INSEE நிறுவனம் கொவிட் பதில் நடவடிக்கை செயற்பாடுகளை தீவிரமாக்க உதவுகின்றது

Share with your friend

இலங்கையில் சீமெந்து தயாரிப்புக்களுக்கான சந்தை முன்னோடியான INSEE Cement, கொவிட்-19 தொற்றுநோயின் தற்போதைய கடுமையான அலையைச் சமாளிக்க தேசத்திற்கு உதவும் வகையில் கடந்த இரண்டு மாதங்களாக தனது கொவிட் பதில் நடவடிக்கை செயற்பாடுகளை தீவிரமாக்கி, அதிகரித்துள்ளது. அதன் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு மற்றும் நிலைபேண்தகமை அணி மூலம், உயிர்களைக் காப்பதற்காக கொவிட் நோயாளர்கள் மற்றும் 24 மணி நேரமும் ஓயாது உழைக்கின்ற முன்கள மருத்துவ அணிகளுக்கு நிவாரணம் வழங்க, ஐந்து வெவ்வேறான முயற்சிகளில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தத் நிகழ்ச்சித்திட்டங்களில் மருத்துவ உபகரணங்கள் நன்கொடை, புதிய படுக்கைகள் கிடைக்க உதவுதல், பல்வேறு மருத்துவமனைகளின் கட்டிடம் மற்றும் விஸ்தரிப்புப் பணிகளுக்குத் தேவையான சீமெந்தை வழங்குதல் மற்றும் மாகாண அதிகாரிகள் மற்றும் தேசிய அரசாங்கத்திற்கு கணிசமான அளவு முகமூடிகள் மற்றும் கை சுத்திகரிப்பான்கள் (சானிடைசர்கள்) தொகுதியை நன்கொடையளித்தல் போன்ற செயற்பாடுகள் அடங்கியுள்ளன.

இந்த முயற்சிகள் தொடர்பில் INSEE Cement நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான குஸ்டாவோ நவாரோ அவர்கள் கருத்து வெளியிடுகையில், “கள நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்த பிறகு, நாடு கணிசமான சவால்களை எதிர்கொள்ளும் என்பதை, குறிப்பாக டெல்டா மாறுபாடு பரவ ஆரம்பித்த கணத்தில் நாங்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்தோம். இலங்கையின் சந்தை முன்னோடியாகவும் ஒரேயொரு ஒருங்கிணைந்த சீமெந்து உற்பத்தியாளராகவும் எங்கள் நிலைப்பாடு என்பது எங்களால் உதவ முடிகின்ற சமயங்களில் நிவாரணத்தையும், தேவையான உதவிகளையும் வழங்குவது எங்களது தார்மீகக் கடமை மற்றும் உண்மையான விருப்பம் என்றே அர்த்தம் கொள்ள முடியும். நாம் கணிசமாக பங்களிப்பு செய்யக்கூடிய ஒரு வழியாக, புதிய சிகிச்சை வசதிகளை உருவாக்குவதற்கும், ஏற்கனவே காணப்படும் சிகிச்சை வசதிகளை விஸ்தரிப்பதற்கும் தேவையான சீமெந்தை வழங்குவது காணப்படுகின்றது. உண்மையில், நாங்கள் பல தொகுதி சீமெந்துப் பைகளை பங்களித்து, அதன் மூலமாக பல மருத்துவமனைகளில் கொவிட் சிகிச்சைக்காக புதிய சிகிச்சை விடுதிகளை நிர்மாணிப்பதற்கு எமது நிபுணத்துவ ஆதரவையும் வழங்க முடிந்துள்ளமையையிட்டு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இன்னும் ஒரு படி மேலே சென்று, மருத்துவமனைகள் மற்றும் அரசாங்கத்திற்கு உபகரணங்கள் மற்றும் நுகர்பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளோம். 2020 ஆம் ஆண்டில் நாம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்குப் புறம்பாக, 2021 ஆம் ஆண்டில் இவை அனைத்தையும் நாங்கள் சாதித்துள்ளோம். எங்களால் முடிந்தவரை கொவிட்டுக்கு எதிரான தேசியப் போராட்டத்திற்கு தொடர்ந்து உதவத் திட்டமிட்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

கொவிட் பதில் நடவடிக்கை முயற்சிகள் தொடர்பாக INSEE Cement நிறுவனம் முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளில், கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைக் கவனித்து சிகிச்சையளிப்பதற்கு மிகவும் முக்கியமான தேவையாகக் காணப்படுகின்ற ஒட்சிசன் உட்செலுத்திப் பம்புகள் பலவற்றை நன்கொடையாக வழங்கியதும் அடங்கியுள்ளது. இது தவிர, INSEE நிறுவனத்தின் ஆலைகளுள் ஒன்று அமைந்துள்ள புத்தளம் பிராந்தியத்தை இலக்காகக் கொண்டு, தற்போது முன்னெடுத்து வருகின்ற ஒரு நீண்ட கால அடிப்படையிலான சமூக அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாக புத்தளம் ஆதார மருத்துவமனையின் கொவிட் சிகிச்சை விடுதிக்கு 50 மருத்துவ படுக்கைகளையும் INSEE Cement வழங்கியுள்ளது.

மேலும், குறிப்பாக சிசிச்சையின் மூலமாக குணமடைந்து வருகின்ற நோயாளர்களுக்காக, வெறும் 10 நாட்களில் 150 படுக்கைகளைக் கொண்ட சிகிச்சை விடுதியை நிர்மாணித்த கண்டி தேசிய மருத்துவமனையின் முயற்சிக்கு அதரவாக அதற்கு உயர் ரக சங்ஸ்தா சீமெந்து நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது. மேலும், வெலிசறை, ராகமை, கொழும்பு தெற்கு மருத்துவமனை மற்றும் திவுலப்பிட்டிய ஆதார மருத்துவமனை ஆகியவற்றில் சுவாச வியாதி தொடர்பான சிகிச்சை வசதிகளுக்கு உதவுவதற்காக தேசிய மருத்துவமனைக்கு சங்ஸ்தா சீமெந்து நன்கொடையாக வழங்கப்பட்டது. மிக அண்மையில், 35,000 முகக்கவசங்கள் மற்றும் 1,000 கை சுத்திகரிப்பான் போத்தல்களை மாகாண அரச சபைகளுக்கு நன்கொடையாக வழங்கியதுடன், 15,000 முகக்கவசங்கள் மற்றும் 250 கை சுத்திகரிப்பான் போத்தல்களை மத்திய அரசாங்கத்திற்கும் நன்கொடையாக வழங்கத் தேவையான ஏற்பாடுகளை INSEE Cement மேற்கொண்டது. 

INSEE Cement நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் புத்தாக்கங்கள் ஆகியவற்றுக்கான நிறைவேற்று அதிகாரம் கொண்ட துணைத் தலைமை அதிகாரியான ஜான் குனிக் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “பொறுப்புணர்வு மிக்க ஒரு வர்த்தக நிறுவனம் என்ற வகையில், “வாழ்வுக்கான நிர்மாணம்” என்ற முக்கியமான விழுமியத்தால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற INSEE நிறுவனத்தின் தற்போதைய பல்வேறு சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் மீள் வளர்ப்புச் செயற்திட்டங்கள் இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் பங்களிப்பாற்றுகின்றன. இந்நிறுவனம் புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்புடனான முயற்சிகளிலும் முன்னிலை வகித்து வருவதுடன், இலங்கையின் சீமெந்து தொழிற்துறையின் தராதரங்களை மேம்படுத்துவதில் தீவிரமாக பங்கு வகிக்கிறது. அத்துடன், அதன் ஒட்டுமொத்த தயாரிப்பு வரிசையின் திறன்கள் மற்றும் தரத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் மேம்பாடுகளை அறிமுகப்படுத்தி வருகின்றது,” என்று குறிப்பிட்டார்.INSEE Cement அல்லது Siam City Cement (Lanka) Limited, 1969 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நிறுவப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான Siam City Cement Public Company Limited (SCCC) இன் ஒரு உறுப்பு நிறுவனமாகும். INSEE Cement நிறுவனம் INSEE வர்த்தகநாமத்தின் கீழ், சங்ஸ்தா, மகாவலி மெரின், மகாவலி மெரின் பிளஸ், INSEE ரெபிட் ஃபுளோ, INSEE ரெபிட் ஃபுளோ பிளஸ் மற்றும் INSEE எக்ஸ்ட்ரா சீமெந்து போன்ற சீமெந்து வகைகளை தயாரித்து வருகின்றது. இலங்கை பசுமை கட்டிட சபையிடமிருந்து பசுமை அடையாள சான்று அங்கீகாரத்தைப் பெற்ற முதல் ‘பசுமை சீமெந்து தயாரிப்பு’ INSEE சீமெந்தாகும். இந்த நிறுவனம் இலங்கையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரேயொரு சீமெந்து உற்பத்தி நிறுவனமாகும். 


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply