INSEE Cement உலகளவில் பாராட்டப்பட்ட சதுப்புநில மறுசீரமைப்பு திட்டத்தின் அடுத்த கட்டத்தை ஜூன் மாதம் தொடங்கவுள்ளது

Home » INSEE Cement உலகளவில் பாராட்டப்பட்ட சதுப்புநில மறுசீரமைப்பு திட்டத்தின் அடுத்த கட்டத்தை ஜூன் மாதம் தொடங்கவுள்ளது
Share with your friend

இலங்கையின் முன்னணி மற்றும் ஒரேயொரு ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தியாளரான INSEE Cement தனது புத்தளம் சதுப்புநில மறுசீரமைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தை அருவாக்காட்டில், சீரக்குளிய கடல் நீரேரியில் 2 ஹெக்டேயர் பரப்பளவில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. முதற்கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் மேலும் 01 ஹெக்டேயர் சதுப்புநிலக் காடுகளை மறுசீரமைப்பதை இலக்காகக் கொண்டு, அடுத்த கட்டத் திட்டத்தை காலியில் ஜூன் மாதம் தொடங்குவதற்கு INSEE Cement திட்டமிட்டுள்ளது.

INSEE Cement தொழிற்சாலைகள் அவற்றின் சுற்றுப்புற நிலம் மற்றும் நீர் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து பல ஆண்டுகளாக INSEE Sustainability Ambition 2030 இன் முக்கிய தூணாக இருப்பதற்கு வழி வகுத்துள்ளது. இது ஒரு விரிவான, நீண்ட கால மற்றும் குழும வாரியான மூலோபாயமாகும். இது நிறுவனமானது ஐக்கிய நாடுகளின் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகள் (UN SDG), Science Based Targets initiative – SBTi) மற்றும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை சமநிலைப்படுத்துவதற்கான பிற உலகளாவிய மற்றும் தொழில்துறை நோக்கங்களுடன் ஒத்திசைவதை உறுதி செய்கிறது. பல்லுயிர் மற்றும் நீர் என்பது INSEE Sustainability Ambition 2030 இன் முக்கியமான தூணாகும், ஏனெனில் இது INSEE Cement இன் கல் அகழ்விடங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்து, ஈடுசெய்வதன் மூலம் பல்லுயிர் மீது நிகர நேர்மறை தாக்கத்தை (Net Positive Impact – NPI) ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சதுப்புநிலக் காடுகள் தரை-கடல் இடைமுகத்தில் முக்கியமான வாழ்விடத்தை உருவாக்குகின்றன; பல வணிக இனங்கள் மற்றும் இளம் பாறை மீன்கள் உட்பட பல்வேறு தரை மற்றும் கடல் உயிரினங்களுக்கு உணவு, இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் மற்றும் விதை நாற்று தளங்களை வழங்கும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளாகும். மிக முக்கியமாக, சதுப்புநிலங்கள் மரங்களை விட நான்கு மடங்கு காபனைப் பிரிக்கின்றன, மேலும் உலகளாவிய சமுத்திரங்களுக்கு 10% க்கும் அதிகமான அத்தியாவசிய சேதன காபனை வழங்குகின்றன. இலங்கையில் சதுப்புநிலப் பரப்பு 15,000 ஹெக்டேயருக்கு அதிகமாக இருப்பதாக நம்பப்படும் அதேவேளை, 1980 – 2005 க்கு இடையில் ஏறத்தாழ 25% சதுப்புநில வாழ்விடங்கள் அழிவடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் மட்டும் மீன்வளர்ப்பின் விரிவாக்கம் காரணமாக ஏறக்குறைய 3000 ஹெக்டேயர் சதுப்புநிலக் காடுகள் அழிவடைந்துள்ளன.

கடந்த தசாப்தத்தில், INSEE Cement நிறுவனம் புத்தளம் மற்றும் காலியில் உள்ள தனது உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அருகாமையிலுள்ள கரையோரப் பகுதிகளில் 2023 ஆம் ஆண்டளவில் 66 ஹெக்டேயர்களில் சதுப்பு நிலக் காடுகளை மறுசீரமைக்கும் நிலைபேற்றியல் இலட்சியத்தின் கீழ் இது வரையில் 01 ஹெக்டேயர் பரப்பளவை மீட்டெடுத்துள்ளதுடன், சதுப்புநிலக் காடுகளை மறுசீரமைக்கும் பல நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதில் கொக்கல ஏரியை ஒட்டிய திட்டங்களும் அடங்கும். இதில் உயிரியல் ரீதியாக வேறுபட்ட சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பு 21 தீவுகள் மத்தியில் 5,500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பரந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த, உள்ளூர் மற்றும் குடியிருப்புப் பறவைகளுக்கு அடைக்கலம் அளிக்கிறது.

“INSEE Cement பல்லுயிர் முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பிற்கான தனது வலுவான அர்ப்பணிப்பை பல ஆண்டுகளாக நிரூபித்து வந்துள்ளது,” என்று INSEE Cement நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான நந்தன எக்கநாயக்க அவர்கள் கூறினார். “நாங்கள் செயல்படும் சமூகங்களின் வாழ்வாதாரம், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் இந்த முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும் தற்போது எமது Sustainability Ambition 2030 என்ற திட்டத்தினூடாக மூலோபாயரீதியாக திட்டமிட்டு, முதலிட்டு மற்றும் பாதுகாக்க எம்மால் முடிகின்றது. இது வரையில் எங்கள் முயற்சிகளின் வெற்றியால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பசுமையான, இன்னும் நிலைபேண்தகு எதிர்காலத்திற்காக நமது இழந்த வாழ்விடங்களை மறுசீரமைப்பதில் நாம் தொடர்ந்தும் கண்காணித்து, அறிவித்து, பங்களிப்போம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

சதுப்புநில மறுசீரமைப்பு என்பது INSEE Cement நிறுவனத்தின் உலகளாவிய ரீதியில் பாராட்டப்பட்ட பல்லுயிர் பெருக்க முயற்சியாக அமைந்த அருவாக்காட்டிலுள்ள கல் அகழ்வு மறுவாழ்வுத் திட்டத்தின் விரிவாக்கமாகும். இலங்கையின் மிகவும் அபிமானம் பெற்ற கலப்பு சீமெந்து வர்த்தகநாமமான INSEE SANSTHA இன் உற்பத்திக்காக புதிய, உயர்தர சுண்ணாம்புக் கற்கள் இங்கிருந்து பெறப்படுகின்றன. INSEE இன் ஒட்டுமொத்த பல்லுயிர் பாதுகாப்பு முயற்சிகள் இதுவரை 132 ஹெக்டேயர்களுக்கு மேல் கல் அகழ்வு நிலம், மழைக்காடுகள், சதுப்புநிலங்கள் மற்றும் பவளப்பாறைகள் உட்பட பல சுற்றுச்சூழல் அமைப்புகளின் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வுக்கு வழிவகுத்துள்ளன.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: