Eyeview Sri Lanka

Imperial கல்லூரியின் BLAZE, பல்கலைக்கழக விளையாட்டுகளில் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தூண்ட தயாராக உள்ளது

Share with your friend

Imperial வணிகக் கல்லூரி தனது 40ஆவது ஆண்டு விழாவை BLAZE 2025 மூலம் உற்சாகமாக கொண்டாடுகிறது. இந்நிகழ்வு கல்லூரியின் முக்கிய மதிப்புகளான மேன்மை, ஒற்றுமை மற்றும் இளமையின் துடிப்பான ஆற்றலை வெளிப்படுத்துகிறது. BLAZE 2025 ஒரு புதிய, தீவிரமான மற்றும் மறக்க முடியாத அனுபவமாகவும் கல்லூரியின் பாரம்பரியத்தையும் எதிர்கால வாக்குறுதியையும் பிரதிபலிக்கும் வகையில் அமைகிறது.

BLAZE என்பது ஆர்வம், செயல்திறன் மற்றும் விடாமுயற்சியின் உற்சாகமான கொண்டாட்டமாகும். இது இலங்கையின் 25 முன்னணி பல்கலைக்கழகங்களை ஒன்றிணைத்து, மூன்று வார இறுதிகளில் ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் விளையாட்டு திருவிழாவாகும். கிரிக்கெட், ரக்பி, கூடைப்பந்து மற்றும் கால்பந்து போன்ற பிரபலமான விளையாட்டுகளை உள்ளடக்கிய இந்நிகழ்வு, மாணவ விளையாட்டு வீரர்களுக்கு பிரகாசிக்க ஒரு தளமாகவும், அவர்களுக்கிடையிலான நட்பை வளர்க்கவும் பல்கலைக்கழகத்தின் பெருமையை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைகிறது. புகழ்பெற்ற விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் இந்த BLAZE, அதி உற்சாகத்தையும் மறக்க முடியாத தருணங்களையும் அனைவருக்கும் வழங்கவும் உறுதியளிக்கிறது.

BLAZE, 2025 ஜூன் 21 ஆம் திகதி ஆரம்பமாகிறது. முதல் நாளான ஜூன் 21ஆம் திகதி கிரிக்கெட் போட்டிகள் விமானப்படை மைதானம் மற்றும் SLDCC மைதானத்திலும், இறுதி கிரிக்கெட் போட்டி ஜூன் 22 ஆம் திகதி SLDCC மைதானத்திலும் நடைபெறும். அடுத்த வார இறுதியான ஜூன் 28ஆம் திகதி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரக்பி போட்டிகள் நடைபெறும். மூன்றாவது வார இறுதியான ஜூலை 5ஆம் திகதி புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் கூடைப்பந்து போட்டிகளும், ஜூலை 6ஆம் திகதி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கால்பந்து போட்டிகளும் பிரமாண்ட இறுதி நிகழ்வும் நடைபெறும்.

Imperial வணிகக் கல்லூரியின் மாணவர் நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவுத் தலைவர் சனுஷா ஜயவர்தன, கருத்து தெரிவிக்கையில், “கல்வியும் அனுபவமும் இணைந்து செல்லும் இன்றைய உலகில், இலங்கையின் முன்னணி தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான Imperial வணிகக் கல்லூரி பெருமையுடன் நிமிர்ந்து நிற்கிறது. எதிர்கால தலைவர்களை வளர்ப்பது, வலுவான கல்விப் பாரம்பரியத்தை உருவாக்குவது மற்றும் துடிப்பான மாணவர் சமூகத்தை வளர்ப்பது ஆகியவற்றில் நாற்பது ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், புதிய, தீவிரமான மற்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வான BLAZE மூலம் இந்த அற்புத பயணத்தை இதுவரை இல்லாத அளவு பிரமாண்டமாக கொண்டாட விரும்பினோம்.” எனக் குறிப்பிட்டார். 

சனுஷா ஜயவர்தன மேலும் கருத்து தெரிவிக்கையில், “BLAZE ஒரு விளையாட்டு போட்டி மட்டுமல்ல, இது ஒரு தனித்துவமான அனுபவமாகும். இது விளையாட்டு, உற்சாகம் மற்றும் கொண்டாட்டத்தின் திருவிழாவாகும். அணிகளின் கோஷங்கள், உணவு கடைகள், உற்சாகமூட்டும் பார்வையாளர்கள் கூட்டம் மற்றும் ஆச்சரியமிக்க பரிசுகள் என அனைத்தையும் BLAZE உள்ளடக்கியது. 25 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில், போட்டிகள் தீவிரமாகவும் ஆற்றல்கள் ஒப்பற்றதாகவும் மற்றும் நினைவுகள் விலைமதிப்பற்றவையாகவும் இருக்கும்!” எனக் குறிப்பிட்டார்.

Imperial College of Business Studies 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்நிறுவனம் Colombo Business School என ஆரம்பிக்கப்பட்டு காலப்போக்கில் கல்வி மற்றும் தொழில்முறை சிறப்புகளுக்காக பிரபலமடைந்த இலங்கையின் மிக மதிப்புமிக்க வணிக கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. University of the West of Scotland, Queen Margaret பல்கலைக்கழகம் மற்றும் ஸ்கொட்டிஷ் தகுதி ஆணையகம் போன்ற உலகளாவிய பங்காளர்களுடனான பலமான கூட்டணிகள் மற்றும் 50,000க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களைக் கொண்டு, Imperial கல்லூரி தொடர்ந்து மாணவர்களுக்கு கனவு காணவும் நம்பிக்கை கொண்டு மாற்றமடையவும் உதவும் என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது.


Share with your friend
Exit mobile version