INSEE சீமெந்து நிறுவனம் LMD சஞ்சிகையின் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனங்கள் பட்டியலில் மீண்டும் ஒரு முறை இடம்பெற்றுள்ளது

Share with your friend

இலங்கையில் சந்தை முன்னிலையாளரும், ஒரேயொரு ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தியாளருமான INSEE சீமெந்து நிறுவனம், LMD சஞ்சிகையின் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனங்கள் 2022 பட்டியலில் மீண்டும் மதிப்பிற்குரிய ஸ்தானத்தைப் பெற்றுள்ளது. “முகாமையாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பணிமட்டத்தில் உள்ளவர்கள்” உடன் மேற்கொள்ளப்பட்ட, எவ்விதமான வற்புறுத்தலோ, பதில்களை வழங்குவதற்கான துணையோ இன்றிய நேர்காணல்கள் மூலமாக, இதில் பதிலளித்த ஒவ்வொருவரும், ஏனைய பல கேள்விகள் அடங்கலாக, இலங்கையில் உள்ள சிறந்த 3 நிறுவனங்களுக்கான அவர்களின் தெரிவுகளை பெயரிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப்புள்ளி விபரங்களை AC Nielsen நிறுவனம் முன்னெடுத்திருந்ததுடன், அந்த ஆய்வின் அடிப்படையில் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. LMD சஞ்சிகையின் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனங்களின் தரவரிசை இலங்கையின் வர்த்தகத் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற மிகவும் மதிப்புமிக்க பாராட்டுக்களில் ஒன்றாகும். INSEE சீமெந்து நிறுவனம் சந்தையில் முன்னிலை வகித்து வருவதை இத்தரவரிசை பிரதிபலிக்கிறது.

இந்த சாதனை குறித்து பெருமகிழ்ச்சியுடன் கருத்து வெளியிட்ட INSEE சீமெந்து நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும்/பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நந்தன ஏகநாயக்க அவர்கள், “2022 இல் மிகவும் மதிக்கப்படும் நிறுவனங்கள் பட்டியலில் எங்களின் தரவரிசையில் விசுவாசமும் நம்பிக்கையும் முக்கிய பங்கு வகித்துள்ளன. கடந்த பல ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில், வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமம் என்ற எமது உணர்வை நாம் நிரூபித்துள்ளதுடன், முன்னெப்போதும் முகங்கொடுத்திராத காலகட்டங்களில் உள்ளூர் கட்டுமானத் துறையை தனியொரு நிறுவனமாக தொடர்ந்து வழிநடத்திச் சென்றுள்ளோம். மேலும், INSEE சங்ஸ்தா சீமெந்து 100% உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரேயொரு சீமெந்து தயாரிப்பாக இருப்பதால், அதிக ஏற்றத்தாழ்வு நிலவும் சந்தையில் எங்களால் விலைகளை தொடர்ந்தும் பேண முடிந்துள்ளது. வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு இது உதவியுள்ளது. இந்த விசுவாசத்தை தொடர்ந்து 11 ஆவது முறையாக வருடத்தின் மிகச்சிறந்த வீடமைப்பு மற்றும் கட்டுமான வர்த்தகநாமமாக மக்களின் அமோக வாக்கினைப் பெற்றுள்ளமை பிரதிபலிப்பதுடன், LMD ஆல் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மிகவும் விரும்பப்படும் சீமெந்து வர்த்தகநாமமாகவும் எமக்கு வாக்களிப்பட்டுள்ளது. புத்தாக்கங்களைத் தொடரவும், ‘வாழ்வுக்காகக் கட்டியெழுப்பல்’ என்ற எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம்,” என்று குறிப்பிட்டார்.   

உலகளாவிய தொற்றுநோய் மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி ஆகிய இரண்டின் போதும்,  INSEE சீமெந்து அதன் வரலாற்றில் மிகவும் சவாலான மற்றும் ஏற்றத்தாழ்வான இயக்க சூழல்களுக்கு மத்தியில், தங்குதடையில்லா விநியோகத்தை உறுதி செய்வதற்காக, நாட்டின் ஒரேயொரு ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தியாளராக தனது ஸ்தானத்தை மேம்படுத்தியுள்ளது. 2021 இல் ஏற்பட்ட சீமெந்து தட்டுப்பாட்டின் போது, INSEE ஆனது 24 மணி நேரமும் அதிகபட்ச உற்பத்தித் திறனுடன் இயங்குவதன் மூலம் சந்தைக்கு போதுமான அளவில் சீமெந்து விநியோகங்களை உறுதிசெய்தது. மொத்த சந்தை தேவையில் 40% க்கும் அதிகமாக உள்ளூரிலேயே பூர்த்திசெய்து, இலங்கையின் கட்டுமானத் தொழிற்துறையில் விலைகளை ஸ்திரப்படுத்தவும் வணிக தொடர்ச்சியை ஆதரிக்கவும் உதவியுள்ளது. 

INSEE சீமெந்து நிறுவனத்தின் சந்தை-முன்னணி ஸ்தானத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று, ஒத்துழைப்புக்கான அதன் ஓயாத அர்ப்பணிப்பாகும். இதன் விளைவாக, நிறுவனம் பல ஆண்டுகளாக கற்றல் மற்றும் புத்தாக்க கலாச்சாரத்தை வளர்ப்பதில் ஒரு வலுவான நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளது, இது INSEE இன் சொந்த தயாரிப்புகள் மற்றும் தொழில்துறை முழுவதும் தரம் மற்றும் செயல்திறனின் முன்னேற்றத்திற்கு நேரடியாக பங்களித்துள்ளது. இந்த விடயத்தில் நிறுவனத்தின் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்று “INSEE i2i Collaboration Space” எனப்படும் INSEE இன் தனிமுத்திரை பதித்த தராதரங்களுக்கு இணங்க, தொழில்துறை முழுவதும் புதிய தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளின் மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புக்கான பிரத்தியேகமான மையமாகும். மிக அண்மையில், INSEE சீமெந்து பல்வேறுபட்ட பங்குதாரர் குழுக்களுடன் இணைந்து புதிய SLS 1697 தரநிலையை ஸ்தாபித்தது. இது போர்ட்லண்ட் கலப்பு சீமெந்துக்கான பிரித்தானிய தரநிலைகளுக்கு சமமானது என்பதுடன், இது இலங்கையில் இத்தொழிற்துறையில் மற்றுமொரு முதன்முதலான சிறப்பம்சமாகும்.

INSEE சீமெந்து நிறுவனம் தரம் மற்றும் புத்தாக்கம் தொடர்பாக இலங்கையின் சீமெந்து மற்றும் கட்டுமானத் தொழில்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் அதேவேளையில், சமூக மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள ஒரு நிறுவனமாகும். இது சம்பந்தமாக பல விரிவான முயற்சிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நிறுவனமொன்றைப் பொறுத்த வரையில், சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு மிகவும் அடிப்படை என்று இந்நிறுவனம் நம்புவதுடன், இந்த கோட்பாடுகள் அதன் குழுமவாரியான நிலைபேற்றியல் கொள்கை மற்றும் வேலைத்திட்டமான INSEE இன் நிலைபேற்றியல் இலட்சியம் 2030 இல் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் நிலைபேற்றியல் முயற்சிகள் ஐந்து தூண்களின் கீழே இடம்பெறுகின்றன: காலநிலை மற்றும் எரிசக்தி, பல்லுயிர் மற்றும் நீர், மற்றும் சுழற்சிப் பொருளாதாரம் என அனைத்தும் பரஸ்பர நன்மை பயக்கும் சமூகம் மற்றும் பங்குதாரர்களின் ஈடுபாடு மற்றும் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தராதரங்களின் வலுவான அத்திவாரம் ஆகியவற்றின் உந்துசக்தியுடன் முன்னெடுக்கப்படுகின்றன.

INSEE சீமெந்து நிறுவனம் தனது நிலைபேற்றியல் இலட்சியம் 2030 இன் மூலம், அதன் பேரார்வம் மிக்க சமூக மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளை அடைவதற்கான உறுதியான காலக்கெடுவை தெளிவாக திட்டமிட்டுள்ளது. இதில் பாரிஸ் மாநகர காலநிலை உடன்படிக்கையை ஆதரிப்பதற்கு திட்டவட்டமான நடவடிக்கை எடுப்பது உட்பட, அதன் 2020 அடிப்படை புள்ளி விபரங்களிலிருந்து 15% காபன் குறைப்பு மற்றும் பல பேரார்வம் மிக்க முயற்சிகள் அடங்கியுள்ளன. தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவும் காலப்பகுதியில் பல சமூக நலத் திட்டங்களில் INSEE நிறுவனம் ஈடுபட்டுள்ளது. உலர் உணவுகள், மருத்துவப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள், பராமரிப்புப் பொதிகளை நன்கொடையாக அளிக்கின்றமை, சீமெந்து நன்கொடை மற்றும் எவ்விதமான கட்டணங்களுமின்றி பொறியியல் ஆலோசனை சேவைகளை வழங்குவதன் மூலம் புதிய மருத்துவமனைகளை கட்டியெழுப்புதல் என பாரிய பங்களிப்பு செய்துள்ளது. இவை அளைத்தும் சமூகத்தில் அனைவரின் உள்ளங்களிலும், எண்ணங்களிலும் நாட்டின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மதிப்பிற்குரிய நிறுவனமாக குடிகொள்ளும் வகையில் INSEE நிறுவனத்தை மாற்றியுள்ளன.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply