இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE Cement, தனது வருடாந்த INSEE வியாபார பங்காளர் விருதுகள் 2022 நிகழ்வை ஐந்து நட்சத்திர ஹோட்டலான சினமன் பெந்தோட்டை பீச் ஹோட்டலில் அண்மையில் வெகு விமரிசையாக நடாத்தியுள்ளது. நாடெங்கிலுமுள்ள தனது வியாபார பங்காளர்களை அழைத்து, கொண்டாட்டமும், தோழமையும் நிறைந்த இரவுப் பொழுதை அவர்கள் இனிமையாகப் போக்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆண்டு முழுவதும் சவால்களை எதிர்கொண்ட போதிலும் அவர்களின் ஓயாத விற்பனை செயல்திறனுக்காக பிராந்திய மற்றும் தேசியரீதியில் வியாபார பங்காளர்களை அங்கீகரித்து வெகுமதி அளிக்கும் வகையில், நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, நிர்வாக சபை மற்றும் முகாமைத்துவத்தின் ஆதரவுடன் விருதுகள் வழங்கப்பட்டன. கடுமையான கொவிட் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விருந்தினர்களுடன், நாடளவிலுள்ள INSEE Cement வியாபார பங்காளர்களின் அயராத முயற்சிகளை கௌரவிக்கும் அதே வேளையில், புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் ஒரு மறக்கமுடியாத இரவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ய நிறுவனத்தால் முடிந்துள்ளது.

இந்நிகழ்வில் INSEE Cement நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான குஸ்டாவோ நவாரோ அவர்கள் உரையாற்றுகையில், “இந்த ஆண்டு, தொலைநோக்கு மற்றும் செயல்திறன் மிக்க கண்ணோட்டம், பிராந்தியம் முழுவதிலும் உள்ள INSEE ஆலைகளின் பன்னாட்டு சுற்றுச்சூழல் கட்டமைப்பின் பக்கபலம் மற்றும் விசுவாசமான வியாபார பங்காளர்களின் வலுவான உள்ளூர் வலையமைப்பு ஆகியவற்றின் துணையுடன் INSEE Cement நிறுவனம் 2022 ஆம் ஆண்டை உங்களுடன் இணைந்து இன்னும் சிறப்பாகவும், பிரமாண்டமானதாகவும் மாற்றியமைப்பதற்காக எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுத்து, அதனை சமாளிப்பதற்கும் தயாராக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.
திரு. நவாரோ அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்ட வியாபார பங்காளர்கள் மத்தியில் மேலும் உரையாற்றுகையில் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கான தனது திட்டங்களையும் பகிர்ந்து கொள்ளத் தவறவில்லை. “எங்கள் தயாரிப்பு வரிசை மற்றும் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதன் மூலம், INSEE Cement நிறுவனத்தால் வாடிக்கையாளர்களின் அனைத்து கட்டுமானத் தேவைகளுக்கும் முழுமையான தீர்வை வழங்க முடியும். குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்த 2021 இல் உங்களின் அசைக்க முடியாத விசுவாசத்தால் நாங்கள் ஆதரிக்கப்பட்டதைப் போலவே, 2022 ஆம் ஆண்டில் சந்தையில் INSEE Cement நிறுவனம் 1 ஆவது ஸ்தானத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான உங்களின் உறுதியான கூட்டாண்மை மற்றும் அர்ப்பணிப்பு எமக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.
INSEE Cement அல்லது Siam City Cement (Lanka) Limited, 1969 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நிறுவப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான Siam City Cement Public Company Limited (SCCC) இன் ஒரு உறுப்பு நிறுவனமாகும். INSEE Cement நிறுவனம் INSEE வர்த்தகநாமத்தின் கீழ், சங்ஸ்தா, மகாவலி மெரின், மகாவலி மெரின் பிளஸ், INSEE ரெபிட் ஃபுளோ, INSEE ரெபிட் ஃபுளோ பிளஸ் மற்றும் INSEE எக்ஸ்ட்ரா சீமெந்து போன்ற சீமெந்து வகைகளை தயாரித்து வருகின்றது. இலங்கை பசுமை கட்டிட சபையிடமிருந்து பசுமை அடையாள சான்று அங்கீகாரத்தைப் பெற்ற முதல் ‘பசுமை சீமெந்து தயாரிப்பு’ INSEE சீமெந்தாகும். இந்த நிறுவனம் இலங்கையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரேயொரு சீமெந்து உற்பத்தி நிறுவனமாகும். அத்துடன் LMD சஞ்சிகையால் மிகவும் நன்மதிப்புப் பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.