அகழ்வு நிறுவனமான JSC AK Altynalmas க்கு Hytera உதவியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின், துபாயில் உள்ள ஆடம்பர ஹோட்டலான Atlantis the Palm க்கு 3G/4G/Wi-Fi கட்டமைப்பில் Push-To-Talk தொழில்நுட்பமொன்றை Hytera வழங்கியுள்ளது. அபுதாபி பொலிஸ், Eurotunnel, கட்டார் எயார்வேஸ், ஹொங்கொங் சர்வதேச விமான நிலையம், Changsha Metro மற்றும் பல பிராந்திய மற்றும் உலகளாவிய நிறுவனங்களுக்கு உலகத் தரம் வாய்ந்த, அதிநவீன தீர்வுகளை Hytera வழங்கியுள்ளது.

இலங்கையில் Hytera PoC ரேடியோக்கள் பற்றிய மேலும் தகவல் விபரங்களுக்கு, jia.liu@hytera.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் சின்டி லீ அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

Hytera தொடர்பான விபரங்கள்

தொழில்ரீதியான மொபைல் ரேடியோ துறையில் ஒரு தொழில்துறை முன்னோடியாக, Hytera உலகில் வேகமாக வளர்ந்து வரும் வானொலி தகவல் தொடர்பாடல் நிறுவனங்களில் ஒன்றாகும். உலகெங்கிலும் 10 சர்வதேச ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் மற்றும் 90 க்கும் மேற்பட்ட பிராந்திய ஸ்தாபனங்களுடன் உலகில் வேகமாக வளர்ந்து வரும் வானொலி தகவல் தொடர்பாடல் நிறுவனமாக Hytera திகழ்ந்து வருவதுடன், சீனா மற்றும் ஸ்பெயினில் மூன்று தொழில்துறை 4.0 உற்பத்தி மையங்களுடன் 5 மில்லியன் அலகுகளை வருடாந்தம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட், தொழில்துறை 4.0 உற்பத்தி மையங்கள் துல்லியம் மற்றும் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்க முப்பரிமாண ஊடுகதிர் துல்லிய சோதனை மற்றும் ரோபோ செயல்பாட்டு சோதனையுடன் மிகவும் தன்னியக்க முறையில் இயங்குகின்றன. Hytera இன் தொழிற்சாலைகள் ISO 9001, ISO 14001 மற்றும் OHSA S1800 தரச்சான்று அங்கீகாரம் பெற்றவை. மேலும் கடுமையான Six Sigma முகாமைத்துவக் கட்டமைப்பைச் செயல்படுத்தியுள்ளன. இந்த தரம் நோக்கிய கலாச்சாரம், வெடிப்பு எதிர்ப்பு தயாரிப்பு சான்று அங்கீகாரங்களான ISO/IEC-80079-34, IP67 மற்றும் IP68 மற்றும் அமெரிக்க இராணுவத்தின் MIL-STD-810F  தரநிலைகளை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை Hytera தயாரிக்க உதவுகிறது.

Securatc தொடர்பான விபரங்கள்

Securatec குழுமம் என்பது 100% இலங்கைக்குச் சொந்தமான நிறுவனங்கள் குழுமமாகும். இது இராணுவம் மற்றும் சட்ட அமுலாக்கத்துடன் தொடர்புடைய வர்த்தக வணிகத்தில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது. Securatec, வர்த்தகம், பொறியியல், பாதுகாப்பு, தொலைதொடர்பாடல், ஏற்றுமதி, விவசாயம் மற்றும் பெருந்தோட்டங்கள், அகழ்வு உட்பட பன்முகப்படுத்தப்பட்ட துறைகளில் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: