அண்மையில் பேர்மிங்ஹாமில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்காக வெண்கலப் பதக்கத்தை வென்ற மல்யுத்த வீராங்கனை நெத்மி அஹிம்சா பெர்னாண்டோ அவர்கள், இவ்விளையாட்டின் மீதான தனது ஆர்வத்தைத் தொடர ஊக்கமளிக்கும் வகையில், ரூபா 1 மில்லியன் பணப் பரிசை INSEE சீமெந்து நிறுவனம் வழங்கியுள்ளது. நெத்மியின் சமீபத்திய சாதனைகளுக்கு வழங்கியுள்ள பங்களிப்பைப் பாராட்டி, அவரது பயிற்சியாளரான சுரங்க குமார அவர்களும், ரூபா 250,000 பணப் பரிசைப் பெற்றுள்ளாhர்.

2024 ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான நெத்மியின் அபிலாஷைக்கு ஆதரவளிப்பதாக INSEE சீமெந்து நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதேவேளையில், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் அவரது புதிய வீட்டை மனுசத் தெரண முயற்சியுடன் இணைந்து பூர்த்தி செய்வதற்கான ஒட்டுமொத்த சீமெந்துத் தேவையையும் வழங்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது.